Sunday, April 9, 2017

GDS TO POSTMAN EXAM SURPLUS ISSUE...

  NFPE P4  மாநில  சங்கத்திற்கு இரண்டு  வேண்டுகோள்
        வேண்டுகோள்1

         கடந்த  ஆண்டு GDS  TO  POSTMAN    EXAM –ல்   ஏற்கனவே சென்னை ரீஜினில் UNFILLED -ஆக இருந்த  49 காலிப்பணியிடங்களை அந்த ரீஜினை சேர்ந்த டிவிசனில்  உள்ள சர்பிலஸ் GDSஐ கொண்டு நிரப்பப்பட்டது.  தற்போது, MTS –க்கு ஒதுக்கப்பட்ட 271 இடங்கள்  UNFILLED-ஆக இருக்கும் என்று கருதுகிறோம்.  ( CCR  REGION = 103  +  CENTRAL  REGION = 40  +  SOUTHERN  REGION = 65  +  WESTERN  REGION = 63, TOTAL = 271)

             MTS  TO  POSTMAN    EXAM –ல் பெரும்பாலான காலிப்பணியிடங்களுக்கு,  குறிப்பாக சென்னையில் தேர்வு எழுத MTS  ஊழியர்களே முன்வருவது இல்லை. இதை சமீபத்தில்  GDS கமிட்டி கூட சுட்டிக்காட்டியுள்ளது.  அதுபோலவே GDS  TO  POSTMAN    EXAM –ல்   சென்னையில் பெரும்பாலான காலிப்பணியிடங்களில் தேர்வு எழுத GDS ஊழியர்களே இல்லை . NEAREST UNIT (REGION) / DIVISION  என்பதால் சென்னையின்  UNFILLED வேகன்ட் எப்பவும் குறைந்த  50% மார்க் எடுத்த சென்னை  ரீஜினல் பகுதியை சேர்ந்தவர்களுக்கு கூட தொடர்ந்து கிடைத்து அவர்களை விட   60 % லிருந்து 77 % அதிக மார்க் எடுத்த மற்ற ரீஜினல் பகுதியை சேர்ந்தவர்களுக்கு  ஒவ்வொரு தேர்விலும் தொடர்ந்து கிடைக்காமலே போய்விடுகிறது. இந்த  தேர்வு நடைமுறை மாற்றப்படவேண்டாமா?   POSTMAN  தேர்வுகளில், 5 ஆண்டு பணி முடித்த அடிப்படையில் தான் இந்த தேர்வே எழுதியுள்ளதால்   UNFILLED  எதுவாக இருந்தாலும் மாநில அளவில் தான் SURPLUS மெரிட் லிஸ்ட் எடுத்து அதில் விருப்ப இடம் கேட்டு தேர்வு செய்ய வழி செய்யப்படவேண்டும்.

        சென்ற வருடம் நடந்து முடிந்த GDS TO POSTMAN  தேர்வில்  மதுரை, கோவில்பட்டி, திருப்பத்தூர்,  கும்பகோணம், இப்படி பல டிவிசன்களில் 60 %  லிருந்து 77 % மார்க்குகள் மேல் பெற்றவர்கள் தோராயமாக 200 பேர்கள் இருக்க, சென்னை ரீஜினில்     NEAREST UNIT (REGION) / DIVISION   என்ற அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 50 % மார்க் எடுத்தவர்களுக்கு  கூட UNFILLED வேகன்ட்டில்  SURPLUS  லிஸ்ட் எடுக்கப்பட்டு செலக்ட் ஆகிவிட்டார்கள். இது சரியா? உதாரணமாக, கீழே உள்ள விபரங்களை பாருங்கள்.

