Tuesday, September 30, 2014

HUMANITARIAN APPROACH OF PMG, CCR SRI. MERVIN ALEXANDER

HUMANITARIAN APPROACH OF PMG, CCR SRI. MERVIN ALEXANDER

PMGG , CCR  அவர்களின் மனிதாபிமானம் 

கடந்த வெள்ளியன்று  செங்கல்பட்டு கோட்ட கண்காணிப்பாளர் திரு. லோகநாதன் அவர்கள் HEART ATTACK  ஏற்பட்டு  GLOBAL HOSPITAL இல் சேர்க்கப் பட்டுள்ளதாகவும் உடன் அவருக்கு ANGIOPLASTY  செய்திட வேண்டும் என்றும் இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து என்றும்  மருத்துவர்கள் அறிவித்ததாக நம்முடைய  தோழர். G . ராமமுர்த்தி (செங்கை கோட்டச் செயலர்  மற்றும் M.E.)  நம்முடைய மாநிலச் செயலரிடம்  வெள்ளி மாலை 04.00 மணியளவில் தெரிவித்தார். 

அதற்கான  மருத்துவமனை மற்றும் மருத்துவ செலவு சுமார் ரூ. 2,00,000/-  தேவைப்படும் என்றும் எனவே உடன் மருத்துவ முன்பணம்  பெறுவதற்கான உத்திரவு பெற  மண்டல அலுவலகம் வந்துள்ளதாகவும்  நம்மிடம் தெரிவித்தார்.  ஆனால் அந்த நேரத்தில் நம்முடைய PMG, CCR  அவர்கள்  CHIEF  PMG மற்றும்    நமது வட்டத்திற்கு வருகை புரிந்துள்ள  நம்முடைய அஞ்சல் வாரிய உறுப்பினர் அவர்களுடன் CAMP  சென்றுள்ளதாகவும்  அவரை உடன் தொடர்பு கொள்ள இயலாது என்றும் மண்டல அலுவலகத்தில் தெரிவித்தார்கள் .  

வேறு வழியிலாமல் நம்முடைய மாநிலச் செயலர் அவர்கள்,   பிரச்சினையின் அவசர மற்றும் அவசியம் கருதி கை பேசியில்   PMG CCR அவர்களைத் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால்  அவரது CELL கிடைக்க வில்லை. எனவே நிலைமையை விளக்கி  உடன் மருத்துவ முன்பணம் வழங்கப் பட்டால் மட்டுமே  ஒரு உயிர் காக்கப்படும் என்றும் அதற்கான உரிய உத்திரவு அடுத்த நிலை அதிகாரிகளுக்கு அளிக்க வேண்டும் என்றும் குறுஞ்செய்தி மூலம்  PMG CCR  அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்த  அடுத்த 10 நிமிடத்தில் ,  அத்துணை  TIGHT SCHEDULE  க்கு இடையிலும் நம்முடைய PMG CCR அவர்களால் உடன் பாதிக்கப் பட்ட  SP செங்கல்பட்டு அவர்களுக்கு மருத்துவ முன் பணம் வழங்கிட  உத்திரவு மண்டல நிர்வாகத்திற்கு அளிக்கப் பட்டது. 

அதன் மீது உடன் DPS  CCR  அவர்களும் செயல்பட்டு , A.O. அவர்களிடம்   ESTIMATE  மற்றும் விண்ணப்பம் அளிக்கப் பட்டு அதன் மீது  நடவடிக்கை எடுக்கப் பட்டு மாலை 06.30 மணியளவில்   80%   மருத்துவ முன்பணம் அளித்திட உரிய உத்திரவும் அளிக்கப் பட்டது. இரண்டு மணி நேரத்தில் அனைத்தும்  வேகமாக நடைபெற்று,  மறுநாள்  பாதிக்கப் பட்ட திரு. லோகநாதன் அவர்களுக்கு  ANGIOPLASTY யும்  விரைவாக  செய்யப்பட்டு இன்று அவர் நலமுடன் உள்ளதாக  நம்முடைய  செங்கை கோட்டச் செயலர் மற்றும் மாநிலச் சங்க அமைப்புச் செயலர்  தோழர். G .  ராமமுர்த்தி  நம்மிடம் தெரிவித்தார்.  செங்கை SP அவர்கள் விரைவில் பூரண குணம் பெற்று  பணிக்குத் திரும்ப நம்முடைய நெஞ்சு நிறை வாழ்த்துக்கள் !

தொழிற் சங்க ரீதியாக  செங்கை SP அவர்கள்  மீது, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ஊழியர்களை பணிக்கு வர அவர் உத்திரவிடுகிறார் என்று நாம் ஏற்கவே PMG அவர்களிடம் புகார் செய்து அதன் மீது நடவடிக்கை கோரியது , ஊழியர் பிரச்சினை சார்ந்த  விஷயம். ஆனால் எந்த ஒரு மனிதர் பாதிக்கப் பட்டாலும் உடன் ஓடிச் சென்று உதவுவது என்பது  நமது சங்கத்திற்கே உரிய  நல்ல பண்பு ஆகும். பிரச்சினைகளை  மனதில் கொள்ளாமல் , எந்தவித காழ்ப்புணர்ச்சியும், இன்றி செங்கை  SP அவர்களுடன் தொடர்ந்து  அருகில் இருந்து , அவருக்கு உரிய சிகிச்சை அளித்திட  உறுதுணை புரிந்த  நம் செங்கை  தோழர் G . ராமமூர்த்தி அவர்களும்  அனைவரின் பாராட்டுதல்களுக்கும்  உரியவரே !

