தலைவனுக்கு வரவேற்பு வாழ்த்துப் பா !
வருகவே ! வருகவே
!
தலைவா ! எம் முதல்வா
!
வருகவே ! வருகவே !
கடமையின் வீரனே வருகவே !
காலத்தின் நாயகன் வருகவே !
கண்களில் ஒளியுடன் வருகவே !
கருத்தினில் தெளிவுடன் வருகவே !
தோன்றிய புகழொடு வருகவே
!
தொண்டரின் அன்புண்டு வருகவே
!
தூய நல் நெஞ்சமே வருகவே !
தொடர்ந்திடும் வெற்றியே வருகவே !
அன்பின் பொருளே வருகவே !
அறிவின் திறனே வருகவே !
ஆற்றலின் உருவே வருகவே !
ஆணவம் அழித்தாய் நீ வருகவே !
பகை வெல்லும் திறனே வருகவே !
பண்பின் நிலையே நீ வருகவே !
பசியினில் விருந்தே வருகவே
!- எம்
பயணத்தின் பாதையே வருகவே
!
வருகவே ! வருகவே !
தலைவா ! எம் முதல்வா !
வருகவே ! வருகவே !