Monday, January 7, 2019

AIPEU GDS TN (NFPE) அறிக்கை.

தோழர்களே !வணக்கம்.

இன்று  நடைபெறும் வேலை நிறுத்தம் ஊழியர் வர்க்கத்திற்கும், ஆளும் வர்க்கத்தினருக்கான போராட்டம். நமக்கு( GDS)தற்போது வழங்கிய 3 ஆணைகளும்  (Transfer, VRS, Special leave 5 days) இவை திரு  கமலேஷ் சந்திரா ஊதியக்குழு அறிக்கைக்கு எதிரான ஆணைகள் ஆகும்.

 Transfer-பணியிட மாறுதல் நடைமுறை  ஏற்கனவே உள்ளது தான். பணியிட மாறுதல் என்பது மாநிலஅதிகாரத்திலிருந்து   மண்டல அதிகாரமாக மாற்றப்பட்டுள்ளது. அவ்வளவு தான். ஆனால் 14,500 சம்பளம் வாங்குபவர் 14,500 சம்பளம் உள்ள இடத்திற்கு மட்டுமே பணியிட மாறுதல் என்பதும்,12,000 சம்பளம் வாங்குபவர் 12,000சம்பளம் உள்ள இடத்திற்கு மட்டுமே பணியிட மாறுதல் என்பதும்,ABPMக்கு ABPM இடத்திற்கு மட்டுமே பணியிட மாறுதல் என்பதும் இருப்பதையும் பறிக்கும் செயல்.      
     
VRS-விருப்ப ஓய்வு,  புதிதாக அறிவிக்கப்பட்ட 1,50,000ரூபாய் இல்லையாம்.,பணிபுரிந்த வருடங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1500வீதம் வேண்டுமானால் தருவார்களாம்.வேறு  கூடுதல் பணப்பலனும் இல்லாமல், வாரிசுக்கு வேலை வழங்க ஊதியக்குழு பரிந்துரைத்தும் அரசு  ஏற்க மறுத்து ஊழியருக்கு எதிராக ஆணை வழங்கி உள்ளது.
            
Spl leave 5 days-   BPM லீவு போட்டால் ABPM அந்த வேலையை சேர்த்து பார்க்க வேண்டும். ABPM லீவு போட்டால் BPM டெலிவரி வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டும். ஒருவர் வேலையை மற்றுமொருவர் 10 மணி நேரம் வேலை பார்க்க வைத்து அவரது உழைப்பை சுரண்டி நாம் லீவு பெறுவது என்பது தான் தற்போது வந்த ஆணை.  ஊழியர் விரோத ஆணைகளாக மாற்றி ஏற்கனவே  உள்ள முறையே மீண்டும் ஆணைகளாக. வழங்குவதை எதிர்த்து ்தான் இந்த வேலை நிறுத்தம்! இன்று  அல்ல. நாளை நாம் பெறுவதற்கான வேலை நிறுத்தம்.

ஆகவே  அனைத்து ஊழியர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமாறு மாநிச்சங்கம் கேட்டுகொள்கிறது. கோட்ட / கிளைச் செயலர்கள் மற்றும் மாநிலச்  சங்க நிர்வாகிகள் தாங்கள் முழு கவணம் செலுத்தி 100% வேலை நிறுத்தம் வெற்றிபெறச் செய்ய வேண்டுமாறு மாநிலச் சங்கம்  கேட்டுக்கொள்கிறது .. மாநிலச்செயலர், தமிழ் மாநிலம் AIPEU GDS TN.






No comments:

Post a Comment