Saturday, September 28, 2019




சுகன்ய சம்ரிதி திட்டம் (SSA ) என்பது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால்  ஜனவரி 22 தேதி 2015ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.  இந்த திட்டத்தின்படி, 10 வயதுக்குட்பட்ட  2 பெண்குழந்தைகளுக்காக அவர்களது பெற்றோரில் யாராவது ஒருவர் பெயரிலோ அல்லது பாதுகாப்பாளர் பெயரிலோ குறைந்தபட்சமாக தற்போது ரூபாய் 250 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம். ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சமாக ரூபாய் 250 இக்கணக்கில் செலுத்தப்படவேண்டும். அதிகபட்சமாக 1,50,000 ரூபாய் வரை   100-ன் மடங்குகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் செலுத்தலாம்.

 ஒவ்வொரு ஆண்டிற்கும் குறைந்தபட்சம் ரூ.250 கட்டத்தவறினால் ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.50 பெனால்டி சேர்த்து   ரூ.300 வீதம் கட்ட வேண்டும். மொத்தம் 15ஆண்டுகள்  பணம் செலுத்த வேண்டும். அதன் பிறகு 7 ஆண்டுகள் வரை திட்டம் தொடரும். ஆனால் பணம் கட்ட வேண்டிய தில்லை/அனுமதியும் இல்லை.

 இந்த கணக்கினை  ஒரு  பெண் குழந்தை பிறந்த அன்று தொடங்கியிருந்தால்  அதன் 21வது வயது முடிவில்  முதிர்வு தொகையை பெறலாம். கணக்கை முடிக்கும் போது அந்த பெண் குழந்தையின்  அப்போதைய புதிய ID proof, தர வேண்டும்

அந்த பெண் குழந்தை இறந்து விட்டாலோ அல்லது Non Residence of India ஆனாலோ அல்லது திருமணம் நடந்தபின்போ இத்திட்டம் உடனடியாக முடிவுக்கு வந்து விடும். திருமணம் நடக்க உள்ள ஒரு மாதத்திற்கு முன்போ அல்லது திருமணம் முடிந்து 3 மாதங்களுக்குள் விண்ணப்பித்து விட வேண்டும்.

 கணக்கு தொடங்கி 5 வது நிதி ஆண்டு முடிந்ததும் உயிருக்கு ஆபத்தான நோய் காரணமாக பணம் கட்ட முடியவில்லை என்றாலோ அல்லது பெற்றோர், பாதுகாவலர் இறந்து போனாலோ டிவிசனல்  சூப்பிரண்டு அவர்களின் அனுமதி பெற்று கணக்கை  முடித்து கொள்ளலாம். 

தற்போது ஆண்டுக்கு 8.4%  கூட்டுவட்டி வழங்கப்படுகிறது. இக்கணக்கில் ஒரு நிதியாண்டில் செலுத்தப்படும் தொகைக்கு வருமானவரிவிலக்கு அளிக்கப்படுகிறது.  மேலும் பெண்ணுக்கு 18 வயது நிறைவு அடையும்போது  அல்லது 10-ம் வகுப்பு முடித்ததும் அவரது  மேற்படிப்பு கல்வி  செலவுக்காக முறையான கட்டண ரசீதுகள்,வயது சான்றிதழ் சமர்பித்தால் முந்தைய ஆண்டின் முடிவில்  கணக்கில் உள்ள தொகையில் 50%  ஒரு ஆண்டுக்கு ஒரு முறை என்று 5 முறை  வரை வித்ராயல் எடுத்து கொள்ளலாம். 

இத்திட்டத்தில் வாரிசு கிடையாது. கணக்கினை வேறு ஆபிஸிற்கு மாற்ற Address proof கொடுத்தால் இலவசம். இல்லையென்றால் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். டூப்ளிகேட் பாஸ் புக் வாங்க போஸ்ட்மாஸ்டரிடம்  ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

Wednesday, September 25, 2019

CAT chennai passed interim order ......

இன்று CAT chennai GDS போஸ்டுகளில் ஏற்கனவே வேலை பார்த்து வந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட அனைத்து  அவுட்சைடர்களையும் மீண்டும் தற்காலிகமாக வேலைக்கு எடுக்க சொல்லி உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து இதற்காக உழைத்த பெரியவர் கலங்கரைவிளக்கு மாலிக் சாருக்கும் சிறப்பாக வாதாடிய வக்கீல் மலைச்சாமி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.👏🙏

Tuesday, September 24, 2019

ஊழியர்களின் உண்மையான  பிரச்சனைகளைBJP union எழுப்பியதும்  முடக்க பார்த்ததை டைரக்ரேட் உடைத்துள்ளது.

இனிமேலாவது ