Sunday, February 2, 2014

HEALTH TIPS

HEALTH TIPS 

நோயற்ற வாழ்வு தரும் சாறுகள்

 Arukampul juice tonic suitable for all diseases. Like the newly ascribed to glucose, the body will give more power to the extent to which injected new blood

அருகம்புல் சாறு.: எல்லா நோய்களுக்கும் ஏற்ற டானிக் அருகம்புல் சாறு. புதியதாக குளுக்கோஸ் ஏற்றியது போலவும், உடலுக்கு புது ரத்தம் செலுத்தப்பட்டது போலவும் அதிக சக்தியை அளிக்கும். ரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். மலச்சிக்களை தீர்க்கும்.
ஆண்மை, தாது விருத்தி, இருமல், வயிற்றுவலி, மூட்டுவலி, இதயக்கோளாறு, தோல் வியாதிகளை நீக்கும். ரத்ததில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும். வாய்துர்நாற்றம், பல் நோய்கள், சர்க்கரை நோய்கள் வராமல் தடுக்கும். ஆஸ்துமா ரத்த அழுத்தத்தை குறைக்கும். தாய்பாலை அதிகரிக்க செய்யும். உடலில் நச்சுத்தன்மையை அகற்றும். கொழுப்பு சத்தை குறைக்கும்.

துளசி இலைச்சாறு: காய்ச்சல், இருமல், ஜீரணக்கோளாறு, ஈரல் சம்பந்தமான நோய்கள் காதுவலி ஆகியவற்றறை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யும்.

தூதுவளை இலைச்சாறு: மார்புச் சளியை அகற்றும். நரம்புத் தளர்ச்சி மறையும். மூளை வளர்ச்சி நினைவாற்றல் அதிகரிக்கும். தோல் நோய்கள் மறையும். 

மஞ்சள் கரிசலாங்கண்ணி சாறு: உடல்நிறம் பொலிவு பெறும். கண்களுக்கு நல்ல பார்வை கிடைக்கும். மூளைக்கு சுறுசுறுப்பை தந்து, அறிவு தெளிவு ஏற்படும். காமாலை, மலச்சிக்கல் நீங்கும்.

பொண்ணாங்கண்ணி சாறு: உடலுக்கு வலிமை ஊட்டும். பொன் போல் உடல் பளபளப்பாகும். கண்ணொளி அதிகரிக்கும். வாதநோய்கள் மறையும். உடல்சூடு குறையும். 

வல்லாரை இலைச்சாறு: நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்பு தளர்ச்சி அகலும். வயிற்று நோய்கள், குடல் நோய்கள், நீங்கும். தாது விருத்தியாகும். சிறுநீர் நன்கு பிரியும் இதயம் வலுவாகும்.

வில்வ இலைச்சாறு: காய்ச்சல், நீரிழிவு குறையும். வயிற்று புண்கள் ஆறும். நல்ல பசி எடுக்கும். மந்த புத்தி மாறும். மஞ்சள் காமாலையை போக்கும்.. காலாரா குறையும்.

புதினா இலைச்சாறு: வாய் புண், வயிறு, குடலில் புண்கள், சளி, கபம், இருமல் குறையும். வெண்குஷ்டம் குறையும்.

நெல்லிக்காய் சாறு: தலைமுடி உதிர்வது குறையும். தும்மல், இருமல், சளி, கண்நோய், பல் நோய்கள், குறையும். நன்கு பசி எடுக்கும். இதயநோய்கள், நீரிழிவு நோய், தோல் நோய் குறையும். உடல் பலமடையும்

வாழைத்தண்டு சாறு: சிறுநீர் அடைப்பு, சிறுநீரக சம்பந்தமான நோய்கள் குறையும். ரத்த அழுத்தம் தொந்தி, அமிலத்தனமை போன்றவற்றை குறைக்கும். உடல், கை, கால் வீக்கத்தை குறைக்கும். ரத்தம் சுத்தமாகும்.

கேரட் சாறு: கண் பார்வை ஒளி பெறும். கண் நோய்கள், பல் நோய்கள் குறையும். அமிலத்தன்மையை குறைக்கும். 

அரச இலைச்சாறு: மலச்சிக்கல், உடல்சூடு, கர்ப்பப்பை நோய்களை குறைக்கும். காம உணர்ச்சியை தூண்டச் செய்யும். 

கொத்தமல்லி சாறு: பசியை தூண்டும். பித்தம், வாத நோய், காய்ச்சல் குறையும். மூலம், சளி, இருமல் குறையும்.

தினமும் தேன் பருகினால் இளமையாக இருக்கலாம்

Honey is a sweet food, medical tempered, frosted flowers in

தேன் ஓர் இனிய உணவுப்பொருள் மருத்துவ குணமும் கொண்டது, பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில் (திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகிறது. தினமும் தேன் பருகினால் என்றும் இளைமையாக இருக்கலாம் என்பது அறிவில் ரீதியான உண்மை என்று பயன்படுத்திய பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேனில் அடங்கியுள்ள பொருட்கள்:

1. தண்ணீர் 17 முதல் 70 சதவீதம்.
2.
பழச்சர்க்கரை 40 முதல் 80 சதவீதம்.
3.
திராட்சை சர்க்கரை 10 முதல் 30 சதவீதம்.
4.
கரும்பு சர்க்கரை 1 முதல் 90 சதவீதம்.

