Wednesday, November 25, 2015

பெண்களுக்கான மகப்பேறு விடுமுறைக் காலம் 26 வாரமாக அதிகரிக்க முடிவு

பெண்களுக்கான மகப்பேறு விடுமுறைக் காலம் 26 வாரமாக அதிகரிக்க முடிவு


பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு கால விடுப்பை 12 வாரத்தில் இருந்து 26 வாரமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தொழிற் சங்க பிரதிநிதிகள் மற்றும் பணியாளர்களுடன் மத்திய தொழிலாளர் நல அமைச்சக அதிகாரிகள் இன்று நடத்திய விவாதத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


குழந்தையை தத்து எடுக்கும் போது வாடகைத் தாய் முறையில் குழந்தை பெறும் போதும் 12 வார விடுமுறை அளிக்கவும் இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


தொழிலாளர் நலன் குறித்த வரைவு மசோதாவில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் இந்தக் கூட்டம் நடந்தது.


30க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் உள்ள நிறுவனங்களில் குழந்தை காப்பகங்கள் அமைப்பது குறித்தும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தொழிற் சங்கங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment