Sunday, January 24, 2016

Business Hours of Post offices..நம் சங்கத்தின்” வெற்றி இது

BUSINESS  HOURS  OF  POST OFFICES - நம் சங்கத்தின்”  வெற்றி இது

WE ARE VERY MUCH PROUD TO ANNOUNCE THAT WE GOT THE ORDERS FROM THE DEPARTMENT TO END THE SUFFERINGS OF THE LAKHS OF CLERICAL EMPLOYEES !

சும்மா  வராது  சுதந்திரம் ! நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் இடை விடாத முயற்சிக்கு கிடைத்த  வெற்றியே  இது ! 

"இனி  மாநிலச் சங்கம் முயற்சி எடுக்க வேண்டும்" என்று  "ஞாபக மறதியாக (?)" கூட சில  கோட்டச் சங்க வலைத்தளங்களில் எழுத வேண்டாம் என்று  மாநிலச் சங்கம் அன்போடு கேட்டுக் கொள்கிறது ! 

அதை  வேறு சில கோட்ட சங்கங்கள்  மறுபதிப்பு செய்திட வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறது.

எவராலோ  கிடைத்த உத்திரவு இது என்று WHATSAPP  , FACEBOOK இல் ஞாபக மறதியாக கூட  நீங்கள்  போட வேண்டாம். 

“நம் சங்கத்தின்”  வெற்றி இது என்று சொல்லிக்கொள்ள  நம் சங்கத் தோழர்களுக்கே”  ஏனோ  கூச்சம் அவர்கள் வேறு சங்கம் அல்லவே ?

மாநிலச்  சங்கத்தின் முயற்சியாலேயே கிடைத்தது  இந்த உத்திரவு என்பது  மறக்கலாகாது ! உங்கள் மாநிலச்  செயலர்  உங்கள் சங்கத்தின் அகில இந்தியத் தலைவரும் கூட  என்பதை  நினைவில் கொள்க !

அகில இந்திய பொதுச் செயலர் தோழர். பராசருக்கு கூட   நன்றி தெரிவிக்காமல் இருப்பது சரிதானா  என்பதை  யோசிக்கவும்.


கடந்த 2015,  நவம்பர் 2 ந் தேதி நம் தமிழக அஞ்சல் மூன்று வலைத் தளத்தில்  நாம் பிரசுரித்த செய்தி மற்றும் அகில இந்திய  சங்கத்தின் கடித நகலை  மீண்டும்  கீழே  தருகிறோம். பார்க்க ! மீண்டும் ஞாபகம்  கொள்க !

================================================================================

MONDAY, NOVEMBER 2, 2015


CHQ LETTER TO SECRETARY POSTS ON IRREGULAR FIXING OF BUSINESS HOURS BEYOND THE PRESCRIBED NORMS

தமிழகத்தின்   பல  பகுதிகளில் இருந்து, அலுவலகங்களின்  BUSINESS  HOURS என்பது ஒட்டுமொத்தமாக , சனிக்கிழமை  உட்பட 7 மணி நேரமாக மாற்றப் பட்டு வருவதாக புகார்  வந்தது. மேலும்  பல  மாநிலங்களிலும் இந்த நிலை தொடர்வதாக  நமக்கு  தெரிவிக்கப்பட்டது. 

எனவே நம்முடைய  மாநிலச் சங்கம் கடந்த 16.10.2015 அன்று  நம்முடைய அகில சங்கத்தின் கவனத்திற்கு ஈமெயில் மூலம் இந்த  பிரச்சினையை கொண்டு சென்றது.   நமது அகில இந்திய  சங்கமும்  தற்போது  இந்த பிரச்சினை  இலாக்கா  முதல்வரின்  கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது. கீழே பார்க்க  கடித  நகலை . மேலும்  இந்தப் பிரச்சினையை  JCM DEPTL COUNCIL MEETINGலும் எடுத்திட நம் மாநிலச்சங்கம், அகில இந்திய சங்கத்தைவேண்டியுள்ளது.

கடித  நகல்   கீழே  பார்க்க :-

பெற்ற  உத்திரவும்  கீழே  பார்க்க :-

No comments:

Post a Comment