எனது மதிப்பிற்குரிய தோழர்களே! தோழியர்களே!.
வணக்கம்.GDS TO POSTMAN EXAM-ல் நான் பாஸ் செய்துவிட்ட காரணத்தால் NFPE GDS லிருந்து
NFPE P4 க்கு செல்கிறேன் தோழர்களே.GDS ஊழியர்களின்
நியாயமான,தேவையான கோரிக்கைகளுக்காக தொடர்ந்து குரல் ,கொடுப்பேன். ஏமாற்றி கதை விடுபவர்களிடம் GDS ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
அனைத்து GDS ஊழியர்களும் டிபார்ட்மெண்ட் ஆக சம்மேளனம் DELHI HIGH COURT மூலம் எடுத்துவரும் முயற்சிகள் தொய்வு அடையவிடாமல் வலியுறுத்தி வருவேன்.மேலும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் ஏதாவது ஒரு வங்கி அல்லது சொசைட்டியில் பர்சனல்
லோன் ஒரு லட்சம் ரூபாய்
கிடைத்து அதை சம்பளத்தில் பிடிக்க வழி முறை செய்தல்,MTS, POSTMAN, P.A தேர்வுகளில் வயது வித்தியாசமின்றியும்,சீனியாரிட்டி அடிப்படை முறையிலும் அனைத்து GDS ஊழியர்களும் கலந்துகொள்ளும்படி செய்தல்,
ரூ 2 லட்ச ரூபாய்க்கு
மருத்துவ உதவி தொகையினை உயர்த்தி வழங்குதல்; குறைந்தபட்சம் ரூ.5000
பென்சன் வழங்க கோருதல் போன்ற விசயங்களில் தொடர்ந்து அகில இந்திய,மாநில,டிவிசனல் தலைவர்களிடம் விரைந்து இதில் செயல்பட
வலியுறுத்துவேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் நமது
தோழர்களுக்கு TRCA FIXATION, டிரான்ஸ்பர் , MTS,
POSTMAN, P.A தேர்வுகளில் வெற்றி பெறும் வழி முறைகள் சம்பந்தமாக சந்தேகங்கள்
இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள். உண்மையை மட்டும் சொல்கிறேன்.
நமது மாநில செயலர் தோழர் தனராஜ் அவர்கள், இனிய P3 மாநில செயலர் தோழர்
J.R அவர்கள் மூலம்,அகில இந்திய தலைவர்கள் பெருமதிப்பிற்குரிய
தோழர் கிருஷ்ணன் அவர்கள், தோழர் சுப்ரமணியன் அவர்கள் வாயிலாக
செய்த சில பணிகள் இதோ.
1. P.A தேர்வு முறையில் GDS ஊழியர்களுக்கு
55% மார்க்,வெளியிலிருந்து எழுதுபவர்களுக்கு
45% மார்க் என்று இருந்ததை சுட்டிகாட்டினோம்.
இப்போது எல்லாரும் +2 பாஸ் பண்ணியிருந்தாலே போதும், கட் ஆப் மார்க் தேவையில்லை என்று சொல்லிவிட்டனர்.With reference to the JCM (DC) item S.No.4, Item No.22 meeting held on
27-11-2013 the subject has been discussed by Postal JCA leaders.(minutes vide
DoP Lr.dated 23-12.2013) The out come is very favourable to
GDS :That rule has been modified now as "PASSED" ref.G.S.R.62 e dated
on 27-1-14.
2. வெளிப்படையான தேர்வு முறைக்கு அனைத்து தேர்விலும்
OMR முறை வேண்டும் என்று கேட்டிருந்தோம்.வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க
வேண்டும், வினாத்தாள் கடினமாக இருக்ககூடாது என்றும் கேட்டிருந்தோம். தற்போது போஸ்ட்மேன் மற்றும் MTS பணியிடங்களுக்கான தேர்வுகளில் தமிழிலும் வினாத்தாள் கேட்டு வருகின்றனர் என்பதை மறந்து விடாதீர்கள்.
our tamilnadu circle secretary dhanaraj sir,
and kmb dvn nfpe gds also request to com.krishnan at kumbakonam p3 circle
conference, held on 5-6-2013, to set
question paper easily, OMR pattern and also in regional language . it is discuss with JCM minutes vide no-16/02/2013-SR dated on
23-12-13.(meeting held on 27-11-13).we got order, ref.Dte.Lr.no
45/14-2012SPB-1 dated on 17-01-14. now we got tamil language question papers
and OMR pattern .
3. 2000 ஆண்டுக்குப்பின் B.O- ல் எவ்வளவோ வேலைப்பளு அதிகரித்துள்ளது.
மணியார்டர் நம்பர் முன்பு 4 எழுத்து. தற்போதோ18
எழுத்து, RL நம்பர் முன்பு 4 எழுத்து.
தற்போதோ11 எழுத்து, SPEED நம்பர் முன்பு 4 எழுத்து.
தற்போதோ
12 எழுத்து, முன்பு A/C தொடங்கபோட்டோ தேவையில்லை.KYC முறை கிடையாது.தற்போது
I.D PROOF, ADDRESS PROOF என்று சரியாக கவனித்து எழுதி வருகிறோம்.
