ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக வீரர் தகுதி
ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தமிழக ஓட்டப்பந்தய வீரர் மனோஜ் தகுதி பெற்றுள்ளார்.
சமீபத்தில் ஆசியா ஒசானியா சாம்பியன்ஷிப் போட்டி துபையில் நடைபெற்றது. இதில் 63 நாடு களில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் கலந்து கொண்ட மனோஜ் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.
இதன் மூலம் பிரேசிலில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா சார்பில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்.
சென்னை திருவான்மியூரை சேர்ந்த மனோஜ் பொறியியல் பட்டதாரி ஆவார். சென்னை யிலுள்ள இந்தியா ஸ்போர்ட்ஸ் புரோமோசன் அகாடமியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பயிற்சி பெற்று வந்துள்ளார். மேலும் வெளிநாட்டு போட்டிகளில் இவர் கலந்து கொள்ள எஸ்.எஸ். ஸ்போர்ட்ஸ் பயிற்சி மையம் உதவி புரிந்துள்ளது.
No comments:
Post a Comment