PMG, CCR  அவர்கள்  இப்படி மனிதாபிமானத்துடன், உடன் உத்திரவுகள் வழங்குவது என்பது , இது முதல் முறையல்ல. ஏற்கவே  நங்கநல்லூர்  POSTMASTER  அவர்களின் மகன் விபத்தில் அடிபட்டு  உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போதும் , நம்முடைய அஞ்சல் நான்கின்  DY . CIRCLE  SECRETARY  தோழர். பத்மநாபன் அவர்கள்  HEART  ATTACK  இல் பாதிக்கப் பட்ட போதும் விரைந்து நடவடிக்கை எடுத்த   PMG CCR  திரு. மெர்வின்  அலெக்சாண்டர் அவர்களின் மனிதாபிமானத்தை நாம் ஏற்கனவே  நன்கு உணர்ந்திருக்கிறோம். 

நிச்சயம் அவரது இந்த செயல்கள்  நம் அனைவரின்  பாராட்டுதலுக்கும் உரியது ஆகும் . அவர் இதனை எதிர்பார்த்து செய்வதில்லை என்றாலும் , இப்படி நல்ல எண்ணத்துடன் செயல்படும் மனிதாபிமானம் மிக்க உயர் அதிகாரிகளை பார்ப்பதே அபூர்வமாக உள்ள இந்த காலத்தில் , இப்படிப் பட்டஒரு அதிகாரியின் நற்செயலை நாம் பாராட்டாவிட்டால் நாம் நிச்சயம்  தவறு செய்தவர்கள் ஆவோம் .   நம்முடைய நெஞ்சார்ந்த  பாராட்டுக்களும்  நன்றிகளும்   அவருக்கு உரித்தாகட்டும்!  உடன் செயல்பட்டு உதவிய DPS  CCR  திரு. வெங்கடேஸ்வரலு அவர்களுக்கும்      
 A .O .CCR  அவர்களுக்கும்  நம் நன்றிகள் ! இந்த நிலை என்றும் தொடரட்டும்!   நல்லவை  என்றும் நடக்கட்டும் !  என மனமார வாழ்த்துவோம். !

பாண்டிச்சேரி  கோட்ட  FR 17 A  பிரச்சினை 

பாண்டிச்சேரி கோட்டத்தில்  டிசம்பர் 2013 இல் மூன்று நாட்கள் தலமட்ட 
அளவில் வேலை நிறுத்தம் செய்ததற்காக அந்தக் கோட்ட முது நிலைக் கண்காணிப்பாளர் அவர்களால் நிறைய தோழர்களுக்கு FR 17 A  வழங்கப்பட்டு  அதன்மீது அவர்கள்  அளித்த மேல் முறையீடும் தள்ளுபடி செய்யப் பட்ட நிலையில் அவர்கள்  காலதாமதமாக மாநிலச் சங்கத்தை  அணுகினார்கள் என்பதும் , 

இருந்தபோதிலும் இது குறித்து  நம் அஞ்சல் மூன்று  மாநிலச்  செயலர்  அவர்கள்  பாண்டி அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு  செயலர்களை அழைத்துச் சென்று CPMG  மற்றும் PMG CCR  அவர்களை தொடர்ந்து சந்தித்துப் பேசிய விபரங்களும்  ஏற்கனவே  இந்த வலைத்தளத்தில் நாம் தெரிவித்திருந்தோம். 

அதன் மீது  தற்போது  உரிய நடவடிக்கை எடுக்கப் பட்டு  எழுத்தர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த  ஏழு தபால்கார தோழர்களுக்கு  FR 17 A  யில் இருந்து விலக்களித்து  அவர்கள் தேர்வு எழுத  PMG CCR  அவர்கள் அனுமதித்துள்ளார்கள் என்பது  மகிழ்ச்சியான செய்தியாகும்.  

ஆனால்  ஏற்கனவே  LGO  விண்ணப்பங்கள்  DTE  மூலம்  CMC  க்கு அனுப்பப்பட்டு இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் , இந்த உத்திரவு இந்த ஆண்டில் நடைமுறைப் படுத்த இயலுமா என்பது  கேள்விக்குறியே ! 

எனினும் அதற்கான முயற்சிகளை  அகில இந்திய சங்கங்கள் மூலம் நாம் எடுத்துள்ளோம்.  இந்த உத்திரவினை அளித்து  ஏழு தபால்கார இளம் தோழர்களுக்கு  பதவி உயர்வு பெற வாய்ப்புகளை ஏற்படுத்திக்  கொடுத்த  PMG CCR  அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி  உரித்தாகும். !

No comments:

Post a Comment