CURRENT NEWS ON CABINET DECISION
OVER CENTRAL GOVT.EMPLOYEES DEMANDS
நாடாளுமன்றத்
தேர்தல் குறித்து தலைமை தேர்தல்
ஆணையர் தலைமையில் இன்று புது டெல்லியில்
முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.
இன்றைய ஆலோசனைக்
கூட்டத்திற்குப் பின் தேர்தல் தேதி
குறித்து முடிவு அறிவிக்கப்பட உள்ளதால், முக்கிய முடிவுகள் இன்றைய காபினெட்
கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளதாக செய்தியாளர்கள்
வட்டாரத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்
படுகிறது .
காலை நடை பெற்ற காபினெட் கூட்டத்தில் சாந்தன், முருகன் , பேரறிவாளன் உள்ளிட்ட7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு எடுத்துள்ள
முடிவுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் மனு, மற்றும் தூக்கு தண்டனை குறைப்பினை எதிர்த்த மறு
சீராய்வு மனு அளிக்க அவசர முடிவு எடுக்கப் பட்டுள்ளது. காலை நடைபெற்ற கூட்டத்தில்
வேறு எந்த முடிவும் எடுக்கப் படவில்லை .
இன்று
மதியம் மீண்டும் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.
இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு
ஊழியர்களுக்கு ஒய்வு பெறும் வயது உயர்த்துதல் , அடிப்படி ஊதியத்துடன் பஞ்சப்படி
இணைத்தல் குறித்த முடிவுகள் எடுக்கப்படலாம் என்று செய்தியாளர்கள் வட்டாரத்தில்
இருந்து தகவல் நமக்கு அளிக்கப் பட்டுள்ளது. இதன்
அடிப்படையிலேயே தந்தி TV, POLIMER TV, SUN TV உள்ளிட்ட செய்தி CHANNEL களில் தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளதாக நமக்குத்
தெரிவித்தனர் .
. எந்த
அதிகார பூர்வ முடிவும் இன்னமும் எடுக்கப்படவில்லை, அப்படி எடுக்கப்பட்டால் மதியம்
காபினெட் கூட்டம் முடிந்ததும் இது தெரியவரும்
No comments:
Post a Comment