Friday, January 15, 2016

NEXT RJCM MEETING PROPOSED ON 27.01.2016

NEXT RJCM MEETING PROPOSED ON 27.01.2016 - BI MONTHLY MEETING WITH PMG, CCR NOTIFIED ON 22.01.2016


அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! அடுத்த RJCM  கூட்டம்  எதிர்வரும் 27.01.2016 அன்று நடத்தப்பட  CPMG , TN  அவர்களால் முடிவெடுக்கப் பட்டுள்ளது. இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னமும் வெளியிடப் படவில்லை. 

எனினும் கோட்ட/ கிளைச் செயலர்கள் , மாநில அளவில் தீர்க்கப் படவேண்டிய பிரச்சினைகள் இருப்பின்  உடன்  மாநிலச் சங்க ஈமெயில் முகவரிக்கு உரிய விபரங்களுடன் அனுப்பிட வேண்டுகிறோம். ஏற்கனவே எடுக்கப் பட்ட பிரச்சினைகளை மீண்டும் தெரிவிக்க வேண்டாம். அவை இன்னமும் தீர்வாகாத பிரச்சினைகளாக எடுத்துச் செல்லுகிறோம். 

கோட்ட அளவில் எடுக்கப்பட்டு ,  பின்னர் மண்டல அளவில் எடுக்கப் பட்டும்  தீர்வாகாத  பிரச்சினைகளை தெரிவிக்க  வேண்டுகிறோம். தனி நபர் பிரச்சினைகள்  RJCM  இல் எடுக்க முடியாது . அவற்றை உரிய முறையீடுகள் மூலமே  எடுக்க முடியும். இதனை நினைவில் கொண்டு உடனே  செயல்பட வேண்டுகிறோம். RJCM பிரச்சினைகள்  என்று குறிப்பிட்டு எதிர்வரும் 17.01.2016 க்குள் கிடைக்குமாறு  ஈமெயில் அனுப்பிட  வேண்டுகிறோம்.

சென்னை பெருநகர  மண்டல PMG உடனான  இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி எதிர்வரும் 22.01.2016 அன்று நடைபெற உள்ளது. எனவே சென்னை பெருநகர மண்டலத்தை சேர்ந்த கோட்ட/கிளைச் செயலர்கள்  தங்கள்  பகுதியில்  கோட்ட மட்டத்தில் எடுக்கப்பட்டும்   தீர்வாகாத பிரச்சினைகள் இருப்பின்  உடன் அதனை  மாநிலச் சங்கத்திற்கு ஈமெயில் மூலம் தெரிவிக்கவும்.  

தோழமையுடன் ,
J . இராமமூர்த்தி ,
RJCM  ஊழியர் தரப்பு செயலர்  மற்றும் 
தமிழ் மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று.



No comments:

Post a Comment