Monday, May 4, 2020

அன்பார்ந்த GDS மற்றும் கேசுவல் லேபர்  தோழர்களே!

 டைரக்ரேட் ஆர்டர்.  F.No-37-33/2009-SPN-I dated  05-04-20-ல் ரத்னாவதி என்பவர் தொடர்ந்த OA.No.559/2018 வழக்கில் மதிப்பிற்குரிய CAT கோர்ட்டின் தீர்ப்பினை பின்பற்றி MTS தேர்வு விதியில் குறிப்பிட்ட
விகிதாச்சார படி MTS வேலைக்கு ஆட்களை சுழற்சி முறையில் நியமிப்பது தொடர்பாக கூறப்பட்டுள்ளது.

 கர்நாடக சர்க்கிள் கொடுத்த Letter No.LC/3-92/2018 dated ,6-1-20 மற்றும் 21-10-19படி இந்த ஆர்டர் போடப்பட்டது.

தற்போதைய MTSதேர்வு விதியில் GDS மற்றும் கேசுவல் லேபர்களை MTSஆக நியமிப்பது தொடர்பாக கீழ்கண்ட வழிமுறைகள் உள்ளன.

A)   50 % காலியிடங்களை ஜனவரி மாதம் 1-ம் தேதி அன்று 5 ஆண்டு சர்வீஸ் முடித்த GDS-களை அவர்களது சர்வீஸ் சீனியாரிட்டி அடிப்படையில்MTSஆக நியமிப்பது.

B)  25 % காலியிடங்களை ஜனவரி மாதம் 1-ம் தேதி அன்று 3 ஆண்டு சர்வீஸ் முடித்த GDS-களை கொண்டு தேர்வு எழுத வைத்து  அதன் அடிப்படையில் MTSஆக நியமிப்பது.

C)   25 % காலியிடங்களை (1-9-93 அன்று பணியில் இருந்த) கேசுவல் லேபர்களின் சர்வீஸ் சீனியாரிட்டி அடிப்படையில்MTSஆக நியமிப்பது.

ஒவ்வொரு ஆண்டும் போதுமான காலியிடங்கள் வராததால் அனைத்து மாநில நிர்வாகமும் ஒரு புதிய தேர்வு முறையினை  இனி பின்பற்ற வேண்டும். MTS தேர்வு விதியில் கொடுக்கப்பட்டுள்ள விகிதாச்சாரம் கிடைக்கும்படி  GDS மற்றும் கேசுவல் லேபர்களை சுழற்சி முறையில் MTS வேலைக்கு நியமிக்க வேண்டும்.

பாரா நம்பர் A,B,C-ல் கூறியபடி MTS காலியிடங்களை 2:1:1என்ற விகிதத்தில் பிரித்து கீழ்கண்டவாறு  நிரப்பிட வேண்டும்.

1.  ஒரு ஆண்டில் ஒரு காலியிடம் தான் வந்தால் அந்த 1 இடம் GDS சீனியாரிட்டிக்கு ஒதுக்கிட வேண்டும்.

2. அடுத்த ஆண்டில் 2 காலியிடங்கள் வந்தால் அந்த 2 காலியிடங்களில் 1 இடம் GDS சீனியாரிட்டிக்கும், மற்றொரு இடம்  LDCE தேர்வில் செலக்ட் ஆன GDS- க்கும் ஒதுக்கிட வேண்டும்.

3. அதற்கு அடுத்த வருடம் 3 காலியிடங்கள் வந்தால் அதில் முதலில் வரும் 1 இடம் கேசுவல் லேபர் சீனியாரிட்டிக்கும். மற்ற 2 இடங்கள் GDS சீனியாரிட்டிக்கும் ஒதுக்கிட வேண்டும்.

அதாவது முதலில் வரும் 1மற்றும் 2 காலியிடங்கள் GDS சீனியாரிட்டிக்கும் 3-வது  காலியிடம் LDCE தேர்வில் செலக்ட் ஆன GDS- க்கும் , 4-வது காலியிடம் கேசுவல் லேபர் சீனியாரிட்டிக்கும் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் திரும்ப திரும்ப  ஒவ்வொரு மாநில நிர்வாகமும் பின்பற்ற வேண்டும். இது தொடர்பாக 2019, 2020, 2021ஆண்டுகளில் எப்படி எடுக்க வேண்டும் என்ற மாதிரி வழிமுறை கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனியாக ரிஜுஸ்தர் பராமரிக்க வேண்டும்.

எனவே ,கேசுவல் லேபர்ராக பணியாற்றி தற்போது GDSஆக இருப்பவர்களுக்கும், 1-9-93 அன்றைய தினம் பணியில் இருந்த கேசுவல் லேபர்ர்களுக்கும் சீனியாரிட்டி அடிப்படையில் MTSவேலை கிடைக்கும். வாழ்த்துக்கள் தோழர்களே!