Wednesday, December 16, 2015

ஓய்வுப்பெற வயது 58-ஆக குறைக்க எந்தஒரு திட்டமும் இல்லை மத்திய அரசு அறிவிப்பு


ஓய்வுப்பெற வயது வரம்பை 58-ஆக குறைக்க எந்தஒரு திட்டமும் இல்லை மத்திய அரசு அறிவிப்பு

T


புதுடெல்லி, 

மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வுப்பெற வயது வரம்பை 58-ஆக குறைக்க (அல்லது 33 ஆண்டுகள் சர்வீஸ்) எந்தஒரு திட்டமும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது. 

50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். “வயது வரம்பை குறைக்க எந்தஒரு திட்டமும் பரீசிலனையில் இல்லை” என்று மத்திய மந்திரி ஜிஜேந்திர சிங் மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்து உள்ளார். ஓய்வுப் பெறுவதற்கான வயது வரம்பை குறைக்க அரசிடம் எந்தஒரு திட்டமும் உள்ளதா? அதுதொடர்பாக விளக்கம் அளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனையடுத்து அரசு தரப்பில் எந்தஒரு திட்டமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பெரும்பாலான மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பு 60 ஆகும். ஆசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் வயது வரம்பு 62 ஆகும். 

No comments:

Post a Comment