Thursday, January 23, 2020

GDS : Limited Transfer Facility for all categories -- detailed procedure with some relaxations compared to the previous orders 

...........

Gds transfer புதிய நடைமுறை 22-1-20 முதல் அமுலுக்கு வருகிறது. இது தொடர்பான பழைய ஆர்டர்கள் செயல்பாட்டிலிருந்து நீக்கப்படுகிறது.

1. ஆண் GDS ஊழியர்களுக்கு இரண்டு ஆண்டு சர்வீஸ் முடித்ததும் ஒருமுறை மட்டுமே டிரான்ஸ்பர் வழங்கப்படும். அதேபோல பெண் GDS ஊழியர்களுக்கு ஒரு ஆண்டு சர்வீஸ் முடித்ததும் இரண்டுமுறை மட்டுமே  அவரது  ஒட்டு மொத்த சர்வீஸ் காலத்திற்கும் சேர்த்து  டிரான்ஸ்பர் வழங்கப்படும்.

2. இலாகா ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் Mutual transfer  வழங்கப்படும்.

3.  ஆண்/பெண் ஊழியர்கள் அவர்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் டிரான்ஸ்பர் கேட்கலாம். பெண்ஊழியர்கள் அவர்களது கணவர் பணிபுரியும் இடத்திற்கோ அல்லது அவர்கள் குடியிருக்கும் இடத்திற்கோ டிரான்ஸ்பர் கேட்கலாம். மருத்துவ காரணத்திற்காகவும்   டிரான்ஸ்பர் கேட்கலாம்.

4. PWD GDS ஊழியர்கள் மற்றும் அவர்களை நம்பி இருக்கும் PWD உறவினர்கள் காரணமாகவும்1 ஆண்டு சர்வீஸ் முடித்ததும் டிரான்ஸ்பர் வழங்கப்படும்.

5.  Caste,police verificationமுடித்து நிரந்தர ஊழியராக ஆர்டர் பெற்றிருந்தால் மட்டுமே டிரான்ஸ்பர் வழங்கப்படும்.

6.  Put off duty, court case, police case உள்ள GDS ஊழியர்களுக்கு டிரான்ஸ்பர் வழங்கப்படாது.court case என்பது உங்கள் மீது இலாகாபூர்வ விசாரணை அடிப்படையில் கேஸ் நடப்பது தானே ஒழிய நீங்கள் இலாகாவிடம் எனக்கு டிரான்ஸ்பர் கொடுங்க, வேலை கொடுங்க என்று போட்ட கோர்ட் கேஸ்கள் அல்ல.

7. GDS ABPM/Dak sevak பணியில் உள்ளவர்கள் 12,000/-சம்பள அடிப்படையில் இருந்தால் 12,000/-சம்பளம் தரப்படும்  BPM இடத்திற்கு மட்டுமே டிரான்ஸ்பர் வழங்கப்படும். மற்ற 14,500  சம்பளம் தரப்படும் BPM இடத்திற்கு டிரான்ஸ்பர் வழங்கப்படாது

8.  மற்றபடி ஏற்கனவே உள்ளது போல் 10,000/- சம்பள விகித இடத்திலிருந்து 10,000/- சம்பள விகித இடத்திற்கு டிரான்ஸ்பர் வழங்கப்படும். அதே போல 14,500சம்பள விகித இடத்திலிருந்து 14,500/- சம்பள விகித இடத்திற்கு டிரான்ஸ்பர் வழங்கப்படும்.

9.  ரீஜினுக்குள் டிரான்ஸ்பர் PMGதான் தரமுடியும். சர்க்கிள் அளவில் CPMG-TN தான் டிரான்ஸ்பர் தர முடியும். 

10. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் ஜூன் மாதங்கள் வரை விண்ணப்பிக்க வேண்டும். ஜூலை மாதம்  அவர்களது சர்வீஸ் சீனியாரிட்டி அடிப்படையில் டிரான்ஸ்பர் வழங்கப்படும்.

11. Dak sevak ஆக உள்ளவர்களுக்கு அவர்களது சம்பளத்திற்கு நிகராக உள்ள இடத்திற்கு Postal  to RMS  transfer தரப்படும். RMS -ல்  Dak sevak ஆக உள்ளவர்களுக்கு  postal  transfer-ல் BPM post தரப்பட மாட்டாது 








No comments:

Post a Comment