FRIDAY, SEPTEMBER 19, 2014
TN CONFEDERATION DHARNA AT SHASTRI BHAVAN, CHENNAI, A GRAND SUCCESS !
இன்று 19.09.2014 சென்னை சாஸ்திரி பவன் முன்பாக தமிழக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பாக முழு நாள் தார்ணா போராட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
தார்ணா போராட்டத்தில் தபால் துறை ஊழியர் சங்கங்கள் , வருமான வரித்துறை , அக்கௌண்டன்ட் ஜெனரல் அலுவலகம், சாஸ்திரி பவன் அலுவலகங்களின் ஊழியர் சங்கங்கள், ராஜாஜி பவன் அலுவலகங்களின் ஊழியர் சங்கங்கள், கல்பாக்கம் அணுசக்தி துறை ஊழியர் சம்மேளனம், தூர்தர்ஷன், CGHS , AUDIT & ACCOUNTS , CPWD உள்ளிட்ட மத்திய அரசுத் துறை சார்ந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன தமிழகத் தலைவர் தோழர்.
J . ராமமுர்த்தி தலைமை தாங்க, சாஸ்திரிபவன் COC பொதுச் செயலாளர் தோழர். சாம்ராஜ் வரவேற்பு ரையாற்றினார். பொதுச் செயலாளர் தோழர். M . துரைபாண்டியன் அவர்கள் துவக்க உரையாகவும் உணவு இடை வேளை ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை விளக்க உரையாகவும் சிறப்புரை ஆற்றினார்.
மகா சம்மேளன பொருளாளர் தோழர்.S . சுந்தரமுர்த்தி அவர்கள் விண்ண திரும் கோரிக்கை முழக்கங்களை எழுப்பி எழுச்சி உரை நிகழ்த் தினார். இது தவிர அஞ்சல் மூன்றின் மாநிலத் தலைவர் தோழர்.ஸ்ரீவெங்கடேஷ் , ராஜாஜி பவன் COC யின் தோழர் பாலசுந்தரம், ITEF பொதுச் செயலாளர் தோழர். M .S . வெங்கடேசன், அணுசக்தித் துறை தோழர் சதாசிவம், CGHS தோழர் கம்பீரம் ஆகியோர் வாழ்த்திப் பேசினார். மாலை 4.00 மணி யளவில் தார்ணா போராட்டம் முடித்து வைக்கப் பட்டது.
தார்ணா போராட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து பகுதி தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் தமிழ் மாநில மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வெற்றிகரமாக நடைபெற்ற மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழ் மாநிலக் கிளையின் 19.09.2014 முழு நாள் தார்ணா போராட்ட புகைப்பட காட்சிகள் கீழே பார்க்கவும்.
No comments:
Post a Comment