Limited Transfer Facility for all categories of Gramin Dak Sevaks (GDS).
* ஏற்கனவே இருந்த நடைமுறையில் மாற்றமில்லை. சம்பளம் குறைக்கப்படாது என்பது வரவேற்க வேண்டிய ஒன்று. இலாகா ஊழியர்களைப்போல் வருடத்திற்கு குறிப்பிட்ட மாதத்தில் மட்டுமே டிரான்ஸ்பர் என்பதும் வரவேற்கத்தக்கது. .Level 1 சம்பளம் பெறுபவர்கள் டிரான்ஸ்பர் மூலம் level 2-க்கு போக முடியாது என்பது வரவேற்கத்தக்கது. ஆனால், ABPM BPMஆக முடியாது என்பதை மாற்ற வேண்டும்.*
*ஆண் GDS ஊழியர்களுக்கு தங்கள் பணிக்காலத்தில் ஒரே ஒரு முறையும் பெண் GDS ஊழியர்களுக்கு 2 முறையும் பணிமாறுதல் வழங்கப்படும்.*
*GDS ஊழியர்கள் தங்களுடைய வேண்டுகோளின்படி தனது கணவன்/மனைவி குடியிருக்கும் கிராமம்/கோட்டம் ஆகியவற்றிற்கும் மருத்துவசிகிச்சை பெறுவதற்கு மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் இடம் ஆகியவற்றுக்காகவும் பணி மாறுதல் கோரலாம்.*
*பணிமாறுதல் கோருவதற்கு GDS ஊழியர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி முடித்து இருக்க வேண்டும்.*
*PUT OFF DUTY காலத்தில் உள்ளவர்களுக்கும் காவல்துறை/நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களுக்கும் பணிமாறுதல் வழங்கப்படாது.*
*பணிமாறுதல் பெறும் GDS ஊழியர்கள் இலாகாபதவி உயர்வு தேர்வுகள் எழுதுவதற்கு தங்கள் முந்தைய பதவியின் பணிக்காலத்தையும்* *சேர்த்துக் கொள்ளலாம்.*
*ஊதியஉயர்வுகளுக்கும் இது பொருந்தும்.*
*எக்காரணத்தைக்கொண்டும் முந்தைய இடங்கள்/கோட்டங்களுக்கு மீண்டும் பணிமாறுதல் கோரக் கூடாது.*
*தங்களது சொந்த கோட்ட/உட்கோட்ட /Unit தவிர மற்ற இடங்களுக்கு பணி மாறுதல் கோரினால் பணி மாறுதல் பெற்றுச் செல்லும் இடத்தில் உள்ள GDS ஊழியர்களில் பணிமாறுதல் பெறும் GDS ஊழியர் ஜூனியராக கருதப்படுவார்.*
*பணிமாறுதல் பெறும் ஊழியர்களுக்கு TRCA குறைக்கப்படாது.*
*மேலும் இதுவரை GDS ஊழியர் பெற்ற ஊதியஉயர்வுகளும் கணக்கில் கொள்ளப்படும்.*
*மண்டல அளவில் கேட்கப்படும் பணி மாறுதல்களுக்கு அந்த மண்டல அஞ்சல் துறை தலைவரும்(PMG)*
*மாநில அளவில் கேட்கப்படும் பணி மாறுதல்களுக்கு மாநில முதன்மை அஞ்சல் துறை தலைவரும்(CPMG),
இரண்டு மாநிலங்களுக்கு இடையே கேட்கப்படும் பணிமாறுதல்களுக்கு சம்பந்தப்பட்ட இரண்டு மாநிலங்களின் முதன்மை அஞ்சல் துறைத் தலைவர்களும் பணிமாறுதல்களுக்கான ஒப்புதல் வழங்கும் அதிகாரிகளாக இருப்பார்கள்.*
*ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் பணி மாறுதலுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும்.*
*பணி மாறுதல் கோரும் GDS ஊழியர்கள் தங்களுடைய கோட்ட தலைமை அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட விண்ணப்பத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.*
*கோட்ட தலைமை அதிகாரிகள் தாங்கள் பெற்ற விண்ணப்பங்களை பரிந்துரைகள் செய்து உரிய வழிமுறையாக பணிமாறுதல் ஒப்புதல் வழங்கும் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பார்கள்.*
*பணி மாறுதலுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் GDS ஊழியர்களின் பணி மூப்பு அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு பணிமாறுதல் உத்தரவுகள் ஜூலை மாதத்தில் வழங்கப்படலாம்.*
*மாநில /மண்டல /கோட்ட அலுவலகங்களில் வரையறுக்கப்பட்ட பதிவேட்டில் அனைத்து GDS ஊழியர்களின் பணி மாறுதல் சம்பந்தப்பட்ட விவரங்கள் அனைத்தும் பராமரிக்கப்பட வேண்டும்.*
No comments:
Post a Comment