Thursday, July 6, 2017

GDS தோழர்களே யார் உங்களுக்காக உழைக்கிறார் என்று சிந்தியுங்கள்

POSTMAN, MTS  தேர்வுகளில் வெளிப்படையான தெரிவுமுறைக்கு  OMR  முறை கேட்டிருந்தோம். 
 (Ref .JCM Minutes No.16 Sl.no. 92 ),  வினாத்தாள் கடினமாக இருக்ககூடாது, தமிழிலும் தரப்படவேண்டும்
என்று கேட்டிருந்தோம். (Ref .JCM Minutes No.52 Sl.no.10   இதனை இலாகாவிடம்  ஆணித்தரமாக பேசி,  
வினாத்தாள் சுலபமாக விடை அளிக்கும் முறையிலும், தமிழிலும், OMR முறையிலும் நடத்த வேண்டும்,
என்ற ஆர்டரை  NFPE பெற்று தந்ததை மறுக்க முடியுமா?   ( Ref.OM No.45-14/2012 SPB -1 Dt.17-01-2014 ) இன்றைக்கு
 இவ்வளவு GDS ஊழியர்கள் நம்பிக்கையோடு   EXAM எழுதுகிறார்களே,  இதற்கு முன்பு இது போல் உண்டா?

NFPE GDS சங்கம்,  NFPE சம்மேளனத்தை தொடர்ந்து வலியுறுத்தியதால் தான்  GDS TO P.A  தேர்வுகளில் 
GDS ஊழியர்கள் 1000 மார்க் எடுத்திருக்கவேண்டும்,  60% மார்க் எடுத்திருக்க வேண்டும், என்று இருந்த
முட்டுகட்டைகளை  NFPE GDS,   NFPE  P3 தமிழ் மாநில செயலாளர்கள் தோழர் தன்ராஜ் அவர்கள்,  
தோழர். ஜெ.ராமமூர்த்தி  அவர்கள் அன்றைய செகரட்டரி  ஜெனரல் தோழர்.கிருஷ்ணன் அவர்கள்
மூலம் இலாகாவில் பேசி GDS ஊழியர்கள் உட்பட அனைத்து அடிமட்ட சமுதாயமும் கலந்து கொள்ளும்படி  
P.A  தேர்வில் ஒருபுரட்சியே செய்து  மார்க் என்பது தேவையில்லை, பாஸ்
செய்திருந்தாலே போதும் என்ற ஆர்டரை NFPE பெற்று தந்ததை மறக்காதீர் தோழர்களே !
 (JCM Minutes No.22 Sl.no.04 Dt.27-11-2013 & Ref.GSR No.62E,F.No.37-47/2010 SPB -1 Dt.27-01-14 )


எல்லாவற்றிலும் மேலாக  பல டிவிசன்களில் 1-1-2006-க்குபிறகு GDSBPM-ஆகஅப்பாய்மெண்ட் ஆன
பலருக்கு  அதற்கு இணையான புதிய  TRCA fixation செய்யப்படாமல் Lowest TRCA slab 2745 தான் பெற்று
வந்தனர். இது குறித்து NFPE சம்மேளனம் அப்போதைய மினிஸ்டர் சச்சின்பைலட் அவர்களிடம்
தொடர்ந்து முறையிட்டதால் திரு .V.P.சிங் அவர்கள் தலைமையில் 2-2-2012 அன்று ஆபீசர்கள் கமிட்டி 
 அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி ஆய்வு நடத்தி    1-1-2006க்கு பிறகு GDS ஆக அப்பாய்மெண்ட் ஆன
 அன்று அந்த போஸ்ட் எந்த TRCA slab கீழே வருகிறதோ ,அதற்குரிய சம்பளம் பிக்ஸ் செய்யப்பட
வேண்டும் என பரிந்துரை செய்தது. (Ref. Report of v.p singh committee,Dte no.5-1/07-WS-1 Dated on 27-4-2012)  
இதை தொடர்ந்து தான்  16-7-2012 அன்று clarification on fixation of newly appointed GDS  குறித்து டைரக்ரேட்
ஆர்டர்(Ref.Dte,Lr.no5-1/07-WS-1on16-07-12)  வெளியிடப்பட்டு, இந்த பரிந்துரையை உறுதிசெய்தது.
  
இது குறித்து பல்வேறு கோட்ட, மாநில, சங்க கூட்டங்களில் வலியுறுத்தி வந்தோம். இதை அறிந்த
நமது தலைவர்,  தோழர் K.V.S அவர்கள்,  தோழர் J.R  அவர்களிடம் இது குறித்து  அப்போதைய
PMG- CCR, மெர்வின் அலெக்ஸாண்டர்  அவர்களிடம் பேச கூறியிருந்தார்.   தோழர் தன்ராஜ்
அவர்கள், தோழர் J.R அவர்கள் நேரில் சென்று மிகுந்த முயற்சி எடுத்து விளக்கி கூறி பேசியதன்
விளைவாகவே 12 டிவிசன்களில்  குறிப்பாக சென்னை,  பாண்டிச்சேரி, வேலூர், அரக்கோணம், 
செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலையில்  உள்ள அனைத்து GDS ஊழியர்களுக்கும் 
குறிப்பாக புதிய BPM தோழர்களுக்கு  3660 TRCA,  புதிய EDDA தோழர்களுக்கு    4220 TRCA  வரை
 புதிய சம்பளமாக பிக்ஸ் செய்யப்பட்டது.  இது யாரால் வந்தது ?  நமக்காக  NFPE  பெற்று தந்ததை
மறுக்க முடியுமா ?   (Ref.no.A/GDS/Dlgs@Pondicherry Dvn.Dt.on-10-7-2013)

மேற்கண்ட அகில இந்திய பிரச்சனைகள் எதாவது ஒன்றாவது நாங்கள் டைரக்ரேட்டில் அல்லது
மாநில அளவில்  பேசிவாங்கினோம், என்று மகாதேவய்யாவால் ஆதாரத்துடன் கூறமுடியுமா? 
 பிரச்சனைகளுக்காக டைரக்ரேட்டில் நேரில் போய் பேசி உள்ளாரா ? ஆனால், நமது தோழர்,
பாண்டுரங்கராவ் அவர்கள்  NFPE  தலைவர்களுடன் சென்று பேசிவருகிறார்.

 
GDS க்கு சாதகமான ஆர்டர்கள் வந்தால் தன்னால் வந்தது என்று கூறுவதும், வரவில்லை என்றால்
 கிளார்க் யூனியன் தடுத்து விட்டதாக தொடர்ந்து நாக்கூசாமல் பேசிவருகிறார் மகாதேவய்யா.   
கடந்த 14  ஆண்டு காலமாக  அவர்தானே அங்கீகரிக்கப்பட்ட சங்கத்திற்கு பொதுசெயலாளராக  இருந்து
வந்தார். அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லையா ?

  இவர் , NFPE சம்மேளனம் ஸ்டிரைக், போராட்டம் என்று அறிவித்தால்,  உடனே தானும் போட்டிக்கு
 தனியாக ஸ்டிரைக்,  போராட்டம்  அறிவித்து வருகிறாரே ஒழிய,  ஊழியர்களை முன்னுக்கு
கொண்டுவரணும் என்பதில் அக்கறை இல்லாதவர் என்பதை உணருங்கள் தோழர்களே..


Wednesday, July 5, 2017


தோழர்களே! வணக்கம்.
    கடந்த 02.07.2017 அன்று மாநில கோட்ட /கிளைச் செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் பெரம்பலூர் Iffaw கல்வி மையத்தில் மாநில தலைவர் தோழர் S.ராமராஜ் தலைமையில் துவங்கியது. GDS ஊதியக்குழு தற்போதைய நிலை மற்றும்  காலதாமதம் குறித்தும், தற்போது புதிய உறுப்பினர் சேர்ப்பு உள்ளிட்ட கோரிக்கை விவாத பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டு இக் கூட்டம் நடைபெற்றது.

       திருவரங்கம் அஞ்சல் 3 தலைவரும் பெரம்பலூர் தலைமை அஞ்சலக தலைவருமான தோழர் K. ராஜ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். சம்மேளன செயல் தலைவர் தோழர் A. மனோகரன், அஞ்சல் 3 மண்டல தலைவர் தோழர் R.குமார், அஞ்சல் 4 மண்டல செயலர் தோழர S.கோவிந்தராஜ் மற்றும் அஞ்சல் 3. அஞ்சல் 4 கோட்ட செயலர்கள் கலந்துகொண்டு  சிறப்பாக விளக்க உரையாகவும்  நடைபெறும் உறுப்பினர் சரிபார்ப்பில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு அதிக உறுப்பினர்களை சேர்ப்பதாகவும் உறுதியளித்தனர். அவர்களுக்கு மாநில சங்கம் நன்றி கூறுகிறது.

   கோட்ட , கிளை மற்றும் மாநில நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் உள்ள தலமட்ட குறைகள் மற்றும் உறுப்பினர் சரிபார்ப்பில் ஊழியர்களின் ஒத்துழைப்பு உள்ளிட்ட சாதக பாதகங்களை விளக்கி கூறினார்கள். அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் உதவிகள் மாநில சங்கத்தால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில சங்க நிர்வாகிகள் மற்றும் மாநிலச் செயலர் தங்கள் கோட்ட / கிளைகளுக்கு நேரிடையாக வர இருப்பதாகவும் மாநிலச் செயலரால் அறிவிக்கப்பட்டது. கூட்டத்திற்கு ஒரு சில கோட்ட செயலர்கள் வர இயலாததை தெரிவித்ததை தவிர 90 சதவிகித செயலாளர்கள் கலந்துகொண்டனர். 

    இறுதியாக மாநிலச் செயலர்  ஊதியக்குழு தொடர்பாக தற்போதைய நிலை,  அகில இந்திய சங்க செயல்பாடுகள் மற்றும் NFPE சம்மேளனம் GDS  ஊதியக்குழு அறிக்கை வெளிவர எடுக்கப்பட்ட முயற்சி மற்றும் அதன் ஆணை வெளியிட தற்போது முழுமுயற்சி எடுத்து வருவதாக விரிவான உரையுடன் விளக்கமளித்தார் மேலும் நடைபெறும் உறுப்பினர் சரிபார்ப்பில் தமிழகத்தில் சுமார் 70% உறுப்பினர்களை சேர்த்திடவேண்டும் எனவும் அதற்கு அஞ்சல் 3,அஞ்சல் 4 உள்ளிட்ட சங்கங்கள் துணையிருப்பார்கள் என கூறினார்.
  
     இறுதியாக நமது மாநில பொருளர் தோழர் R. விஷ்னுதேவன் தனது உரையுடன் அனைவருக்கும் நன்றி கூறி மாலை 3 மணியளவில் கூட்டம் நிறைவடைந்தது.
 அனைத்து தோழர்களுக்கும் மாநிலச் சங்கம் நன்றி கலந்த போராட்ட வாழ்த்துகளை  தெரிவித்துக்கொள்கிறது.
     


 

Monday, July 3, 2017


GDS Committee -ல் GDS ஊழியர்களின் வயிற்றில் அடிக்கும்,தோழர் மகாதேவய்யா.


தோழர்களே ! இந்த மகாதேவய்யா மோசமான ஒரு ஐடியாவை GDS Committee - யிடம் வழங்கி உள்ளார்.  அது என்ன தெரியுமா?,. “ 50 வயதுக்கு மேற்பட்ட GDS ஊழியர்களால் HAND HELD DEVICEஐ ஆபரேட் பண்ண முடியாது. எனவே HAND SHAKE SCHEME கொண்டுவந்து வாலண்டரி ரிடைர்மென்ட் கொடுக்க கூறியுள்ளார்” . இது முறையா தோழர்களே. இது GDS ஊழியர்களின் வயிற்றில் அடிக்கும் செயல் அல்லவா.இதை காரணம் காட்டி எப்படியாவது வேலையை விட்டு போக சொல்ல மாட்டார்களா? இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். கொஞ்சம் பேரால் சரிவர  இயக்க முடியாது தான், நாங்கள் மறுக்கவில்லை.அதற்காக இப்படி ஒரு கோரிக்கை வைக்கலாமா? கம்ப்யூட்டரில் 50 வயதுக்கு மேலே எந்த துறையிலும் யாருமே வேலை செய்யலையா? இதுதான் GDS ஊழியர்களுக்காக உழைக்கும் லட்சணமா? 



50 வயதுக்கு மேற்பட்ட GDS ஊழியர்களுக்கு  HAND SHAKE SCHEME கொண்டுவந்து வாலண்டரி ரிடைர்மென்ட் கொடுக்க கூறிவிட்டு, 50 வயதுக்கு மேற்பட்ட GDS ஊழியர்களை சங்கத்திலே சேர சொல்லி கேட்பது எப்படி? இப்ப கையெழுத்து வாங்கிவிட்டு அப்புறம் கைவிரித்து விடலாம் என்ற திட்டமா?. NFPE, சங்கமானது GDS ஊழியர்களின் வேலை பாதுகாப்பினை  அனைத்து சங்கங்களுடன் இணைந்து JCA, NJCA  அமைத்து  போராடி காத்து நிற்கும், தோழர்களே! அதன்பொருட்டு  NFPE -ன் உறுப்பு சங்கமாம் ALL INDIA POSTAL EMPLOYEES UNION- GDS சங்கத்தில் சேருங்கள் தோழர்களே. ஒன்றுபடுவோம், தோழர்களே!  வெற்றி பெறுவோம் தோழர்களே .
“ JOIN NFPE , FOLLOWS NFPE”

தோழர் மகாதேவய்யாவின் ஒரு பக்கத்தை பாருங்கள் தோழர்களே

Last date for upation of PLI/RPLI policies in McCamish is 15.07.2017


Saturday, July 1, 2017


ALL INDIA POSTAL EMPLOYEES UNION- GDS சங்கத்தில் சேருங்கள் தோழர்களே !
GDS BPM-க்கு  B.O கையாள்வதற்கு தரப்படும் 14 பாயிண்ட் என்பது 42 பாயிண்ட் ஆக மாற்றி வழங்கும்படி  புள்ளி விபரங்களோடு டைரக்ரெட்டில் கேட்டிருந்தோம் (PF/GDS/2013-14 dated on 18-12-2013).

     
அதாவது கணினிமயமாகும் முன்னர்  ரிஜிஸ்தர் தபால், பார்சல், மணியார்டர் எல்லாம் 4  எழுத்தில் கையால் எழுதி வந்தோம். தற்போது ரிஜிஸ்தர் தபால், பார்சல், ஸ்பீடு தபால் 13 எழுத்தில் கையால் எழுதி   வருகிறோம். மணியார்டருக்கு 18 எழுத்தில் கையால் எழுதி  வருகிறோம்.  முன்பு RPLI POLICY,  SB, RD, TD A/C, தொடங்க போட்டோ தேவையில்லை. KYC முறையில் ஐ.டி புரூப், அட்ரஸ் புரூப் சரிபார்த்து A/C தொடங்க 15, 20 நிமிடங்கள் ஆகிவருவதை சுட்டிக்காட்டினோம்.    இதன் மூலம் 42 பாயிண்ட் கிடைத்து,   நோ-டெலிவரி  B.O உள்பட அனைத்து GDS BPM-க்கும் அதிகபட்ச 4575 TRCA சம்பளம் வரை கிடைத்திருக்கும். ஆனால், இதை கிடைக்கவிடாமல், அஞ்சல் நிர்வாகத்திடம் எங்களது சங்கம் தவிர வேறு எவரும் பேசமுடியாது என்று ஆணைபெற்று     ( No.16-09/2014-SR) சம்பளம் உயர வழிஇல்லாமல் ஒவ்வொரு டிவிசனிலும் GDS BPM –ல் 50 பேருக்கு சம்பளகுறைப்பு.  50 பேருக்கு அதே குறைந்தபட்ச (2745 ) சம்பளம்  என்று வயிற்றில் அடித்த மகாதேவையா யூனியனை. உங்களால் மறக்க முடியுமா?


டைரக்டரேட் ஆர்டரில்  மிக தெளிவாக கூறியுள்ளார்கள், W.r.t no 5-1/2007-WS-1 dated   15.10.2012—protection of TRCA of GDSBPM “ ஒருவருடம் சம்பளம் குறையாது, மீண்டும் புள்ளி விபரம் எடுக்கும் போதும் குறையும்பட்சத்தில் எந்த TRCA சம்பள விகிதத்தில் வருகிறாரோ அந்த TRCA சம்பளத்தில் அப்போது வாங்கிய சம்பளத்திற்கு இணையான MINIMUM, MAXIMUM TRCA சம்பள விகிதத்தில் தான் பிக்ஸ் செய்ய சொல்லி உள்ளார்கள். இதனை நாங்கள்  PMG அவர்களிடம் நேரில் விளக்கி பேசினோம்.   மற்றவர்கள் போல் நாங்களும் கடிதம் எழுதிவிட்டோம், அதுவாக வரும்மென்று இலவு காத்த கிளியாக இருந்து வருவது NFPE GDS அல்ல. GDS  ஊழியர்களுக்காக என்றுமே போராடுவது NFPE GDS தான். சிந்தித்து பார்த்து ALL INDIA POSTAL EMPLOYEES UNION- GDS  சங்கத்தில் சேருங்கள் தோழர்களே.

கோரிக்கைகளை முன்வைத்து!! 

ஆர்ப்பாட்டம் செய்வது  NFPE !!!!!!
தர்ணா நடத்துவது   NFPE !!!!!! 
பேரணி நடத்துவது  NFPE !!!!!!  
 முற்றுகை போராட்டம் நடத்துவது  NFPE !!!!!! 
டெல்லியில்போராடுவது NFPE!!!! 
JCA அமைத்து போராடுவது  NFPE !!!!!  
 NJCA அமைத்து போராடுவது  NFPE !!!!!! 
ஊழியர் விரோத அரசை கண்டித்து போராடுவது  NFPE !!!!!
ஊழியர்களுக்காக என்றுமே போராடுவது NFPE !!!!!! 
வேலைநிறுத்தத்தின் மூலம் வெற்றிகள்  பலகண்டது  NFPE !!!!!!  
ஒன்றுபடுவோம், வெற்றிபெறுவோம் தோழர்களே !!!!!!

NFPE தனது உறுப்பு சங்கமாம் ALL INDIA POSTAL EMPLOYEES UNION- GDS சங்கத்திற்கு  அதாவது மிக அதிக ஊழியர்களை கொண்ட சங்கமாக அகில இந்திய அளவில் வரவேண்டும் என்ற நோக்கோடு அதிக ஊழியர்களை சேர்த்திட உதவிடுமாறு மூத்த முன்னணி தோழர்களை மாநில சங்கம் கேட்டுக்கொள்கிறது.

“ JOIN NFPE , FOLLOWS NFPE”




DIRECT PA/SA - SSC RESULTS 2015



SSC RESULTS 2015 : LIST OF THE CANDIDATES QUALIFIED FOR DOCUMENT VERIFICATION FOR THE POST OF POSTAL ASSISTANT/SORTING ASSISTANT


Combined Higher Secondary (10+2) Examination, 2015 - Declaration of result of DEST/ Typing Test for appearing in document verification

DateExamination name and yearWrite UpResultMarks
30th June 2017COMBINED HIGHER SECONDARY LEVEL (10+2) EXAMINATION,2015 - LIST OF THE CANDIDATES QUALIFIED FOR DOCUMENT VERIFICATION FOR THE POST OF POSTAL ASSISTANT/SORTING ASSISTANT/LDC (IN ROLL NO ORDER)click hereclick her