NFPE
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்சங்கம்
தபால்காரர் மற்றும் MTS - தமிழ்மாநிலம், திருவல்லிக்கேணி, சென்னை 600005.
---------------
30.11.2015
அன்பார்ந்த தோழர்களே !!!!
வணக்கம் - 7 வது ஊதியக்குழு அறிக்கை சமர்ப்பித்த பின்பு டெல்லியில் கூடிய NFPE சம்மேளன செயற்குழு நிலைமைகளை ஆய்வுசெய்து "DEC 1, 2-2015" இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை தள்ளிவைப்பது என்று முடிவுசெய்தது .
அதற்கு பதிலாக DEC 1,2 தேதி அன்று NFPE சம்மேளன மா.பொது செயலாளர் மற்றும் சங்க போதுசெயலளர்கள், AIPEU (GDS) NFPE பொது செயலாளர் கலந்துகொள்ளும் இரண்டு நாள் உண்ணாவிரதபோராட்டம் DELHI DAK பவன் (அஞ்சல் துறை தலைமையகம்) முன்பு GDS ஊழியர்களுக்கு அரசு ஊழியர் அந்தஸ்து வழங்கிட கோரி நடைபெற உள்ளது.
GDS ஊழியர்களுடைய அரசு ஊழியர் அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை நீதிபதி மாத்தூர் தலைமையிலான 7வது ஊதியக்குழு தன்னிச்சையாக நிராகரித்துள்ளது.
GDS ஊழியர்களுடைய அரசு ஊழியர் அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை 7வது ஊதியக்குழுவே பரிசீலிக்க வேண்டும் என்று தர்ணா, ஆர்ப்பாட்டம், GDS ஊழியர்களை மட்டுமே திரட்டி நடத்தப்பட்ட நாடாளுமன்றம் நோக்கிய பேரணி, NFPE + FNPO JCA தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்றம் நோக்கிய பேரணி, 12-12-2012 ஒரு நாள் வேலை நிறுத்தம், FEB 12,13-2014 -48 மணி நேர வேலை நிறுத்தம் போன்ற பல இயக்கங்களிலும் போராட்டங்களிலும் GDS ஊழியர் கோரிக்கைகள் முன்னிலைபடுத்தப்பட்டதால் அஞ்சல் வாரியம் மூன்று முறை GDS ஊழியர்களுடைய அரசு ஊழியர் அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை 7வது ஊதியக்குழுவே பரிசீலிக்க வேண்டும் என்று வலுவான பரிந்துரைகளை நிதி அமைச்சகத்திற்கு அனுப்பியது. மூன்றுமுறையும் நிதி அமைச்சகம் அஞ்சல் வாரிய பரிந்துரைகளை நிராகரித்தது.
நீதிபதி மாத்தூர் தலைமையிலான 7வது ஊதியக்குழுவே GDS ஊழியர்களுக்கு தன்னிச்சையாக அரசு ஊழியர் அந்தஸ்து வழங்கிட முடியாது என்று தெரிவித்துள்ள நிலையில் NFPE சம்மேளனமும் AIPEU (GDS) NFPE ம் நிலைமைகளை உன்னிப்பாக ஆராய்ந்து சில முடிவுகளை எடுத்துள்ளது.
அஞ்சல் வாரியம் ஓய்வு பெற்ற அஞ்சல் வாரிய உறுப்பினர் திரு. கமலேஷ் சந்திரா, தலைமையில் GDS ஊதியக்குழு தன்னிச்சையாக அமைத்துள்ள பின்னணியில் NFPE சம்மேளனசெயற்க்குழு உடனடியாக வேலை நிறுத்தம் சாத்தியம் இல்லை என்று முடிவு செய்துள்ளது.
மத்திய அரசையும், அஞ்சல் துறையையும் GDS ஊழியர்களுக்கு அரசு ஊழியர் அந்தஸ்து வழங்கவேண்டும் என்ற நிர்பந்தத்தை ஏற்படுத்தி வெற்றி பெறுவதே நம்முன் உள்ள பிரதான கடமையாகும். இதற்கு பல்வேறு அமைப்புகளின் ஆதரவும் ஒற்றுமையும் அவசியமாகும். அனைத்து ஊழியர்களிடத்திலும் கோரிக்கை பிரச்சாரம் சென்றடையவேண்டும். பல்வேறு அமைப்புகளுடைய ஒன்றுபட்ட காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்பு பணிகள் தொடங்கப்படவேண்டும்.
இதன் ஒரு பகுதியாக அனைத்து ஊழியர்களையும் ஒன்றிணைத்து வரும் "DEC 11-2015" அன்று அனைத்து கோட்டங்களிலும் வலுவான சக்திமிக்க முழு நாள் தர்ணா / உண்ணாவிரதப் போராட்டங்களை எழுச்சியாக நடத்துமாறும், போராட்டத் தவகவல்களை மாநில சங்கத்திற்கு தெரிவிக்குமாறும், கேட்டுகொள்கிறோம்.
போராட்ட வாழ்த்துக்களுடன் !!!!!
G . கண்ணன் ,
தமிழ் மாநில செயலாளர் .
NFPE அஞ்சல் நான்கு .
No comments:
Post a Comment