AIPEU GR.C , TN/ NFPE GDS - STATE LEVEL DIVL/BRANCH SECRETARIES MEETING DECIDES TO GO ON THREE PHASED TRADE UNION ACTION ON STATE LEVEL SECTIONAL DEMANDS
26.01.2015 SRMU சங்க கட்டிடம் திருச்சி
திருச்சியில் ஒரு திருப்பு முனை !
தமிழக அஞ்சல் மூன்று மற்றும் NFPE GDS சங்கங்களின்
மாநில அளவிலான கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டம் !
போராட்டக் களம் நோக்கி தமிழக அஞ்சல் மூன்று மற்றும் GDS சங்கம் !
மூன்று கட்ட போராட்டம் !
முதற் கட்டம் கோட்ட/ கிளைகளில்
கோரிக்கை மனு அளித்து ஆர்ப்பாட்டம் !
இரண்டாவது கட்டம்
மண்டல மாநில அளவில் தொடர் முழக்கப் போராட்டம் !
மூன்றாவது கட்டம்
மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தம் !
பொது மக்கள் உபயோகத்திற்கு ரூ. 4/- ரூ. 5/
DENOMINATION STAMP உடனே வழங்கு !
CARD , COVER , ACK CARD , RPLI RECEIPT BOOK, PASS BOOK,
PAY IN SLIP , B .O .DAILY ACCOUNT உள்ளிட்ட அத்தியாவசிய
பொருட்களை உடனே வழங்கு !
மாதாந்திரப் பேட்டிகளை நடத்திடாத
கோட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு !
மற்றும் தேங்கிக் கிடக்கும் கோட்ட அளவிலான
பிரச்சினைகளை உடனே தீர்த்து வை !
கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சரி செய்து MEMORANDAM தயார் செய்யும் பணியில் மாநிலச் சங்கம் ஈடுபட்டுள்ளது . கூட்டத்திற்கு வர இயலாத கோட்ட/ கிளைச் செயலர்கள் உடன் தங்கள் பகுதிப் பிரச்சினைகளை மாநிலச் செயலருக்கு EMAIL மூலம் அனுப்பிட கேட்டுக் கொள்கிறோம். பிப்ரவரி முதல் வாரத்தில் முதற் கட்ட போராட்டம் அறிவிக்கப்படும் ! கோட்ட/ கிளைச் செயலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டுகிறோம்.! இரண்டாவது கட்ட போராட்டத்தில் வேலைநிறுத்த அறிவிப்பு மற்றும் சட்ட பூர்வமான நோட்டீஸ் வழங்கப்படும் !
இது நம் உரிமை காக்கும் போராட்டம் !
நம் உணர்வுக்கான போராட்டம் !
போராட்ட உணர்வு பெருகட்டும் !
போராட்டத் தீ பரவட்டும் !
ஒவ்வொரு GDS ஊழியர்களுக்கும் ஏதாவது ஒரு
வங்கி அல்லது சொசைட்டியில் பர்சனல் லோன் 2 லட்சம் ரூபாய் கிடைத்து அதை
சம்பளத்தில் பிடிக்க வழி முறை செய்தல்,MTS, POSTMAN, P.A தேர்வுகளில் வயது
வித்தியாசமின்றியும்,சீனியாரிட்டி அடிப்படை
முறையிலும் அனைத்து GDS ஊழியர்களும் கலந்துகொள்ளும்படி
செய்தல், ரூ 2 லட்ச ரூபாய்க்கு மருத்துவ உதவி
தொகையினை உயர்த்தி வழங்குதல்; குறைந்தபட்சம் ரூ.5000 பென்சன் வழங்க கோருதல் போன்ற
விசயங்களில் அகில
இந்திய,மாநில தலைவர்கள் விரைந்து செயல்பட
வலியுறுத்தப்பட்டது.
ரூ.3 லட்சத்திற்கு மேற்பட்ட RPLI பாலிஸிகளுக்கு உடனே பாலிஸி
பத்திரம், பிரிமிய புக் வழங்காததால் (2 மாதம் / 6 மாதம் கால தாமதம்) பாலிஸிக்கள்
கைநழுவி போவதை எடுத்து கூறினார்கள்.
GDS
ஐ இலாகா
ஊழியராக ஆக்கும் வரை இலாகாவில்
ஏற்படும் P.A வரையிலான காலிப்பணியிடங்களில் GDSஐ கொண்டே நிரப்ப வேண்டும்.இலாகா
காலி பணியிடங்களில் தற்காலிகமாக பணி புரிய, விருப்பமுள்ள GDS ஊழியர்கள் அனைவருக்கும்
வாய்ப்பு கிடைக்கும் படி செய்யுங்கள்.
இலாகா பணியினை நமது ஊழியர்கள்
இல்லாமல் அவுட்சோர்ஸ் மூலம் செய்து வருவது அரசாங்கம் நமது துறையை கார்ப்பரேசன்
ஆக்குவதற்கே வழிவகுக்கும்
என்பதை மனதில் கொள்ள வேண்டுமென்றெல்லாம் கேட்டுக்கொண்டார்கள். மேலும், அவுட்சோர்ஸ் பணியாளர்களுக்காக
ஏன் உருகுகிறார்கள்? ஏன் GDS ஊழியர்களை போட மறுக்கிறார்கள்
அல்லது பயப்படுகிறார்கள் என்பதை விளக்கி கூறினார்கள்,
அந்த இடங்களில் எந்த மாதிரி கால நேரங்களில் GDS ஊழியர்கள் பணி புரிய வாய்ப்பு கிடைக்கும் என்பதையும் விளக்கி கூறினார்கள். உதாரணமாக S.O க்களில் காலை 8.30 மணி முதல்10.30 மணி வரையிலும், பின் மீண்டும் மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரையிலும் பணிகளில் உதவி செய்வதன் மூலம் GDS ஊழியர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதையும், அது போலவே CPC, BPCக்களில் பகுதி நேரங்களில் எப்படி வேலை செய்வது பற்றியும் எடுத்துரைத்தார்கள்.
விருப்பமுள்ள GDS ஊழியர்களை கொண்டு காலையில் 4 மணி நேரம் அல்லது மாலையில் 4 மணி நேரம் ஷிப்ட் முறையில் பிரித்து பயன்படுத்துவதன் மூலம் இலாகாவிற்கு வருமானம் வருமே ஒழிய வருமான இழப்பு ஏற்படாது என்பதையும் எடுத்துரைத்தார்கள்.
.
அவுட்சோர்ஸ் மூலம் இலாகா பணி
செய்வது நம்மை விரைவில் கார்ப்பரேட் ஆக்குவதற்கே வழி வகுக்கும் என்ற ஆபத்தை
உணராமல் சுய நலத்திற்காக சிலர் பேசி வருவது குறித்தும்,அவுட்சோர்ஸ் மற்றும்
அரேஞ்ச்மெண்ட் இடங்களில்
பணிபுரிய ஒருசிலருக்கு மட்டுமே தொடர்ந்து வாய்ப்பு வழங்குவது தொழிற்சங்க
சமத்துவத்திற்கு எதிரானது என்பதையும், விருப்பமுள்ள அனைத்து GDS ஊழியர்களுக்கும் வாய்ப்பு வழங்க
வேண்டும் என்றும் எடுத்து கூறினார்கள்.
TRCA
SCALE REFIXATION , பைனியல் ரிவீயு மற்றும்
TRCA குறைவது தொடர்பான
பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
B.O வில் செய்யும் பல்வேறு
வேலைக்கான பாயிண்ட் போதுமான அளவுக்கு இல்லை. புதிதாக புள்ளி கணக்கீடு எடுக்கும்
போது கூடுதலாக ஒவ்வொரு ஆண்டிலும் புதிதாக தொடங்கும் SB,RD,RPLI,TD
அக்கவுண்டு
/ பாலிஸிகளுக்கு ஒவ்வொரு 100 அக்கவுண்டு / பாலிஸிகளுக்கு 10 பாயிண்டு தருவதன் மூலம் B.O வருமானம் தானாகவே உயர்ந்து
விடுவதை கூறினார்கள்
2000 ஆண்டுக்குப்பின் B.O- ல் எவ்வளவோ வேலைப்பளு
அதிகரித்துள்ளது. மணியார்டர் நம்பர்
முன்பு 4 எழுத்து. தற்போதோ18 எழுத்து, RL நம்பர் முன்பு 4 எழுத்து. தற்போதோ11 எழுத்து, SPEED
நம்பர்
முன்பு 4 எழுத்து. தற்போதோ 12 எழுத்து,
முன்பு A/C தொடங்க போட்டோ தேவையில்லை. KYC முறை கிடையாது. தற்போது I.D
PROOF, ADDRESS PROOF என்று சரியாக கவனித்து எழுதி வருகிறோம். விரைவில் B.Oவுக்கு CBS முறை வேறு வரப்போகுது. அதில்
எவ்வளவு எழுத வேண்டி வருமோ,?
COD, EPOST, E.B BILL, OLD AGE PENSION இப்படிஎவ்வளவோ வேலைப்பளு அதிகரித்துள்ளதையெல்லாம் எடுத்து கூறி B .O வேலைப்பளு கையாள்வதற்கு 14 புள்ளியிலிருந்து 42 புள்ளியாக மாற்ற EX. NFPE SECRETARY GENERAL தோழர். கிருஷ்ணன் அவர்கள் D.G POST அவர்களுக்கு எழுதிய கடிதம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்க கோரினார்கள். இது தற்போது நிலுவையில் உள்ளது. (Irrational points provided for accounting work fixed to GDS BPM- revision requested 14 to 42 points, ref.PF/GDS/2013-14 dated on 18-12-2013,)
அஞ்சல் மூன்று கூட்டத்தின் புகைப்படங்கள்
No comments:
Post a Comment