NFPE
அஞ்சல் RMS இணைப்புக்குழு
தமிழ் மாநிலம் - சென்னை-14.
அஞ்சல் RMS இணைப்புக்குழு கூட்டம் 10.5.2016 மாலை 6.30 மணி முதல்
இரவு 10.30 வரை சென்னை ஆடிட் அலுவலகத்தில் இணைப்புக்குழுவின்
தலைவர் தோழர் B.பரந்தாமன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
விவாதிக்கப்பட்ட விசயங்கள்..
1. மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளன அகில இந்திய மாநாட்டை
சென்னையில் ஆகஸ்ட் 15 முதல் 18 வரை வெகு சிறப்பாக
நடத்துவதற்க்கு NFPE COC முழு ஒத்துழைப்பு நல்குவது.
NFPE COC க்கு 3,00,000 ௹ கோட்டா நிர்ணயிக்கப் பட்டுள்ளது..
2. NFPE GDS உறுப்பினர் சேர்ப்பில் NFPE சங்கங்கள் முழுமையாக இறங்கி
பணியாற்றுவது..
3. இரண்டாம் நிலை அதிகாரிகளின் தொழிலாளர் விரோதப் போக்கை
கண்டித்தும், ஊழியர்களை இழிவு படுத்துவதை கண்டித்தும், இலாகா
சட்டத்தை, உத்திரவுகளை மதிக்காமல் தன்னிச்சையான
செயல்பாடுகளை கண்டித்தும் முதலாவதாக இரண்டு கட்ட
போராட்டங்கள் நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.
முதல் கட்ட போராட்டம்.
24.05.2016 அன்று தமிழகம் முழுவதும் அனைத்து கோட்ட மற்றும்
கிளைகளில்
கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது..
இரண்டாம் கட்ட போராட்டம்.
02.06.2016 அன்று CPMG அலுவலக வளாகத்தில் தமிழகம் தழுவிய
மாபெரும் முழு நாள் தர்ணா..
மேற்கண்ட முடிவுகளை அமுலாக்க அனைத்து NFPE சங்கங்களின் மாநில, கோட்ட, மற்றும் கிளை சங்க நிர்வாகிகள் தயாராவீர் என தமிழக NFPE COC அறைகூவல் விடுகிறது.
G.கண்ணன்,
மாநில கன்வீனர்.
மாநில கன்வீனர்.
No comments:
Post a Comment