அன்புத் தோழர்ளே !!!!
தமிழகத்தில் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் மழையின் காரணத்தால் மிகவும் சிரமத்திற்குள்ளாகி உடமைகளை இழந்து பரிதவிக்கும் அஞ்சல் ஊழியர்களுக்கு ஆறுதலாக மிகச் சிறு தொகையாவது இலாக்காவில் பெற்று தந்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கடிதங்கள் CPMG அலுவலகத்திற்கு எழுதி இன்று அதற்கான ஆணையும் பெற்றுவிட்டார். அஞ்சல் 3 மாநிலச் செயலாளர் தோழர் JR .
இதில் முக்கியமாக GDS தோழர்களுக்கும் பெற்றுத்தர வேண்டும் என்று தோழர் J.R அவர்களை தொடர்ந்து GDS மாநிலச் செயலாளர் தோழர் R.DR கேட்டுக்கொண்டதற்கினங்க நமது GDS ஊழியர்களுக்கும் RS 5000/- வழங்க ஆணையிடப் பட்டுள்ளது தோழர் JR அவர்களுக்கு நன்றி.
GDS ஊழியர்களுக்கு கடந்த 01.10.2013 முதல் CIRCLE WELFARE FUND என துவக்கப்பட்டு தற்போது நடை முறையில் உள்ளது. ஆகவே இலாக்கா ஊழியர்களுக்கு தனி, நமக்கு தனி. இருந்தும் இந்த ஆணை பெறப்பட்டதில் இந்த சூழ்நிலையில் GDS (NFPE ) சங்கம் ஒன்று தான் முறையாக ஆணைகளை பெறுவதில் ஆக்கப்பூர்வமான செயல்களை செய்து வருகிறது.
ஆனால் இன்று வரை மாநில அரசு (தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி) வெள்ளம் பாதித்த பகுதிகளாக அறிவிக்கவில்லை. இதிலே அரசு விதி எண் 64 என்னசொல்கிறது, பாதிப்பு அடைந்த பகுதிகளை அந்த அந்த மாவட்ட நிர்வாகம் ஆணையாக வழங்கினால் மட்டுமே நமது இலாக்கவினால் வழங்கப்படும் வெள்ள முன்பணம் நாம் பெறமுடியும். ஆகவே நாம் ஆணை பெற்றுவிட்டோம். மாநில அரசின் ஆணைக்கு காத்திருப்போம்.
GDS ஊழியர்கள் அதற்கான முன் பண படிவம்( FORM -IV ) என்பதை பூர்த்தி செய்து அளித்திடுமாறு மாநிலச் சங்கம் கேட்டுக்கொள்கிறது. இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கோட்ட செயலாளர்கள் மாநில பொறுப்பாளர்களை அனுகிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .
ORDER ISSUED BY THE CHIEF PMG, TN FOR GRANTING FLOOD ADVANCE TO DEPTL. EMPLOYEES AND FINANCIAL ASSISTANCE TO GDS IMPOSING CONDITIONS
நமது CHIEF PMG அவர்கள் நாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இலாக்கா ஊழியர்களுக்கு வெள்ள நிவாரண முன்பணமாக ரூ. 7500/- ம் GDS ஊழியர்களுக்கு வெள்ள நிவாரண உதவியாக ரூ.5000/- ம் GFR விதி எண் 64 மற்றும் 66 அடிப்படையில் வழங்கச் சொல்லி, கீழ்மட்ட அதிகாரி களுக்கு உத்திரவிட்டு தனது கரங்களில் இருந்து பொறுப்பினை இறக்கி வைத்துவிட்டார். ஆனால் விதி எண் 64 முக்கியமாக சொல்லுவது என்ன ?
1. சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் , பாதிக்கப்பட்ட பகுதிகளை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்று அரசாணை வழங்கி இருக்க வேண்டும் .
2. அந்தந்த பகுதிகளில் பணியாற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு வெள்ளம் பாதித்தற்காக அந்தந்த மாநில அரசுகள் நிவாரண உதவித் தொகை வழங்கி இருக்க வேண்டும்.
இவை இரண்டுமே இதுவரை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் ( தமிழ் நாடு,புதுச்சேரி) செய்யப்படவில்லை. எனவே உத்திரவு அளிக்கப் பட்டாலும் தற்போது பணம் கிடைக்காது என்பதுதான் இன்றைய நிலை. கடலூரில் அடித்த "தாணே" புயலுக்கும் இவ்வாறே முந்தைய CPMG அவர்கள் பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.,
எனவே மாநில அரசின் தலைமைச் செயலகத்தில் இது குறித்து நாம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். மேல் விபரங்கள் கிடைத்தவுடன் தெரிவிக்கிறோம்.
பார்க்க GFR விதி எண் 64:-
GFR Rule 64. Powers of Sanction.-A Head of Office may sanction the grant of an advance to a non-Gazetted Government servant under his administrative control whose property, movable or immovable, has been substantially affected or damaged in an area affected by a natural calamity, subject to the following conditions: (i) that the concerned State Government of the State in which the natural calamity has occurred, has declared the area as having been affected by the natural calamity; (ii) that the State Government has also issued orders sanctioning financial assistance to their own employees whose property, movable or immovable, has been damaged by the natural calamity in the areas declared as having been affected by the natural calamity; and (iii) an application is made in Form IX of the Compendium.
பார்க்க CHIEF PMG இன் உத்தரவை.
No comments:
Post a Comment