Wednesday, February 12, 2014

சூரியன்-புதிய புகைப்படம் வெளியீடு


சூரியன் வளிமண்டலத்தில் நிகழும் மாற்றங்கள்: புதிய புகைப்படம் வெளியீடு




சூரியன் வளிமண்டல பகுதி  முன் நம்ப பட்டதை விட அதிக வெப்பமயமானதாக இருக்கலாம் என்று தற்போது வெளியிடப்பட்ட புகைப்படத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
நாசா இது தொடர்பான புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தின் மூலம் சூரியனின் வளிமண்டலத்தில் நிகழும் மாற்றங்கள் மற்றும் அதன் மூலம் பூமியில் நிகழும் காலநிலை  போன்றவற்றை கணக்கிட  விஞ்ஞானிகளுக்கு உதவும் என்று தெரிகிறது.
மேலும், நீண்டகாலமாக சூரியனைபற்றி நிலவும் சில ரகசியங்கள் இதன்மூலம் கண்டறியப்படலாம்.சூரியன் மேற்பரப்பில் 5,500 ° c ஆக நிலவும் வெப்பம் அதன் வெளிமண்டலத்தில் 1 மில்லியன் செல்சியஸ் ஆக மாறுவது ஏன் உள்ளிட்ட சில ரகசியங்களும் இதன் மூலம் கண்டறியலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

No comments:

Post a Comment