அடிப்படை ஊதியத்துடன் அகவிலைபடியை வழங்க திட்டம்
புதுடில்லி : அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில் அடிப்படை ஊதியத்துடன் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை இணைத்து வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் இந்த முடிவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு வெளிவந்தால் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர். லோக்சபா தேர்தலுக்கு முன் இது குறித்த அறிவிப்பு வெளிவரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படியை 100 சதவீதம் வரை உயர்த்தியும், அதனை அடிப்படை ஊதியத்தொகையுடன் இணைத்தும் வழங்க வேண்டும் என மத்திய அரசு ஊழயர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். சந்தை பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைஉயர்வு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், அகவிலைப்படியை 50 சதவீதம் உயர்த்தி வழங்க முடிவு எடுக்கப்பட்டது. இது ஊழியர்களின் அடிப்படை சம்பள உயர்விற்கு உதவிகரமாக இருக்கும். உயர்த்தப்பட்ட 50 சதவீதம் அகவிலைப்படியை, அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்கினால் அரசு ஊழியர்களின் சம்பளம் 30 முதல் 35 சதவீதம் வரை உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும் என சம்பள கமிஷன் பரிந்துரைத்துள்ளதால், விரைவில் அமலாகலாம் என கூறப்படுகிறது.
50 சதவீதம் அகவிலைப்படி, அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும் என 5வது சம்பள கமிஷன் பரிந்துரைத்தது. ஆனால் 6வது சம்பள கமிஷனில் இந்த பரிந்துரை முன்வைக்கப்படவில்லை. அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்தி, அடிப்படை சம்பளத்துடன் இணைத்து 100 சதவீதமாக வழங்கும் அரசின் உத்தரவு அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு உயர்த்தப்படும் பட்சத்தில், இது அரசு அறிவிக்கும் 2வது இரட்டை இலக்க அகவிலைப்படி உயர்வு ஆகும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்தி அறிவித்தது. இது 2013ம் ஆண்டு ஜூலை 01ம் தேதியிலிருந்து தேதியிட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வு 10 சதவீதத்திற்கும் குறைவாக இருக்காது என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளார். இந்த புதிய அகவிலைப்படி உயர்வு ஜனவரி முதல் தேதியிலிருந்து தேதியிட்டு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளனர்.
தினமலர்

No comments:
Post a Comment