Monday, November 30, 2015

வைரஸில் இருந்து பென்டிரைவை மீட்க...

வைரஸில் இருந்து பென்டிரைவை மீட்க...

pen drive picture க்கான பட முடிவுதொழில்நுட்ப வளர்ச்சி மென்பொருட்களை அப்டேட் செய்துகொண்டே சென்றாலும் கணினி களை தாக்கும் வைரஸ்களையும் அப்டேட் செய்துவிடுகிறது. கணினி, பென்டிரைவ், கூடுதல் ஹார்டிஸ்க் என தகவல்களை சேமிக்கும் கருவிகளில் நுழைந்து பாதுகாப்பாக வைத்திருக்கும் தகவல்களை அழித்துவிடுகிறது. கணினி யுகத்தில் வைரஸ்கள் சகஜமானவை என்றாலும் சில வைரஸ்கள் பயன்பாட்டாளரை அதிகமாகவே சோதித்துவிடுகிறது. அப்படியான வைரஸ்களில் 'ஷாட்கட் வைரஸ்'
 (shortcut virus) முக்கியமானது.

2015-ம் ஆண்டு தொடக்கத்தில் சிறிய வைரஸாக நுழைந்த இது இன்று, ஜீ.பி.கணக்கில் தகவல்களை விழுங்கும் வைரஸாக மாறிவிட்டது. பென்டிரைவ், கணினி, ஹார்டிஸ்க் என தகவல் சோமிக்கும் கருவிகளில் புகுந்துகொண்டு குடைச்சல் கொடுக்கிறது. இவைகளால் பாதிக்கப்பட்ட பென்டிரைவ்கள் சரியாக இயங்குவதில்லை. கணினியில் இருந்து பென்டிரைவிற்கு தகவல்களை நகர்த்தினால், நகரும். ஆனால் கணினியில் காட்டாது. பிராப்பர்டீஸ் செட்டிங்கில் சென்று பார்த்தால் தகவல் பரிமாறியதற்கான அடையாளம் தென்படும். 

அப்படி மறைக்கப்பட்ட தகவல்களை மீட்கவும், ஷாட்கட் வைரஸ் பாதிக்கப்பட்ட கருவிகளை மீட்கவும் கீழ் உள்ள வழிமுறைகளை பயன்படுத்தலாம். 

1) முதலில் பென்டிரைவை கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2)   Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்டிரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள்.   My Computer  செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக   E:   டிரைவில் பென்டிரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம், அதற்கு நீங்கள்   E:   என கொடுத்து   Enter   அழுத்தவும்.

5)      attrib h s r /s /d *.*  என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும்   Space    சரியாக கொடுக்கவும்.

6) நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு   Enter     அழுத்துங்கள்.

இதை செய்து முடித்து சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது பென்டிரைவை சோதித்து பாருங்கள், மறைக்கப்பட்ட தகவல்களும், ஷாட்கட் வைரசும் சீர் செய்யப்பட்டிருக்கும்.

source-daily thanthi article.

No comments:

Post a Comment