தோழர்களே! வணக்கம்.
கடந்த 02.07.2017 அன்று மாநில கோட்ட /கிளைச் செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் பெரம்பலூர் Iffaw கல்வி மையத்தில் மாநில தலைவர் தோழர் S.ராமராஜ் தலைமையில் துவங்கியது. GDS ஊதியக்குழு தற்போதைய நிலை மற்றும் காலதாமதம் குறித்தும், தற்போது புதிய உறுப்பினர் சேர்ப்பு உள்ளிட்ட கோரிக்கை விவாத பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டு இக் கூட்டம் நடைபெற்றது.
திருவரங்கம் அஞ்சல் 3 தலைவரும் பெரம்பலூர் தலைமை அஞ்சலக தலைவருமான தோழர் K. ராஜ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். சம்மேளன செயல் தலைவர் தோழர் A. மனோகரன், அஞ்சல் 3 மண்டல தலைவர் தோழர் R.குமார், அஞ்சல் 4 மண்டல செயலர் தோழர S.கோவிந்தராஜ் மற்றும் அஞ்சல் 3. அஞ்சல் 4 கோட்ட செயலர்கள் கலந்துகொண்டு சிறப்பாக விளக்க உரையாகவும் நடைபெறும் உறுப்பினர் சரிபார்ப்பில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு அதிக உறுப்பினர்களை சேர்ப்பதாகவும் உறுதியளித்தனர். அவர்களுக்கு மாநில சங்கம் நன்றி கூறுகிறது.
கோட்ட , கிளை மற்றும் மாநில நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் உள்ள தலமட்ட குறைகள் மற்றும் உறுப்பினர் சரிபார்ப்பில் ஊழியர்களின் ஒத்துழைப்பு உள்ளிட்ட சாதக பாதகங்களை விளக்கி கூறினார்கள். அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் உதவிகள் மாநில சங்கத்தால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில சங்க நிர்வாகிகள் மற்றும் மாநிலச் செயலர் தங்கள் கோட்ட / கிளைகளுக்கு நேரிடையாக வர இருப்பதாகவும் மாநிலச் செயலரால் அறிவிக்கப்பட்டது. கூட்டத்திற்கு ஒரு சில கோட்ட செயலர்கள் வர இயலாததை தெரிவித்ததை தவிர 90 சதவிகித செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
இறுதியாக மாநிலச் செயலர் ஊதியக்குழு தொடர்பாக தற்போதைய நிலை, அகில இந்திய சங்க செயல்பாடுகள் மற்றும் NFPE சம்மேளனம் GDS ஊதியக்குழு அறிக்கை வெளிவர எடுக்கப்பட்ட முயற்சி மற்றும் அதன் ஆணை வெளியிட தற்போது முழுமுயற்சி எடுத்து வருவதாக விரிவான உரையுடன் விளக்கமளித்தார் மேலும் நடைபெறும் உறுப்பினர் சரிபார்ப்பில் தமிழகத்தில் சுமார் 70% உறுப்பினர்களை சேர்த்திடவேண்டும் எனவும் அதற்கு அஞ்சல் 3,அஞ்சல் 4 உள்ளிட்ட சங்கங்கள் துணையிருப்பார்கள் என கூறினார்.
இறுதியாக நமது மாநில பொருளர் தோழர் R. விஷ்னுதேவன் தனது உரையுடன் அனைவருக்கும் நன்றி கூறி மாலை 3 மணியளவில் கூட்டம் நிறைவடைந்தது.
அனைத்து தோழர்களுக்கும் மாநிலச் சங்கம் நன்றி கலந்த போராட்ட வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.
No comments:
Post a Comment