ORDER ISSUED BY CPMG,TN FOR GRANTING SPECIAL CL FOR 3 DAYS AND COMPENSATORY OFF FOR THREE DAYS IN FLOOD AFFECTED AREAS
தமிழ் மாநில அஞ்சல் மூன்று
சங்கத்தின் முயற்சிக்கு வெற்றி !
கடந்த 2.12.2015 அன்று காலையே CHIEF PMG அவர்களுடன் பேசிய செய்தியும் நம் மாநிலச் சங்க கடித நகலும் அஞ்சல் மூன்று வலைத்தளத்தில் பிரசுரித்திருந்தோம் !
தற்போது உத்திரவு வெளியிடப் பட்டுள்ளது !
வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடந்த டிசம்பர் 2, 3 மற்றும் 4 தேதிகளில்
கஷ்டங்களையும் தாண்டி பணிக்கு வந்த ஊழியர்களுக்கு
மூன்று நாட்களுக்கும் COMPENSATORY OFF!
வெள்ளம் பாதித்த பகுதிகளில் பணிக்கு வர இயலாத ஊழியர்களுக்கு
டிசம்பர் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளுக்கு SPECIAL CL !
இந்த உத்திரவை வழங்கிய CPMG டாக்டர் .CHARLES LOBO அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் !
===================================================================
ஆனால் நாம் ஏற்கனவே டிசம்பர் 5 ந் தேதி வரை SPECIAL CL வழங்க வேண்டும் என்று கோரியிருந்தோம் !
டிசம்பர் 5 ந் தேதி போக்குவரத்து சீராகவில்லை என்பதை
ஆதாரத்துடன் தெரிவித்திருந்தோம் !
பெரும்பான்மையான இடங்கள் , ஏன் நம்முடைய
அஞ்சலகங்களில் பல அன்று கூட முற்றிலும் நீரில் மூழ்கி இருந்தது
என்பதை மாநில நிர்வாகம் நன்கு அறியும் !
குறிப்பாக ஆதாரத்திற்கு சில :- சத்தியபாமா பல்கலைக் கழகம், நந்தம்பாக்கம் குடியிருப்பு ,நிலமங்கை நகர், ஜாபர்கான்பேட்டை , ராமாபுரம், அனகாபுத்தூர், R .A .புரம் , GUINDY INDUSTRIAL ESTATE , மேற்கு மாம்பலம் போன்றவை . அங்கெல்லாம் பணி துவக்க இயலவில்லை !
நீரில் மூழ்கிய எந்த SUBWAY யும் 5ந் தேதி வரை
நீர் இறைக்கப் படவில்லை.
அப்படியானால் எப்படி பேருந்துகள் இயங்கி அலுவலகம்
வர முடியும் ?. அண்ணா சாலையில் இயங்கினால் மட்டும் போதுமா ?
பெரும்பான்மையான அஞ்சலகங்களில் 07.12.2015
அன்றுதான் பணி துவக்க முடிந்தது .
05.12.2015 சனிக்கிழமை நிர்வாக அலுவலகங்களுக்கு
விடுமுறைதானே , OPERTIVE SIDE ஊழியர்கள் பற்றி நாம் ஏன் கவலைப்படவேண்டும் என்ற நிலை சரியில்லை .
நிச்சயம் இது குறித்து CPMG யுடன் பேசுவோம். ஏற்கனவே கடிதம் அளித்துள்ளோம். மேலும் சிறப்பு நேர்காணல் வேண்டியுள்ளோம் . அடுத்தவாரத்தில் சந்திப்பதாக CPMG பதில் தந்துள்ளார்.
========================================================================
உத்திரவின் நகலை கீழே பார்க்கவும்.
No comments:
Post a Comment