பார்வையற்றவர்கள் செய்தித் தாள் வாசிக்க உதவும் உலகின் முதல் இலவச ஸ்மார்ட் கிளாஸ்
போலந்து நாட்டைச் சேர்ந்த பார்ஸி என்ற தொண்டு நிறுவனம் உருவாக்கியுள்ள மொபைல் ஆப் உடன் இணைந்த 3டி ஸ்மார்ட் கிளாஸ் பார்வையற்றவர்கள் வாசிக்க உதவுகிறது.
இந்த ஸ்மார்ட் கிளாஸ் உடன் இணைக்கப்பட்டுள்ள கேமிரா அவர்கள் வாசிக்க வேண்டியவற்றை புகைப்படமாக எடுத்து மொபைல் ஆப்புக்கு இன்டர்நெட் கனெக்ஷன் மூலமாக அனுப்புகிறது.
புகைப்படங்களில் உள்ள எழுத்துகள், வடிவங்கள் மற்றும் உருவங்களைத் தனித்தனியாகப் பிரித்து ஸ்மார்ட் கிளாசுடன் இணைக்கப்பட்ட ஹெட் போன் மூலம் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கேட்டல் முறை மூலமாக இந்த மொபைல் ஆப் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் இது வடிவமைக்கபப்ட்டுள்ளது.
No comments:
Post a Comment