Tuesday, February 25, 2014

GDS ஊழியர் வாழ்வு கானல் நீராகிக் கொண்டே இருக்கிறது . இதற்கு முடிவு தான் என்ன ?

குற்றம் ..... நடந்தது என்ன ? தோழர் . மகாதேவையாவின் பங்கு என்ன ? - ஒரு விவாதம் .
ADGDSU சங்கத்தின் பொதுச் செயலர்  தோழர். மகாதேவையாவால் அவரது வலைத்தளத்தில் அறிவிக்கப் பட்டபடி,  அவரால் அறிவிக்கப் பட்ட AIGDSU சங்கத்தின்  காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஒட்டி  சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.



(1)Grant of Civil Servant status to Gramin Dak Sevaks.


The Dept of post is not competent to settle this demands, After appointment of the 7th CPC or judicial committee it will recommend to the Govt. of India for consideration.


இது RESPECTFUL AGREEMENT  என்று அவரே குறிப்பிட்டுள்ளார். AGREEMENT என்றால் "ஒப்பந்தம் " அதாவது  இலாக்கா தரப்பு  மற்றும்  தொழிற்சங்கத் தரப்பு   என்று இரண்டு பேரும் கையெழுத்திட்ட ஒப்பந்தம் .

 இந்த ஒப்பந்தப்படி  ஏழாவது ஊதியக் குழுவோ அல்லது  நீதிபதி தலைமையிலான தனி நபர் கமிட்டியோ  இதில் எது ஒன்று  அமைக்கப் பட்டாலும்  GDS ஊழியருக்கு CIVIL SERVANT STATUS  வழங்குவது  குறித்து அந்த கமிட்டிக்கு  பரிந்துரைக்கப்படும் .

இதன் மூலம்  இலாக்கா அதிகாரிகள் , தனி நபர் கமிட்டி அமைக்கப்பட்டாலும் அதனை ஏற்பதாக மகாதேவையாவிடம்  'RESPECTFUL AGREEMENT" பெற்று விட்டார்கள் என்பது முற்றிலும் உண்மையானதாகும். 

மேலும் ஏற்கனவே  நீதியரசர்  தல்வார்  குழு பரிந்துரையில்  அளிக்கப் பட்டதையே  அரசு ஏற்காதபோது , மீண்டும் தனி நபர் கமிட்டி பரிந்துரை செய்வதாக வைத்துக் கொண்டாலுமே , அதன் நிலை என்ன ஆகும் என்பதையும் உங்கள் சிந்தனைக்கு விடுகிறோம்.

ஏற்கனவே நமது NFPE இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களின் பெரு முயற்சியாலும், நாடு முழுதும் உள்ள பல்லாயிரக் கணக்கான NFPE இயக்கத்தின்  முன்னோடித் தோழர்களாலும்    நமது இலாக்காவிலேயே GDS ஊழியர்களுக்கான  அங்கீகரிக்கப் பட்ட ஒரே சங்கமாக   AIPEDEU சங்கத்தை  அமைத்து  அதன் தலைமைப் பொறுப்பை  தோழர். மகாதேவையாவிடம் கொடுத்ததும் உங்களுக்கு  நினைவிருக்கும். 

அடுத்தடுத்த  VERIFICATION இலும் ஒரே அங்கீகரிக்கப் பட்ட சங்கமாக அது விளங்கிட  நம் ஒவ்வொருவரின் உழைப்பும்  இரத்தமும் அதில் இருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.  ஆனால் இன்றைய சூழலில்  மகாதேவையா  தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து  இயக்கத்தை தவறான வழியில் பிரித்துச் சென்றாலும் , அடுத்த VERIFICATION வரும் வரை அவருக்கு அங்கீகாரம் உள்ள ஒரே சங்கம் என்ற  சலுகை உண்டல்லவா ?  அதன் ஏகப் பிரதிநிதி யாக இருக்கும் அவர்  இப்படி GDS வாழ்வை மரணக் குழியில் தள்ளும்  ஒரு  வரலாற்றுத் தவறான ஒப்பந்தந்தை  இலாகாவுடன் போடலாமா ?