விரைவில் CBS முறை வேறு வரப்போகுது அதில் எவ்வளவு எழுத வேண்டி வருமோ,? COD,
EPOST, E.B BILL, OLD AGE PENSION இப்படிஎவ்வளவோ வேலைப்பளு அதிகரித்துள்ளது
இதையெல்லாம் எடுத்து கூறி B .O வேலைப்பளு கையாள்வதற்கு
12 புள்ளியிலிருந்து
42 புள்ளியாக மாற்ற கோரியுள்ளோம். இது நிலுவையில் உள்ளது.( Irrational points provided
for accounting work
fixed to GDS BPM- revision requested 14 to 42 points, ref.PF/GDS/2013-14 dated on 18-12-2013, still in under observations at Dte.,
4. புதிதாக உருவாகி உள்ள நகர்புற விரிவாக்கத்தினால் தபால்
டெலிவரி செய்யும் தோழர்கள் சிரமப்படுவதை குறைக்கும் பொருட்டு புதியதாக போஸ்ட்மேன் பணியிடம்
தொடங்க கேட்டிருந்தோம். உதாரணம்..நாச்சியார்கோவில்
S.O, கும்பகோணம் HPO....Ref.JCM (DC) item S.No.36 Item No.55 meeting held on 27-11-2013.
5. போஸ்ட்மேன் பணியிடத்தில் GDS ஊழியர்களை சீனியாரிட்டி முறையில்
நியமிக்காதது குறித்தும் பேசியுள்ளோம்.Ref. JCM (DC) item S.No.37 Item No.7 meeting held on 27-11-2013.
6. 1-1-2006க்கு பின் பணியமர்த்தப்பட்ட BPM தோழர்களுக்கு
2008 ம் ஆண்டு பைனியல் ரிவீயு படி ரூ1600 ஸ்கேல்
ஆனது நடராஜமூர்த்தி கமிட்டி பரிந்துரைக்கு பின் 2009ம் ஆண்டு
3600 ஸ்கேல்என்று பிக்ஸ் செய்யப்பட்டது.
அரியர்ஸ் வாங்கினோம். அது 2010 ம் ஆண்டு திருப்பி பிடிக்கப்பட்டது. 3600 ஸ்கேல் ஆனது 2745 ஸ்கேல் என்று குறைக்கப்பட்டது.இது குறித்து கடந்த 2 ஆண்டுகளாக
விடாமல் போராடி வந்தோம். விரைவில் நல்ல செய்தி வருமென்று எதிர்பார்க்கிறோம்.
GDS ஊழியர்களை
இலாகா ஊழியராக ஆக்கும் வரை இலாகாவில் ஏற்படும் P.A வரையிலான காலிப்பணியிடங்களில்
GDS ஐ கொண்டே நிரப்ப வேண்டும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு, வேலைப்பளு கணக்கீடு, பென்சன் மற்றும் 2 லட்சம் வரை லோன் தருவது உள்ளிட்ட பிரச்சனைகள்
கடந்த காலங்களை போல் பேச்சளவில், ஏட்டளவில் இல்லாமல் ஆணையாக பெற்று
தரவேண்டும் என்பதையே ஒவ்வொரு ஊழியரும் எதிர்பார்க்கின்றனர். 2015 ஆண்டு தொடக்கத்திலாவது கிடைக்கும்
என்று நம்பி உள்ளனர்.
இலாகா காலி பணியிடங்களில்
தற்காலிகமாக பணி புரிய GDS ஊழியர்கள் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் படி செய்யுங்கள். இலாகா பணியினை நமது ஊழியர்கள் இல்லாமல் அவுட்சோர்ஸ் மூலம் செய்து வருவது அரசாங்கம்
நமது துறையை கார்ப்பரேசன் ஆக்குவதற்கு இதுவும் ஒரு வழிவகுக்கும் என்பதை மனதில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அவுட்சோர்ஸ் பணியாளர்களுக்காக உருகி,
இத்தனை ஆண்டுகளாக உங்களுக்காக உழைத்து வரும் GDS வயிற்றில் அடிக்காதீர்கள்
எனக்கு
இந்த வாய்ப்பினை அளித்த கும்பகோணம் P3 கோட்டச்செயலர் தோழர் பெருமாள் அவர்கள், கூப்பிட்ட குரலுக்கு
ஓடோடி வந்த GDS ஊழியர்களின் நம்பிக்கையான மாநில செயலர் தோழர்
தனராஜ் அவர்கள்,
தொழிற்சங்க தொல்க்காப்பியர் எங்கள் இனிய P3 மாநில செயலர் தோழர் J.R அவர்கள், தோழர் வெங்கடேசன் அவர்கள்,
தோழர் வீரமணி அவர்கள், GDS ஊழியர்களின் உண்மையான
தலைவர், அகில இந்திய செயலர் தோழர் பாண்டுரங்கராவ் அவர்கள்,
GDS கோரிக்கைகளுக்காக போராடிவரும் அகில இந்திய தலைவர்கள் பெருமதிப்பிற்குரிய
தோழர் கிருஷ்ணன் அவர்கள், தோழர் பராசர் அவர்கள், தோழர் சுப்ரமணியன் அவர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக நம்
அனைவரின் வழிகாட்டியான தோழர் K.V.S அவர்களுக்கும் எனது நன்றியினை
இந்த நேரத்தில் தெரிவித்துகொள்கிறேன்.
தோழமையுடன்
பா.தம்பிராஜ்
No comments:
Post a Comment