THIRUPATTUR   DIVISION  CANDIDATES     NAME ,  COMMUNITY,  MARKS
KOVILPATTI  DIVISION  CANDIDATES     NAME,  COMMUNITY,  MARKS
KUMBAKONAM   DIVISION  CANDIDATES      NAME,  COMMUNITY,  MARKS

P.SANKAR -OBC- 66,  V.JAYANTHI - OBC- 64 VENKATESAN - OBC- 61,  C.PRABU- OBC- 61            GNANAMOORTHI- GEN,-59
 R.SURESH- GEN- 57,  C.ARUNKUMAR - SC- 60  
 A.ILAYARAJA -  SC- 60

G.MURUGESAN-OBC-75,
G.THEORAL-OBC-70,
V.SUNDAR RAJ-OBC-67,
R.MUTHUKUMAR-OBC-60, GOMATINAYAGAM-OBC-60

M.J. BHARATHI -OBC-77,       R. SUMATHI -OBC-77,
G. SARASWATHI -OBC-74,    K. SELVAYOHINI -OBC-63   . MUTHUMURUGAN-OBC-60   L. BENITIK RAJA-OBC-60   
S. REKHA - GEN-59          RAJASEKAR - GEN-59
N. THIRUPAVAI - OBC-58,   S RAVICHANDRAN - OBC-58
S. THILAGAVATHI - OBC-58 ,  J. PRABAKARAN - OBC-57
    
                  கும்பகோணம் டிவிசனில், அதுவும்  முதல் மூன்று இடங்களில் வரும் தோழியர் மாநில அளவில் மெரிட் லிஸ்ட் எடுத்தால்  முதல் மூன்று இடங்களில் வருவார்கள். ஆனால் மண்டல அளவில் நிரப்பபடுவதால் அவர்களுக்கு சென்னையில் UNFILLED-ஆக இருந்த 49 காலிப்பணியிடங்களில் தேர்வாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மதிப்பிற்குரிய CPMG அவர்களிடம் கருணையோடு, MTS UNFILLED இடங்களை ரிலாக்ஸ்சேசன் கொடுத்து GDSஐ கொண்டு நிரப்பிட ஆணை பெற  கேட்டுகொள்கிறோம். முன்பெல்லாம் MTS TO  POSTMAN    UNFILLED இடங்களை GDSக்கு மட்டுமே ஒதுக்கி நிரப்பியுள்ளோம்.

           கடந்த  ஆண்டில் பல்வேறு  NFPE P4, GDS கூட்டங்களில்  பலமுறை, குறிப்பாக,  திண்டிவனத்தில்  நடந்த NFPE P4 CWC, மாநில மாநாட்டில் இது குறித்து வலியுறுத்தப்பட்டது. மேலும் கடந்த டிசம்பர் மாதம் டில்லியில் நடைபெற்ற JCM மீட்டிங்கில் இது குறித்து  விவாதிக்கப்பட்டது. ( ITEM  55 : Maintaining Waiting list of qualified GDS/ MTS for promotion to Postman Cadre. --- The matter will be examined and order will be issued within a month )

       மேலும் தற்போது  GDS கமிட்டி கூட, MTS ஊழியர்கள் POSTMAN காலி இடங்களை     1% கூட பயன்படுத்த  முன்வருவதில்லை. ஆனால் GDS –ஊழியர்கள் POSTMAN காலி இடங்களை 100 % விரும்பி பயன்படுத்தி வருகின்றனர் என்று 3  ஆண்டுகளின் புள்ளி விபரங்களோடு தெரிவித்துள்ளது.மேலும் GDS கமிட்டியானது அஞ்சல்துறையில் MTS ஊழியர்களைவிட எண்ணிக்கையில்  8 மடங்கு, அதிகம் உள்ள GDS-க்கு 75 %  POSTMAN காலி இடங்களை ஒதுக்கீடு செய்யவும், அவர்கள் ஏற்கனவே 5 ஆண்டுகளுக்கு மேல் அஞ்சல்துறை பணி அனுபவம் பெற்றுள்ளதால் அவர்கள் பணி உயர்வு பெற்று வந்தால் அஞ்சல் துறைக்கு எவ்விதங்களில் எல்லாம் நன்மை என்றும், எதிர்வரும் IPPB-ல் GDS- ஊழியர்கள் பெரும்பங்கு வகிக்க உள்ளதால் இதையும் கொஞ்சம் பரிசீலித்து முடிவெடுக்க பரிந்துரைத்துள்ளது

      சமீபத்தில் கூட NFPE, FNPO பொதுசெயலாளர்கள் இணைந்து  GROUP-C ஊழியர்களின்  Cadre Restructuring  தொடர்பாக நமது DG POST  அவர்களிடம் அளித்துள்ள மனுவில் GDS கமிட்டி SINGLE HANDED S.O-வை DOUBLE HANDED S.Oஆக மாற்ற சொன்ன பரிந்துரை மற்றும் LSG cadre should be divisionalised   and one time relaxation in RR should be granted from LSG to HSG-II and from HSG-II to HSG-I for filling up all the vacant post of these cadre... என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

