Thursday, May 22, 2014

ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் அறிவிக்கிறார் மோடி

ஒரு சில மாதங்களில் ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள்: பிரதமராக பொறுப்பேற்றதும் அறிவிக்கிறார் 
Advertisement

மாற்றம் செய்த நாள்

22மே
2014
00:47
பதிவு செய்த நாள்
மே 22,2014 00:27

புதுடில்லி: நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு, 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய திட்டங்களை, ஒரு சில மாதங்களில் அறிவிக்கும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்தியில் பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், சொல்லிக் கொள்ளும் வகையில், பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை. ஏராளமான ஊழல்களும், முறைகேடுகளும் அம்பலமான தால், புதிய திட்டங்களை வடிவமைக்கவும், செயல்படுத்தவும் அதிகாரிகள் முன்வரவில்லை. இம்மாதம் 26ல், பிரதமராக பொறுப்பேற்க உள்ள, பா.ஜ.,வின் மோடி, மத்திய அரசின் தலைமை செயலராக கருதப்படும் கேபினட் செயலர், அஜித் சேத்துடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளார். பிற துறைகளின் செயலர்களுக்கு, அஜித் சேத் உத்தரவு படி, முடங்கிக் கிடக்கும் மெகா திட்டங்கள், புதிதாக துவக்கப்பட வேண்டிய திட்டங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. பிரதமராக பொறுப்பேற்ற சில வாரங்களில், நாடு முழுவதும், 20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு திட்டங்களை செயல்படுத்த, மோடி திட்டமிட்டு உள்ளதாக, கேபினட்டின் கூடுதல் செயலர், அனில் ஸ்வரூப் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக, 430 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், அவற்றை விரைந்து முடிக்க, சில மாதங்களே காலக்கெடு விதிக்கப்படும் எனவும், கேபினட் கூடுதல் செயலர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்மோகன் சிங் அரசின், கடைசி, ஒன்பது மாதங்களில், ஐந்து லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், 150 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. எனினும், அவசர கதியில் செயல்படுத்தப்பட்ட அந்த திட்டங்களில் பல மக்களை சென்றடையவில்லை. அதுவும் மன்மோகன் அரசின் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது

No comments:

Post a Comment