NFPE
தமிழக அஞ்சல் ஊழியர் வெள்ள நிவாரண பணிக்குழு
வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய நிகழ்ச்சி
தோழர்களே!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை சைதாப்பேட்டை, கருணாநிதி நகரை சார்ந்த 200 ஏழை குடும்பங்களுக்கு தமிழ் மாநில அஞ்சல் நான்கின் சார்பாக 19.12.2015 அன்று காலை 8.00 மணி முதல் புனித தாமஸ் மலை அஞ்சலகத்தில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
நிவாரண பொருட்களை அஞ்சல் மூன்றின் மாநில தலைவர் தோழர் P.மோகன் அவர்கள் வழங்கி துவக்கி வைத்தார். அஞ்சல் நான்கின் மாநில செயலர் தோழர் G.கண்ணன், அஞ்சல் மூன்றின் முன்னாள் மாநில தலைவர் தோழர் ஸ்ரீவெங்கடேஷ், அஞ்சல் மூன்றின் முன்னாள் செயல் தலைவர் NG, அஞ்சல் நான்கின் மாநில உதவி தலைவர் தோழர் நடராசன், மாநில பொருளாளர் தோழர் ரவிச்சந்திரன், மாநில உதவிப் பொருளாளர் தோழர் பரமானந்தம், சென்னை வடகோட்ட செயலாளர் தோழர் வேதகிரி, மத்திய சென்னை கோட்ட தலைவர் தோழர் நாராயணன், தென் சென்னை கோட்ட செயலாளர் தோழர் ராஜேந்திரன், மாநில ஆடிட்டர் தோழர் வாசு தேவன், வட கோட்ட தலைவர் தோழர் ஜெயபிரகாஷ் உட்பட சுமார் 50 தோழர்கள் நிவாரணம் வழங்கும் பணியை சிறப்பாக முடித்து வைத்தனர்.
இப் புனிதப் பணியில் கலந்துகொண்டு சிறப்பான சேவை செய்த பெண் தபால்காரர் தோழர்கள் வசந்தா திருவல்லிக்கேணி , கலையரசி திருவல்லிக்கேணி, கிரிஜா சைதாப்பேட்டை , வசந்தி கோடம்பாக்கம் ஆகிய தோழர்களுக்கு வீர வாழ்த்துக்கள்.
நிவாரணப்பொருட்களை திருவல்லிக்கேணி அலுவலகத்தில் இருந்து புனித தாமஸ் மலை அஞ்சலகத்திற்கு கொண்டு செல்வதற்காக நமது மெயில் வேனை அனுப்பி உதவி செய்த நமது CCR PMG திரு மெர்வின் அலெக்ஸாண்டர் அவர்களுக்கு மாநில சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
நிவாரணப் பொருட்களை பாதுகாப்பாக வைத்து ஏற்பாடுகளை செய்வதற்கு
திருவல்லிக்கேணி அலுவலகத்தில் இடம் கொடுத்து உதவிய மத்திய சென்னை கோட்டத்தின் SSP அவர்களுக்கும், திருவல்லிக்கேணி போஸ்ட் மாஸ்டர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு புனித தாமஸ் மலை அஞ்சலகத்தில் இடம் கொடுத்து அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு அனுமதி வழங்கிய தென் சென்னை கோட்டத்தின் SSP அவர்களுக்கும், புனித தாமஸ் மலை அஞ்சலகத்தில் இடம் கொடுத்து அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்த போஸ்ட் மாஸ்டர் அவர்களுக்கும் மாநில சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment