Thursday, July 6, 2017

GDS தோழர்களே யார் உங்களுக்காக உழைக்கிறார் என்று சிந்தியுங்கள்

POSTMAN, MTS  தேர்வுகளில் வெளிப்படையான தெரிவுமுறைக்கு  OMR  முறை கேட்டிருந்தோம். 
 (Ref .JCM Minutes No.16 Sl.no. 92 ),  வினாத்தாள் கடினமாக இருக்ககூடாது, தமிழிலும் தரப்படவேண்டும்
என்று கேட்டிருந்தோம். (Ref .JCM Minutes No.52 Sl.no.10   இதனை இலாகாவிடம்  ஆணித்தரமாக பேசி,  
வினாத்தாள் சுலபமாக விடை அளிக்கும் முறையிலும், தமிழிலும், OMR முறையிலும் நடத்த வேண்டும்,
என்ற ஆர்டரை  NFPE பெற்று தந்ததை மறுக்க முடியுமா?   ( Ref.OM No.45-14/2012 SPB -1 Dt.17-01-2014 ) இன்றைக்கு
 இவ்வளவு GDS ஊழியர்கள் நம்பிக்கையோடு   EXAM எழுதுகிறார்களே,  இதற்கு முன்பு இது போல் உண்டா?

NFPE GDS சங்கம்,  NFPE சம்மேளனத்தை தொடர்ந்து வலியுறுத்தியதால் தான்  GDS TO P.A  தேர்வுகளில் 
GDS ஊழியர்கள் 1000 மார்க் எடுத்திருக்கவேண்டும்,  60% மார்க் எடுத்திருக்க வேண்டும், என்று இருந்த
முட்டுகட்டைகளை  NFPE GDS,   NFPE  P3 தமிழ் மாநில செயலாளர்கள் தோழர் தன்ராஜ் அவர்கள்,  
தோழர். ஜெ.ராமமூர்த்தி  அவர்கள் அன்றைய செகரட்டரி  ஜெனரல் தோழர்.கிருஷ்ணன் அவர்கள்
மூலம் இலாகாவில் பேசி GDS ஊழியர்கள் உட்பட அனைத்து அடிமட்ட சமுதாயமும் கலந்து கொள்ளும்படி  
P.A  தேர்வில் ஒருபுரட்சியே செய்து  மார்க் என்பது தேவையில்லை, பாஸ்
செய்திருந்தாலே போதும் என்ற ஆர்டரை NFPE பெற்று தந்ததை மறக்காதீர் தோழர்களே !
 (JCM Minutes No.22 Sl.no.04 Dt.27-11-2013 & Ref.GSR No.62E,F.No.37-47/2010 SPB -1 Dt.27-01-14 )


எல்லாவற்றிலும் மேலாக  பல டிவிசன்களில் 1-1-2006-க்குபிறகு GDSBPM-ஆகஅப்பாய்மெண்ட் ஆன
பலருக்கு  அதற்கு இணையான புதிய  TRCA fixation செய்யப்படாமல் Lowest TRCA slab 2745 தான் பெற்று
வந்தனர். இது குறித்து NFPE சம்மேளனம் அப்போதைய மினிஸ்டர் சச்சின்பைலட் அவர்களிடம்
தொடர்ந்து முறையிட்டதால் திரு .V.P.சிங் அவர்கள் தலைமையில் 2-2-2012 அன்று ஆபீசர்கள் கமிட்டி 
 அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி ஆய்வு நடத்தி    1-1-2006க்கு பிறகு GDS ஆக அப்பாய்மெண்ட் ஆன
 அன்று அந்த போஸ்ட் எந்த TRCA slab கீழே வருகிறதோ ,அதற்குரிய சம்பளம் பிக்ஸ் செய்யப்பட
வேண்டும் என பரிந்துரை செய்தது. (Ref. Report of v.p singh committee,Dte no.5-1/07-WS-1 Dated on 27-4-2012)  
இதை தொடர்ந்து தான்  16-7-2012 அன்று clarification on fixation of newly appointed GDS  குறித்து டைரக்ரேட்
ஆர்டர்(Ref.Dte,Lr.no5-1/07-WS-1on16-07-12)  வெளியிடப்பட்டு, இந்த பரிந்துரையை உறுதிசெய்தது.
  
இது குறித்து பல்வேறு கோட்டமாநிலசங்க கூட்டங்களில் வலியுறுத்தி வந்தோம். இதை அறிந்த
நமது தலைவர்,  தோழர் K.V.S அவர்கள்,  தோழர் J.R  அவர்களிடம் இது குறித்து  அப்போதைய
PMG- CCR, மெர்வின் அலெக்ஸாண்டர்  அவர்களிடம் பேச கூறியிருந்தார்.   தோழர் தன்ராஜ்
அவர்கள்தோழர் J.R அவர்கள் நேரில் சென்று மிகுந்த முயற்சி எடுத்து விளக்கி கூறி பேசியதன்
விளைவாகவே 12 டிவிசன்களில்  குறிப்பாக சென்னை பாண்டிச்சேரிவேலூர், அரக்கோணம்
செங்கல்பட்டுவிழுப்புரம்திருவண்ணாமலையில்  உள்ள அனைத்து GDS ஊழியர்களுக்கும் 
குறிப்பாக புதிய BPM தோழர்களுக்கு  3660 TRCA,  புதிய EDDA தோழர்களுக்கு    4220 TRCA  வரை
 புதிய சம்பளமாக பிக்ஸ் செய்யப்பட்டது.  இது யாரால் வந்தது ?  நமக்காக  NFPE  பெற்று தந்ததை
மறுக்க முடியுமா ?   (Ref.no.A/GDS/Dlgs@Pondicherry Dvn.Dt.on-10-7-2013)

மேற்கண்ட அகில இந்திய பிரச்சனைகள் எதாவது ஒன்றாவது நாங்கள் டைரக்ரேட்டில் அல்லது
மாநில அளவில்  பேசிவாங்கினோம், என்று மகாதேவய்யாவால் ஆதாரத்துடன் கூறமுடியுமா
 பிரச்சனைகளுக்காக டைரக்ரேட்டில் நேரில் போய் பேசி உள்ளாரா ஆனால், நமது தோழர்,
பாண்டுரங்கராவ் அவர்கள்  NFPE  தலைவர்களுடன் சென்று பேசிவருகிறார்.

 
GDS க்கு சாதகமான ஆர்டர்கள் வந்தால் தன்னால் வந்தது என்று கூறுவதும், வரவில்லை என்றால்
 கிளார்க் யூனியன் தடுத்து விட்டதாக தொடர்ந்து நாக்கூசாமல் பேசிவருகிறார் மகாதேவய்யா.   
கடந்த 14  ஆண்டு காலமாக  அவர்தானே அங்கீகரிக்கப்பட்ட சங்கத்திற்கு பொதுசெயலாளராக  இருந்து
வந்தார். அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லைய ?

  இவர் , NFPE சம்மேளனம் ஸ்டிரைக்போராட்டம் என்று அறிவித்தால் உடனே தானும் போட்டிக்கு
 தனியாக ஸ்டிரைக் போராட்டம்  அறிவித்து வருகிறாரே ஒழிய,  ஊழியர்களை முன்னுக்கு
கொண்டுவரணும் என்பதில் அக்கறை இல்லாதவர் என்பதை உணருங்கள் தோழர்களே..


No comments:

Post a Comment