Saturday, September 6, 2014

HOLIDAY DUTY ORDERED IN CHENGALPATTU DIVISION CANCELLED BY PMG, CCR

FRIDAY, SEPTEMBER 5, 2014

HOLIDAY DUTY ORDERED IN CHENGALPATTU DIVISION CANCELLED BY PMG, CCR

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! 

செங்கல்பட்டு கோட்டத்தில்  RPLI /PLI  CLEANSING  வேலைகளுக்காக  சனி, ஞாயிறு  தினங்களில்  பணிக்கு வர  உத்திரவிடப்பட்டிருந்ததை ரத்து செய்திடக் கோரி PMG, CCR  அவர்களுக்கு மாநிலச் சங்கத்தின் சார்பில் கடிதம் எழுதி அதன் நகலை இந்த வலைத்தளத்திலும் பிரசுரித் திருந்தோம்.

இது குறித்து உடன்  நடவடிக்கை எடுப்பதாக PMG, CCR  அவர்கள் உறுதி அளித்திருந்தார். இன்று  அவர்  பணி  நிமித்தம் CAMP  இல் இருந்த போதும் இந்த பிரச்சினையில்  உடன் உத்திரவை ரத்து செய்வதாக நமக்கு உறுதி அளித்தார். அதன்படியே  அந்த உத்திரவு ரத்து செய்யப் பட்டதாக மாலை 5.30  மணிக்கு  செங்கல் பட்டு கோட்டச் செயலர்  மாநிலச் செயலருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். 

இந்தப் பிரச்சினையில் உடன்  கவனம் செலுத்தி, தொழிலாளர் விரோத 
உத்திரவை  ரத்து செய்திட்ட  நமது  PMG, CCR  திரு. மெர்வின் அலெக்சாண்டர் அவர்களுக்கு  செங்கல்பட்டு கோட்ட ஊழியர்கள் சார்பிலும் , நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பிலும்  நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.!

மேலும் ஒரு செய்தி :-

REVISED  HSG  I  RECRUITMENT  RULES  அடிப்படையில்   IPO LINE  HSG  I  POSTMASTER  கள்  வேலை செய்யும் அலுவலகங்களில்  இனி  GENERAL  LINE  ஊழியர்கள் பணி  புரிந்திட வேண்டி ,    அதற்கான உத்திரவு  இன்று  CPMG  அலுவலகத்தில் இருந் அனைத்து PMG க்களுக்கும் அனுப்பப் பட்டதாக உரிய அதிகாரி   தெரிவித்தார். எனவே  மண்டல அலுவலகங்கள் மூலம் இதை அமல் படுத்துவதற்கான உத்திரவை விரைவில் எதிர் பார்க்கலாம்.

No comments:

Post a Comment