BLACK DAY DEMONSTRATION AT KUMBAKONAM DIVISION
7 ஊதியக் குழு என்ற போர்வையில் மத்திய அரசு , தனது அடிமட்ட ஊழியர்களை அடியோடு ஏமாற்ற நினைக்கிறது. அஞ்சல் எழுத்தர்கள் , RMS பிரிப்பாளர்கள் , தபால்காரர்கள் மற்றும் MTS ஊழியர்களுக்கு மற்றைய மத்திய அரசு ஊழியர்களை விட உயர்த்தி வழங்கப்பட்ட ஊதிய விகிதக் கோரிக்கைதற்போது மறுக்கப்பட்டுள்ளது.
ஆனால் IP, ASP, SP, SSP போன்றவர்களுக்கு உயர் ஊதியக் கோரிக்கை
ஏற்கப்பட்டுள்ளது. ஊதிய விகித fitment formula 2.57 to 2.78 என்று மாறுபடுகிறது.ஒரே மாதிரியாக நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
இந்த நிலைமைகளை கணக்கில் கொண்ட ரயில்வே , பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் கூட்டு அமைப்பான NJCA முதற்கட்டமாக 27.11.2015 இன்று அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் கறுப்புச் சின்னம் அணிந்து அவரவர் இடங்களில் ஊழியர்களை ஒன்று திரட்டி எழுச்சி மிகு கண்டன ஆர்பாட்டம் நடத்திட தாக்கீது அனுப்பி இருந்தது.
மத்திய,மாநில சங்கங்களின் அறைகூவலுக்கு ஏற்ப இன்றைய தினம் கும்பகோணம் டிவிசன் அனைத்து NFPE ,FNPO அஞ்சல் ஊழியர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை செய்தனர். மாலை 6 மணிக்கு தலைமை அஞ்சல் நிலைய வாயிலில் கும்பகோணம் NFPE P3, P4, GDS அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
NFPE P3 மாநில சங்க துணை தலைவரும்,கும்பகோணம் NFPE P3,சங்க செயலாளருமான தோழர்,R. பெருமாள் அவர்கள் வழி காட்டுதலில் NFPE P4சங்க துணை தலைவர் தோழர், கலைவாணர் அவர்கள் தலைமையில் நடந்தது .கூட்டத்தில் பேசிய அனைவரும் ஊதிய முரண்பாடுகளை சுருக்கமாக சிறப்பாக எடுத்துக்கூறினர்.
ஆர்ப்பாட்டக்காட்சிகள் சில
தோழர், பெருமாள் அவர்கள் ,மற்றும் SBCO-ன் புதிய தோழர்கள்,சந்தன் குமார், சுரேஷ் அவர்கள்
NFPE P3, P4, GDS பெண்அஞ்சல் ஊழியர்கள்
P4 கோட்டச்செயலர் தோழர் அய்யப்பன் அவர்கள்,
P4 பொருளாளர் தோழர் மாணிக்கம் அவர்கள்
P3 தோழர் ஜோதி அவர்கள்,
No comments:
Post a Comment