*PA, POSTMAN,MTS ஆகிய தேர்வுகளுக்கு Syllabus (பாடத்திட்டம்) மற்றும் pattern of examination (தேர்வு முறை) மாற்றப்பட உள்ளது. ஆகவே இந்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டத்தின் படியே அனைத்து தேர்வுகளும் நடைபெறும்...*
GDS to MTS,postman, PA தேர்வில் காலியிடங்களை விட தேர்வு எழுதுபவர்கள் குறைவாகவே இருப்பதாலும், 60,65 மதிப்பெண்கள் எடுத்தவர்கள தேர்ச்சி பெறாமல் போவதும்,அதை விட குறைவான மதிப்பெண்கள் எடுத்தவர் தேர்ச்சி பெறுவதும் என்பது மெரிட் என்பதே கேள்விக்குறியாவதால் Part A,B,C,Dமதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் மொத்த மதிப்பெண்களை மட்டுமே எடுக்க வேண்டும்.
இந்த இலாகாவுக்காக 150ஆண்டுகளாக ஓடாய் தேய்ந்து உழைத்து வரும் GDS ஊழியர்களுக்கு நேரடி தேர்வுகளில் EX.service man -க்கு தரப்படும் அனைத்து விதமான தேர்வு சலுகைகள் அனைத்து தேர்விலும் தரப்பட வேண்டும்.
அஞ்சல் துறை சார்ந்த கேள்விகள் part-A பகுதியான GK -ல் கேட்கப்பட வேண்டும். part-B ஆங்கிலம் தேர்வு பகுதியில் synonyms, Antonyms பகுதி fill in the blank sentence ஆக தரப்பட வேண்டும் . Part-C கணிதம் 1நிமிடத்தில் விடையளிக்கும் விதத்தில் எளிமையாக இருக்க வேண்டும்.
இரயில்வே தேர்வு கேள்வித்தாள் தமிழில் தரும்போது PA கேள்வித்தாளும் தமிழில் தரப்பட வேண்டும்.
Postman to LGO தேர்வில் paper-1,paper-2 சேர்த்து ஒரே தேர்வாக 2 மணி நேர கால அளவில் நடத்தப்பட வேண்டும்.கணிதம் 1நிமிடத்தில் விடையளிக்கும் விதத்தில் எளிமையாக இருக்க வேண்டும்.நெட்வொர்க் கிடைக்கும் வேகத்திற்கு computer typying skill test தேவையில்லாத ஒன்று.
No comments:
Post a Comment