                 அதுபோலவே, இங்கேயும், POSTMAN  தேர்வுகளில், 5 ஆண்டு பணி முடித்த அடிப்படையில் தான் இந்த தேர்வே எழுதியுள்ளதால் கருணை கொண்டு MTS to POSTMAN  UNFILLED இடங்களில் சர்பிலஸ் GDS-ம் தேர்வு செய்யப்பட வேண்டும். மேலும், டிவிசனில் நிரப்பியதுபோக  உள்ள UNFILLED இடங்களை ரீஜினுக்குள்ளேயே நிரப்பி கொள்ளாமல், சர்பிலஸ் ஆக உள்ள அனைத்து ரீஜினை சேர்ந்த, அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கும்    GDS-ம் பயன்படுத்தும் பொருட்டு மாநில அளவில்  ஒரு மெரிட் லிஸ்ட் எடுத்து, அவர்களிடம் விருப்ப இடம் கேட்டு நிரப்ப வேண்டும். இதை மதிப்பிற்குரிய CPMG அவர்கள் மட்டத்தில் கொண்டுசென்று தற்போது காலியாக இருக்கும் MTS UNFILLED இடங்களை ரிலாக்ஸ்சேசன் கொடுத்து GDSஐ கொண்டு நிரப்பிட ஆணை பெற  உடனே முயற்சி செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

 RR ரூல்ஸ் புதிது புதிதாக வரும் போது, UNFILLED  காலிபணியிடங்களை நிரப்பும்போது GDS-க்கு மட்டும் NEAREST UNIT (REGION) / DIVISION   என்ற பழையமுறையில் வருகிறது. அப்படியென்றால் பழையமுறையில் MTS TO  POSTMAN   தேர்வின் அனைத்து UNFILLED இடங்களை GDS-க்கு மட்டுமே ஒதுக்கி நிரப்பலாமே ?  DIRECT RECUIRMENT, PA தேர்வில்  மதிப்பெண்கள் அடிப்படையில் மாநில அளவில் தான்  மெரிட் லிஸ்ட் எடுத்து அதில் விருப்ப இடம் கேட்டு தேர்வு செய்யப்படுகிறது.  அதே நடைமுறையும் இங்கே கொண்டுவரப்பட வேண்டும்.

வேண்டுகோள்2   
        
                பொதுவாக  DIRECT RECUIRMENT  தேர்வில் 500  இடங்களுக்கு பல லட்சம் பேர் எழுதுவதால், அவர்களை வடிகட்ட PART - A, B, C ,D,-ல் UR-10, OBC- 9, SC/ST- 8 என்று குறைந்தபட்ச  மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது  சரியாக இருக்கலாம். ஆனால், GDS TO POSTMAN EXAM –ல் 200  இடங்களுக்கு GDS  400 பேர்  மட்டுமே 5 ஆண்டு பணி முடித்த அடிப்படையில் எழுதுவதால் PART- A, B, C ,D,-ல்    UR-10, OBC- 9, SC/ST- 8 என்று குறைந்தபட்ச  மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தாமல், மொத்த மதிப்பெண்கள் UR - 40%, OBC -37%,   SC/ST- 33%  எடுத்திருந்தாலே தேர்வு பெறும்படியும், காலிப்பணியிடம் இல்லாத டிவிசனை சேர்ந்த GDS-ம் தேர்வு எழுதும்படியும் RR Rules உடனடியாக மாற்றம் செய்யபட வேண்டும். ( DIRECT RECUIRMENT  தேர்வர்களையும் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தான் செலக்ட் பண்ணனும் )

        மருத்துவ நீட் தேர்வு, இன்ஜினியரிங் தேர்வு, மற்றும் TNPSC, SSC, UPSC, BSRB, RRB   போன்ற டிபார்ட்மெண்ட் தேர்வுகளில் வினாத்தாளை PART- A, B, C ,D, என்று பிரித்து அதில்    UR-10, OBC- 9, SC/ST- 8  குறைந்தபட்ச  மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற நடைமுறை இல்லை.  ஏன், நமது POSTMAN  to LGO,  MTS to LGO,  PA to IPO,  PA to PM GRADE  தேர்வுகளில் மொத்த மதிப்பெண்கள் UR - 40%, OBC -37%,   SC/ST- 33%  எடுத்திருந்தாலே தேர்வு பெறும்படி இருக்கும் போது GDS-க்கு மட்டும் இப்படிப்பட்ட நடைமுறை என்பது அநியாயம் இல்லையா?