அதுவும் , ரயில்வே , பாதுகாப்பு துறை உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் ஏகப் பிரதிநிதித்துவம் உள்ள NATIONAL COUNCIL JCM  ஊழியர் தரப்பு மூலம் ஒட்டு மொத்த  மத்திய அரசு ஊழியர்களின் DEMAND ஆக ,  ஏழாவது ஊதியக் குழு பார்வையில் ஊழியர் தரப்பு TERMS OF REFERENCE ஆக  GDS ஊழியர்களின்  ஊதியம் மற்றும் பணித்தன்மை குறித்து ஏழாவது ஊதியக் குழுவே பரிசீலித்திடவேண்டும், அவர்களுக்கு 1977 உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்  CIVIL SERVANT STATUS வழங்கிட வேண்டும் என்று கோரியுள்ள நிலையில் ,

அதுவும் உச்ச நீதி மன்றத்தில்  NFPE மற்றும் தோழர். பாண்டுரங்கராவ் தலைமையிலான AIPEU GDS NFPE  சங்கம் , GDS ஊழியர்களுக்கு  CIVIL SERVANT STATUS அளிக்கப் பட்டு, அவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான அனைத்து சலுகைகளும் வழங்கப் படவேண்டும் என்று கோரி  வழக்குத்தொடர்ந்துள்ள நிலையில் .

அதுவும்  அஞ்சல் துறையின் அங்கீகரிக்கப் பட்ட  இரண்டே சம்மேளனங்களான NFPE மற்றும் FNPO இரண்டும் சேர்ந்து கூட்டாக , GDS ஊழியர்களை ஏழாவது ஊதியக் குழு வரையறைக்குள் கொண்டுவராவிட்டால் , கால வரையற்ற வேலை வேலை நிறுத்தம் செய்வோம் என்று அரசுக்கும் இலாக்காவுக்கும் அறிவித்துள்ள நிலையில் ,

 GDSஊழியர்களின் அங்கீகரிக்கப்பட்ட ஒரே சங்கம்  இலாக்காவுடன் போடும் இந்த  "மரணக் குழி" ஒப்பந்தம்  மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துமல்லவா

"அட போங்கையா ...அவங்களே ஏத்துக் கிட்டாங்க ... நீங்க வேறு"  என்று அரசாங்கத்தின் அங்கமான   மாண்புமிகு நிதியமைச்சர் சிதம்பரம் போன்றவர்கள் சொல்ல மாட்டார்களா ?

கடந்த  FEBRUARY 12 மற்றும்  13 தேதிகளில் ஊதியக் குழு தொடர்பான கோரிக்கைகளுக்காக 32 லட்சம் மத்திய அரசு ஊழியர் வேலை நிறுத்தம் அறிவித்துப் போராடும் போது , அதுவும்   GDS ஊழியர்களின் கோரிக்கைகளான , ஏழாவது ஊதியக்குழுவின் வரையறையில்  GDS  ஊழியர்களைச் சேர்த்தல்,  GDS ஊழியர்களுக்கு STATUS வழங்குதல் என்ற கோரிக்கைகளை அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் முன்வைத்துப் போராடும் போது , FNPO சம்மேளனமே  அதே தேதியில் , அதே கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தம் அறிவித்தபோது மகாதேவையா மட்டும்   தனியே போராட்டம் என்று தேதி அறிவித்ததே, GDS ஊழியர்களைப் பிரித்து ' CADRE உணர்வை '  உசுப்பி விடலாம் என்ற தவறான எண்ணம் அல்லாமல் வேறு என்ன என்பதையும் சிந்திக்க வேண்டுகிறோம் .

இதுபோலத்தான்  நமது சம்மேளனத்திலும் மகா சம்மேளனத்திலும் ஆறாவது ஊதியக் குழுவே  GDS ஊழியர்கள் குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்த போது APRIL 2007இல் JUDICIAL COMMITTEE வேண்டும் என்று கேட்ட மகாதேவையா, நவம்பர் 2007ல் அதனை ஏற்பதாக அறிவித்ததையும், அனைத்து GDS ஊழியர்களும் அவர்கள் கோட்ட அதிகாரிகள் மூலம்  நடராஜமுர்த்தி  கமிட்டிக்கு கோரிக்கை மனு கொடுக்கச் சொல்லி சுற்றறிக்கை வெளியிட்டதையும் எவரும் மறந்துவிட முடியாது.

