Monday, March 24, 2014

நமக்குள் பேசி கொள்வோம் - 3


Friday, March 21, 2014

நமக்குள் பேசி கொள்வோம் - 3      சென்ற வாரம் TARGET  தரும் TORTURE  என்ற தலைப்பில் குறிப்பிட்டு இருந்தோம். "விளைவை பற்றியே  (TARGET) சிந்திப்பவர்கள், விவேகத்தை இழந்து விடுகிறார்கள். பிறகு, செய்ய கூடாத காரியத்தை(TORTURE) எல்லாம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்"என்று சொல்லியிருந்தோம். அதை உறுதி படுத்துவது போல  அப்படி ஒரு நிகழ்வு நமது  கோட்டத்தில் நடந்திருக்கிறது. ஆம். 10000க்கும் மேற்பட்ட electoral  பேப்பர் அனுப்பப்பட்டு உடனடியாக டெலிவரி செய்ய வேண்டும்  என்ற மேலிடத்து உத்திரவை எப்படி  நிறைவேற்றுவது என்று தெரியாமல்  திகைத்த நிர்வாகம், TARGETஐ முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், Trainingல்  உள்ள 10 பேரிடமும் கொஞ்சம்  கவர்களுக்குள்  தபாலை வைக்க சொல்லுங்கள் என்று  TRAINERடம் நிர்வாகம் சொன்னது. காலையில் இந்த வேலை.  மாலையில் Training என்ற அடிப்படையில்  இந்த யோசனையை சொன்னது.. (NO hand. NO fund. achieve target என்று சொன்னால் அதிகாரிகள்தான் என்ன செய்வார்கள் பாவம். )

    சிலருக்கு  செய்யலாமே என்று  அபிப்ராயம். பலருக்கு ஏன் செய்யவேண்டும் என்ற  எண்ணம். ஆனால், யாரோ ஒருவருக்கு (?)
 "கற்று கொள்ள வந்த இடத்தில கவர்  வைக்க சொல்வதா? படிக்க வந்த இடத்தில  பணி புரிய நிர்பந்திப்பதா?"  என்ற ஆவேசம்  வந்து விட்டது போலும். தொலை பேசியில்  தொடர்பு கொண்டு மண்டல அலுவலகத்தில்  உள்ள ஒரு அதிகாரியிடம் சொல்லிவிட்டார். அந்த அதிகாரியும், கோட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு "இதை அனுமதிக்க முடியாது.  உடனடியாக நிறுத்துங்கள்"  என சொல்லியதாக கேள்வி. அதிகாரிகளுக்குள் என்ன பேச்சு  வார்த்தை நடந்தது என்பது நமக்கு தெரியாது. ஆனால், கவர் வைக்கும் பணி உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டது. சபாஷ்! வாழ்த்துக்கள்.  தொலைபேசியில் தொடர்பு கொண்ட  ஊழியருக்கும், உடனடியாக செயல்பட்ட  அதிகாரிக்கும் நமது வாழ்த்துக்கள். (பிரிண்டர் சரிவர வேலை செய்வதில்லை. UPS, GENERATOR இயங்கி பல மாதங்கள் ஆகிறது. இதை யாரும் சொல்லமாட்டார்களா?  அலுவலகத்தில் சும்மா உட்கார்ந்திருக்கவா சம்பளம்?. வீடு வீடாக போய் RPLI, SB பிடியுங்கள் என்ற குட்டி அதிகாரிகளின் கும்மாளங்களை யாரும் சொல்லமாட்டார்களா? )

       கோட்டத்தில் நடக்கின்ற விஷயங்கள் எப்படியோ  மண்டல அலுவலகத்திற்கு  தெரிந்து விடுகிறதே என்று அதிகாரிகள்
 தமக்குள்ளே   பேசி கொள்வது  வழக்கமாம் ஆனால், இப்படி உடனடியாக சென்று தடங்கல் வரும் என எதிர்பார்க்காத அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தார்களோ என்னவோ? நமக்கு தெரியாது. ஆனால்,  நமக்கு இது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. எந்தவித Reportம், Explanationம் கேட்கப்படாமல்  உடனடியாக முடிவு எடுக்கப்பட்டு,  உடனடியாக அமுல்படுத்தப்பட்ட விஷயம் நமக்கு ஆனந்த அதிர்ச்சிதான் அது. ஆம். எப்படியோ நிர்வாகத்தால் செய்யப்ப்பட்ட  அநியாயம்   ஒரு அதிகாரியால் தடுத்து  நிறுத்தபட்டத்தில் நமக்கு மகிழ்ச்சிதான்.

    இப்படி எல்லா விஷயத்திலும், எல்லா  சமயங்களிலும் அதிகாரிகள் நடந்து கொள்வார்களா?  அப்படி நடந்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என  நினைத்து பார்க்காமல் இருக்க  முடியவில்லை. பாரதத்தில், பாஞ்சாலியின்  உடையை துச்சாதனன் துகில் உரியும்  போது  கண்ணன் வந்து காப்பாற்றியதாக  கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால்,  டெல்லியில் ஒரு பெண் ....? எல்லா   சமயங்களிலும் , எல்லோரையும்  கடவுளே  ஆனாலும் வந்து  காப்பற்ற   முடியாது  என்பது தெரிகிறது.  அப்படி  இருக்கும் பொழுது  நாம்தான்  அதிகாரிகளிடம்  அதிகமாக  எதிர்   பார்க்கிறோமோ என்ற எண்ணமும்  வந்தது.  (நானே  கேள்வி .  நானே  பதில்.!).