      அதிக மதிப்பெண்கள் மொத்தமாக பெற்றிருந்தும், PART A,B,C, D,-ல்   UR-10, OBC- 9, SC/ST- 8 எடுத்திருக்கணும்  என்பதால்தான் GDS-ஊழியர்கள் நிறைய இடங்களில் தேர்வு பெறாமல் போய்விடுகிறார்கள். அதிக மதிப்பெண்கள்  எடுத்தவர்கள் வெளியேற்றப்பட்டு குறைந்த மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தேர்வு பெறுவது, மெரிட் என்பதையே கேள்வி குறியாக்காதா?. இது  GDS ஊழியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை கடுமையாக பாதிப்பதால், மொத்த மதிப்பெண்கள்  அடிப்படையில், தேர்வு செய்ய கேட்டுக்கொள்கிறோம்.  

6 comments:

  1. Sir!...
    I am laxmi...
    my baby was born on 31st Jan 2017...I am on ML ...can I take 26 weeks ML..i.e. Can I extend 3 more months from may...

    ReplyDelete
  2. Yes, you can.But your extended leave period treated now as loss of pay. GDS committee report will be implemented soon, after that you have to write a letter to your divisional superintendent, then you will receive.

    GDS COMMITTEE REPORT- 16.22. Maternity Leave- The recent maternity benefit(amendment) bill,2016 passed by the Rajya Sabha provides to the employed women to full paid absence from work for 26 weeks.The committee noted that woman employees among regular staff are enjoying 180 days of fully paid maternity leave at present. The Act is applicable to all establishments employing ten or more persons. the committee, therefore, considers that the women GDSs should be given full payment of wages for 26 weeks from salary head instead of the present system of giving a grant from the circle welfare fund that too only for three months.

    ReplyDelete
  3. Thanks for the valuable information Sir...

    ReplyDelete
  4. Thanks for the valuable information Sir...

    ReplyDelete
  5. Neengal koduthulla pulli vivarangal thavaru.... Mts to postman vacancies 271 enbadhum thavaru. This year mts to postman vacancies 425. Next chennai surplus la selectanvanga yarum 40% illai idhuvum thavaru anaivarum minimum 55% marks eduthavanga dhan surplusla poirukanga....Next surplus circle level keakurenga adhu thappu illa circle level dhan kodukanum.. But cpmg idharkana order issue pannamudiadhu.. Avar DG order follow pandra official dhan.. Rule modify pandra power avarku illa.. So indha matter all India level issue...

    ReplyDelete
    Replies
    1. neenga than ellame thavara sollirikeenga...mts to postman vacancies 271 than ,vena vacancy list parunga. this year enpathu 2017 thane. nan solrathu 2015 year exam pathi....o.k.. chennaila surplusa select aanavanga mark list veliyida thayara ?..appa entha visayatha sonnappa 3 months la cpmg podurenu sonnarnu sonnengale? cpmg ta letter kodutheengale? antha reply vaichu dte la letter koduthurukalame? 2012 la than entha exam pattern announce pannanga. ethu varaikkum, RR rules 3 times modify pannirukkanga.RR rules la entha mathiri exam vainganu entha edathileyum sollaliye.oru RR Rules aala GDS/MTS vaaipu paathikka patta atha modify panna solla vendama? GDS promotiona direct recruitmenta thana eduthukuranga. entha 1 varusathla JCM la or dte la letter koduthu erukeengala?ethuku munnadi evvalavo exam issues pesi settle aagi eruke? ungalukku theriyatha? pesama kidaithu viduma? gds committee ye 20-1-17 la detaila solliruke. o.k tholar, nan gds tholargal dept.staff aaga kidaikaa koodiya soolal erunthal avarkalukku kidaikanumenu than eluthenen. manam erunthal seyyungal. ellai enral vittu vidungal.

      Delete