இதே  போல, நவம்பர் 2008  குண்டூர்  அனைத்திந்திய  மாநாட்டில்
சம்மேளனத்தின் அனைத்து பொதுச்செயலர்களும் கலந்து கொண்ட  
CONVENTION இல்  2009 ஜனவரி 6 முதல் அனைத்து சங்கங்களும் சேர்ந்து வேலை நிறுத்தம் செய்யலாம் என்று முடிவெடுக்கும் போது  , மகாதேவையா  மட்டும்  2008, டிசம்பர்  17 முதல் காலவரையற்ற  வேலை நிறுத்தம் என்று தன்னிச்சையாக அறிவித்தார் . இது எவருக்கும் மறந்து போகுமா ? ஆனாலும் கூட  நமது சம்மேளனத்தின் தலைவர்கள் அவருக்காக விட்டுக் கொடுத்து , அந்த வேலை நிறுத்தத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டதும்  மறந்து போகாது அல்லவா ?

நமது வேலைநிறுத்தத்தின், பின்னணியில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில்  அமைக்கப் பட்ட "கோபிநாத்  கமிட்டி"  பல பரிந்துரைகளை செய்வதாக உறுதியளித்துக் கையெழுத்து இட்டதையும் அதனையும் இழந்து  தோழர் மகாதேவையா  தன்னுடைய  "தனி ஆவர்த்தன" வேலை நிறுத்த நீட்டிப்பால்  மீண்டும்  ழைய நிலைக்கே  GDS ஊழியர்களைக் கொண்டு சென்றதையும் எவரும் மறந்து விட முடியாது .

 " Madam,

Happy ending of the indefinite strike of G.D.S. employees that started from 17.12.2008.
On behalf of 2.80 lacs of Gramin Dak Sevaks we sincerely thank you for your affirmative decisions which resulted in the withdrawal of the strike action and restoration of total normaley and tranquillity. It was on account of your positive approach, assisted by the Member (P) and other officers that a sense of inclusion has developed in the Gramin Dak Sevaks and this will certainly go a long way in further improvement of rural postal network, postal service to the rural people, popularising and implementing new products and business."

 என்று  அன்றைய இலாக்கா முதல்வருக்கு நன்றி தெரிவித்து  தோழர். மகாதேவையா கடிதம் எழுதி அதனை சுற்றறிக்கையாக அனைவருக்கும் வெளியிட்டதும் ஆனால் எந்தப் பிரச்சினையும் தீராததால்  நம்முடைய சம்மேளனத்திலும் மத்திய அரசு ஊழியர் ஊழியர்  மகா சம்மேளனத்திலும் 20.01.2009 முதல் வேலை நிறுத்தம் செய்திட அறிவிப்பு விடுத்த போது  அன்றைய சம்மேளன மாபொதுச்  செயலர்  தோழர். K.R. அவர்களுக்கும்  மகா சம்மேளன மா பொதுச் செயலர் தோழர். K.K.N.  குட்டி அவர்களுக்கும் மகாதேவையா எழுதிய கடிதம் எவருக்கு மறக்க இயலாது . அதன் நகலை கீழே பார்க்கவும்.


"Why should you or the confederation try to include an issue in your charter of demandswhich stands settled, is beyond any body's perception. Any strike on this issue will be an attempt to belittle or negate the achievements of the struggle of the G.D.S. employees or even to scuttle the settlement. How can there be a struggle when there has been an agreement even when action for implementation is on? And in this situation the NFPE or the Confederation is no where Justified nor it is within Jurisdiction to include G.D.S. issues in the charter of demands. You will agree that it will not be befitting to claim credit for a matter already settled by the united efforts of the G.D.S. employees."

இப்படியாக  குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் , குழியும் பறித்த கதையாக  தொடர்நிகழ்வுகள் , தொடர் கதையாக நடந்து வருகின்றன. GDS ஊழியர்களின் வாழ்வைக் காக்க நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதிநிதித்துவப்பட்ட  தோழர்.  மகாதேவையா,  தவறாத நிலைப்பாட்டில் , தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதையே முதல் நிலையாகக் கொண்டு, தவறுக்கு மேல்  தவறுகளை  லட்சக் கணக்கான GDS ஊழியர்களின்  வாழ்வுக்கு எதிராக செய்துகொண்டே போகிறார். 

 நாம் எத்தனை முயற்சி செய்தாலும்  அத்தனை முயற்சிகளையும் வேரறுக்க ,  இலாகாவும் , அரசாங்கமும்  'கோடரிக் காம்புகளை' தேடிக் கொண்டே இருக்கின்றன. 

GDS ஊழியர் வாழ்வு கானல் நீராகிக் கொண்டே இருக்கிறது .  
இதற்கு  முடிவு தான் என்ன ?

உங்கள் சிந்தனைக்கே விடுகிறோம்....   

நம் முயற்சிகளை என்றும் போல 

இடைவிடாது தொடர்கிறோம்........

No comments:

Post a Comment