days in a calendar year for all categories of GDS
*GDSஊழியர்களுக்கு அவசரகால விடுப்பு(EMERGENCY LEAVE) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அவசரகால விடுப்பு 01.01.2019 முதல் அமலுக்கு வருகிறது.*
*1.அவசரகால விடுப்பினை ஒரு காலண்டர் ஆண்டில் 5 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம்.*
*2.ஒரே நேரத்தில் அதிகபட்சமாக இரண்டு நாட்கள் மட்டுமே அவசரகால விடுப்பு எடுத்துக்கொள்ள முடியும்.*
*3. அவசரகால விடுப்புகளுக்கு பதிலிகள் (SUBSITUTE ) நியமிக்கப்படக் கூடாது. இரண்டு GDS ஊழியர்கள்(BPM- ABPM ) உள்ள அலுவலகங்களில் ஒருவர் விடுப்பு எடுத்தால் மற்றவருக்கு COMBINED DUTY போட வேண்டும். தனிநபர் அலுவலகம் No Delivery B.O எனில் பதிலி நியமிக்கலாம்.*
*4. இதனை அடுத்த ஆண்டு அவசர விடுப்பு கணக்கில் சேர்க்கவோ(Carry Forward ) அல்லது பணமாக்கி(Encashment) கொள்ளவோ முடியாது.*
*5. அவசரகால விடுப்பினை எடுப்பதற்கு BPM ஊழியர்கள் கோட்ட அலுவலகத்தின்(DO) அனுமதியையும் BPMதவிர்த்த மற்ற GDSஊழியர்கள் உட்கோட்ட அதிகாரி/முதுநிலை அஞ்சல் அதிகாரி/அஞ்சல் அதிகாரி அனுமதியையும் பெற வேண்டும்.*
*6.ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்கள் அவசர விடுப்பின் முன்பு அல்லது பின்பு இருப்பின் அவைகள் அவசரகால விடுப்பிலிருந்து கழிக்கப்படாது.*
*7.இரண்டு நாட்களுக்கு மேல் அவசர விடுப்பு எடுக்கும் பட்சத்தில் அவர் விடுப்பு எடுத்த நாட்கள் அவருடைய Paid leaveலிருந்து கழிக்கப்படும். Paid Leave இல்லாத பட்சத்தில் Unauthorised Absent ஆக கருதப்பட்டு அவருக்கு TRCA வழங்கப்படாது.*
*8.அரைநாள் அவசர கால விடுப்பு எடுக்க அனுமதி இல்லை.*
*9.PUT-OFF DUTY உள்ள GDS ஊழியர்களுக்கு இந்த விடுப்பு வழங்கப்படாது.*
*10. அவசரகால விடுப்பு அளிக்கும் அதிகாரிகள் அவசரகால விடுப்புகள் குறித்த தனிப்பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்.*
No comments:
Post a Comment