Monday, March 24, 2014

அஞ்சல் திருவிளையாடல்--POSTED BY NFPE TTN DVN


அஞ்சல் திருவிளையாடல்




ஈசன்                 : நான்  அனுப்பிய ஈ போஸ்டில் குற்றம்  கண்டவர் யவர் ..

நக்கீரன்            : நான் தான் 

ஈசன்                 : என்ன குற்றம் கண்டீர் ..சொல்லிலா பொருளிலா அல்லது   முகவரியிலா .

நக்கீரன்            : சொல்லிலே குற்றம் இல்லை ..பொருளில் தான் குற்றம் 

ஈசன்                : என்ன குற்றம் 

நக்கீரன்           : எங்கே உனது ஈ போஸ்டில் உள்ளதை படியும் 

ஈசன்               :  தொங்குதே வாழ்க்கை போஸ்ட் மாஸ்டர் ஆகி 
                             காலம் செப்பாது கண்டபடி வருதே ...
                             பயிலியது கேள்விக்குறியானது உழைப்பே 
                             நாசமா போச்சே ..
                             நான் செய்யும் பொழப்பே .........

                            இது தான் ஈ போஸ்டில் உள்ளது 

நக்கீரன்          :  இதன் உட்கருத்து 

ஈசன்                : ஆபீஸ் தோறும் ட்ரான்ஸ்பெர்  ஆகி போகும் 
                             அஞ்சல் அதிகாரியே ...
                            நேரம் காலம் தெரியாமல் வரும் ஈ போஸ்ட்களை 
                            பிரிண்ட் எடுத்து பிரிண்ட் எடுத்து ........
                            உழைப்பே பாழாகி ...நாசமா போச்சே ...
                            நம்மோட பொழப்பே ........

                           இது தான் அதன் உட்கருத்து ..

நக்கீரன்         :  அப்படியென்றால் முடிவாக நீர் சொல்லும் விளக்கம் ...

ஈசன்              :   போஸ்ட் மாஸ்டர்களுக்கு ..பொழப்பு நாசமா போச்சு ...

நக்கீரன்         : ஒருக்காலும் இருக்க முடியாது ..........அவர்களிடம் சரிவர   ..பிரிண்டர் இல்லாதது  , பேப்பர் இல்லாதது போன்றவைகளால்   தான்  இந்த நிலை!.

ஈசன்              : LSG அலுவலகத்தில் கூடவா ??

நக்கீரன்         : ஏன் நான் இருக்கும் HOவில் கூட அப்படிதான்!

ஈசன்              : நக்கீரா நன்றாக என்னை பார் ......நான் அனுப்பிய ஈ போஸ்டில்      குற்றமா ???

நக்கீரன்         : நீயே ..முக்கண் முதல்வரானாலும் , முக்கி முக்கி கத்தினாலும்                                  குற்றம் குற்றமே , rule 14 , மற்றும் rule 16 வழங்கினாலும் குற்றம்      குற்றமே.

ஈசன் :  நக்கீரா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

                                                                                                      - NFPE - COIMBATORE DN. -

No comments:

Post a Comment