     போகட்டும். நல்லது யார் மூலம் நடந்தால்  என்ன?. பதிவு செய்வதும், பகிர்ந்து கொள்வதும் , பாராட்டுவதும் நம் கடமையல்லவா? மீண்டும் பாராட்டுதல்களை தெரிவித்து கொள்கிறோம். எது நடந்தாலும், ஏற்று கொண்டு, மீண்டும் வேலையை தொடர்வது   நம் வழக்கம்தானே. வேலையை தொடர்வோம்  வாருங்கள்!.

    இப்படி, எப்பொழுதாவது தான் மனம் விட்டு  நாம் எல்லாம் நமக்குள் பேசி கொள்ள  முடிகிறது. அதற்குள் வேலையை  நினைவுபடுத்த வேண்டுமா? என நீங்கள்  முனுமுனுப்பது  கேட்கிறது. என்ன செய்ய?
பிழைப்பையும் சிறிது   பார்க்க வேண்டுமல்லவா?  யாரை, எங்கே வைப்பது என்று யாருக்கும்  தெரியலே .........என்னத்தை சொல்வேண்டா தம்பி .....என்ற அர்த்தமுள்ள பாடலை சொல்லி நிறைவு செய்கின்றோம்.  


குறிப்பு;  TORTURE என்று தொழிற்சங்கங்கள் சொன்னபோதெல்லாம்  கண்டு கொள்ளாத நிர்வாகம், ஒரு தொலை பேசி அழைப்புக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பது வேடிக்கைதான்.  உடல் நிலை சரியில்லை என்பதால்தான் பயிற்சி வகுப்புக்கு ஊழியரால்  வரமுடியவில்லை என்று மாநில சங்கமே எடுத்து சொன்ன போது கூட கண்டு கொள்ளாத நிர்வாகம், ஒரு தனி நபரின் வேண்டுகோளுக்கு மதிப்பு கொடுத்து நடவடிக்கை எடுத்திருப்பது வேதனைதான். தொழிற்சங்கத்தின் மூலம் வந்தால் எந்த காரியத்தையும் செய்து தர மாட்டோம்! என்பது உறுதி படுத்த பட்டிருந்தாலும் அந்த வேடிக்கையையும், வேதனையும் மீறி, ஊழியர்கள்,  நிர்வாகத்தின் அடாவடி நடவடிக்கையில் இருந்து காப்பாற்ற பட்டிருக்கிறார்கள் என்பது  நமக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய விஷயம் என்பதால் பாராட்டுவது நம் கடமை அல்லவா ? நல்லதை  பாராட்டுவதும், அல்லதை எதிர்ப்பதும் தொழிற் சங்க கடமை அல்லவா? 

 பின்குறிப்பு; வேலை நடக்கிறதா? , அல்லது முடிக்க படுகிறதா?என்பதை பற்றியெல்லாம் மேலே இருப்பவர்களுக்கு கவலை இல்லை போலும். தனக்கு கீழே இருப்பவர்கள் ,  தான் எந்த நேரமும் கண்காணிக்ககபடுகிறோம்  என்ற எண்ணத்துடன் பணி புரிய வேண்டும் என்பதுதான் மேலே இருப்பவர்களின் எண்ணம் போலும்.  இல்லாவிட்டால், இத்தனை REPORTS, இத்தனை EXPLANATION  என்று தொடர்ந்து  தொல்லை படுத்துவதன் அவசியம் என்னவாக இருக்க முடியுமாம்?? அது சரி!. மேலிடத்து பொல்லாப்பு நமக்கு எதற்கு? தனக்கு அதிகாரம் இருப்பதாக நினைத்து கொண்டு  அதிகாரிகள் செயல்படுவதும், பிறகு,  RO சொன்னது என்று மாற்றி கொள்வதும் அதிகாரிகள் பிரச்சினை.  ஆனால், தான் செய்வது சரி என்றும், நியாயம் என்றும் ஊழியர்கள் செயல் பட்டு கொண்டு, பிறகு (முடிதானெண்டலுக்கு மாற்ற பட்டது மாதிரி ) தண்டனை அனுபவிக்க கூடாது என்பதுதான் நமது கவலை.ஊழியர்களை காப்பாற்றத்தான் முடியவில்லை. எச்சரிக்கையாவது செய்து வைப்போமே!  RO-வின்  கண்படாத, அதன் கரம் தொடாத இடமே இல்லை என்று ஊழியர்களை எச்சரிப்பது தான் நமது நோக்கம். உஷார்!. உண்மைகளை சொல்லி  ஊழியர்களை எச்சரிப்பதும் நமது  தொழிற்சங்க கடமை அல்லவா? 


No comments:

Post a Comment