Saturday, May 24, 2014

படித்தால் தான் எனக்கு வாழ்க்கையே பெற்றோர் இல்லாத முதல் மாணவி

மதுரை:படித்தால் தான் எனக்கு வாழ்க்கை என்ற நிலை இருந்ததால் கல்வியில் அதிக கவனம் செலுத்தியதாக, மாநகராட்சி பள்ளிகளில் முதலிடம் பெற்ற மாணவி பி.அனுசியா கண்ணீர் மல்க கூறினார்.

பாஸ் மார்க் எடுத்தாலே வீட்டுக்கு துள்ளி ஓடி வந்து, பெற்றோரிடம் மகிழ்ச்சியை தெரியப்படுத்தும் பள்ளி பருவத்தில், பத்தாம் வகுப்பு தேர்வில் 494 மதிப்பெண் பெற்று, மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையே முதல் மாணவியாக தேர்வு பெற்றுள்ள அனுசியாவிற்கு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கு யாருமில்லை.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பிறந்த அனுசியா, 6 மாத குழந்தையாக இருந்தபோது, அம்மா மல்லிகாவை இழந்தார். விவசாயியான அப்பா பாண்டியனுடன் தொடர்ந்த அரவணைப்பும் நீடிக்கவில்லை. 5ம் வகுப்பு படிக்கும் போது அப்பாவையும் இழந்தார்.


தான் யார் என்பதை கூட முழுமையாக தெரியாத அந்த பருவத்தில், துணையாக வர வேண்டிய பெற்றோரை இழந்து நின்ற அந்த சிறுமிக்கு, மதுரைசின்னசொக்கிகுளத்தில் இருந்த தாத்தா, பாட்டி ஆதரவளித்தனர். அவர்களுக்கென வேலை இல்லை. உறவினர்கள் அவ்வப்போது செய்யும் உதவியில்பேத்தியை படிக்க வைத்தனர்.மதுரை காக்கைபாடினியார் மாநகராட்சி பள்ளியில் படித்த அனுசியா, படித்தால் மட்டுமே தனக்கு வாழ்க்கை என்பதை உணர்ந்திருந்தார். 


அவரின் ஏழ்மை நிலை அறிந்து ஆசிரியர்களும் அவருக்கு உதவினர். அதன் விளைவு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் 98, ஆங்கிலம் 96, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100 என மதிப்பெண்களை அள்ளி, மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையே முதலிடம் பிடித்துள்ளார்.தன் நிலையை உணர்ந்து படித்தது தான், இந்த வெற்றிக்கு காரணம் என்பது அனுசியாவின் கருத்து. ஆனாலும் தன் மகிழ்ச்சியை தெரிவிப்பதற்கு கூட அருகில் பெற்றோர் இல்லை என அவர் கூறும்போது கண்ணீர் வடித்ததை பார்த்து, அருகில் நின்றவர்களும் கண்ணீர் வடித்தனர்.


என்னை பாராட்டி தழுவ பெற்றோர் இல்லை. இனிமேல் தான் இந்த விஷயத்தை என் தாத்தா, பாட்டியிடம் கூற வேண்டும். எனக்கு டாக்டருக்கு படிக்கும் ஆசை. ஆனால், பத்தாம் வகுப்பு படிக்க வைப்பதற்கே என் தாத்தா சிரமப்பட்டார். என்னை மேலும் படிக்க வைப்பார்களா எனத்தெரியாது. ஆனால் இதுவரை நான் படித்த அனைத்துமே என் நிலையை உணர்ந்து தான், என, தழுத்த குரலுடன் கூறினார்அனுசியா. வாழ்த்த: 99435 15250

No comments:

Post a Comment