மேலும் சிலிக்கா, கிருப்பு, தாமிரம், மாங்கனீஸ், கால்சியம், குளோரின், பொட்டாசியம், கந்தகம், பாஸ்பரஸ், அலுமினியம், மக்னீசியம் உள்ளிட்ட பொருட்களும் அடங்கியுள்ளது.

தேன் சாப்பிடுவதால் உள்ள பயன்கள்:

1. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் இளைக்கும், ஊளைச் சதை குறையும், உடல் உறுதியாகும்.

2. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி குணமாகும்.

3. தேனும் வெங்காயச்சாறும் கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசமடையும்.

4. தேன், முட்டை, பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா உபாதையில் இருந்து தப்பலாம்.

5. உடம்பில் இரத்த குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும் பாலும் கலந்து சாப்பிட்டால் சோகை நோய் தீரும்.

6. மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து சாப்பிட்டால் ஆறாத புண் ஆறிவிடும்.

7.வயிற்று வலி ஏற்பட்டவர்களுக்கு தொப்பு ளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

8. ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலும்பிச்சை பழம் சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் போல் சுறுசுறுப்பாக இருக்கும் நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடி விடும்.

9. அதிகாலையிலும், படுக்க செல்வதற்கு முன்பும் தேன் பருகினால் உடலுக்கு நல்லது.

10. அல்சர் நோய் உள்ளவர்கள் தினமும் இரண்டு தேக்கரண்டி தேன் சாப்பாட்டிற்கு முன் சாப்பிட்டு வர அல்சர் நோய் குணமாகும் உள்ளிட்ட ஏராளமான பலன்கள் தேனில் உள்ளது.

என்ன பழங்களில் என்ன இருக்கிறது.

Mango: blood pressure get better. Eaten by children. Vitamin A is higher. Increased blood gives strength to the body.

மாம்பழம்: ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம். வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. ரத்தத்தை அதிகரித்து உடலுக்கு பலம் அளிக்கும்.  உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. 

கொய்யா: வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. சொறி, சிரங்கு, ரத்தசோகை, இருப்பவர்கள் கொய்யாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு பயன்பெறலாம்.  விஷகிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாபழத்துக்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும்  விஷக்கிருமிகள் ரத்தத்தில் கலந்துவிட்டால் அதை  உடனே கொன்றுவிடும் சக்தி படைத்தது. 

பப்பாளி: மூலநோய், சர்க்கரைநோய், குடல் அலற்சி, போன்றவற்றுக்கு சிறந்தது. வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. பல் சம்பந்தமான குறைப்பாட்டிற்கும்  சிறுநீர்பையில் ஏற்படும் கல்லை கரைக்கவும் பப்பாளி பயன்படும். நரம்புகள் பலப்படும். ஆண்மைதன்மையை பலப்படுத்தும்.

மாதுளை: மலத்தை இளக்கும் சக்தி பெற்றது. இருமல், பித்தம், சம்பந்தமான அனைத்து குறைபாடுகளுக்கும் நல்ல பலன் தரக்கூடியது. வறட்டு  இருமலை குணப்படுத்தும். 

வாழை: மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு, பலனடையலாம். இரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் நல்ல ஜீரண  சக்தி கிடைக்கும். செவ்வாழைப்பழம் கண் பார்வை சக்தியை அளிக்கும். 

ஆரஞ்சு: வைட்டமின் ஏ, வைட்டன் சி, வைட்டமின் பி, சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது. தூக்கமின்றி அவதிப்படுபவர்கள் படுக்கச்செல்லும் முன்  அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம் சொத்தை விழுந்து வலி  ஏற்படுதல், பல் வலி, ஈறுகளில் ரத்தக்கசிவு உள்ளவர்கள் ஆரஞ்சு பழச்சாற்றை கொப்பழித்து விழுங்கி நிவாரணம் பெறலாம்.

திராட்சை: வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. சரியாக பசி எடுக்காமல் பயிறு, மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர்  திராட்சையில் அரை டம்ளர் சாறு எடுத்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து அருந்தினால் நன்றாக பசி எடுக்கும். பெண்களுக்கு ஏற்படும் சூதக  கோளாறுகளுக்கு திராட்சை சாறு பலனளிக்கும். முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். 

எலுமிச்சை:  எலுமிச்சை சாற்றுடன் சிறிய இஞ்சித்துண்டை நறுக்கிப்போட்டு கொதிக்க வைத்து ஆறியபிறகு தினமும் 2முறை குடித்தால் இருமல்  நின்றுவிடும். சூடான டீயில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து 3 நாட்கள் குடித்தால் தலைவலி வராது. வயிற்றுவலி, பித்தத்தால், ஜீரண  உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகளை சிறுநீர் தொந்தரவுகள் வராது. 

பேரீட்சை: தினமும் இரவில் தூங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலையும் 2 பேரீட்சை பழமும் சாப்பிட்டால் உடல் பலம் பெறும்  புதிய ரத்தம் உண்டாகும்.


No comments:

Post a Comment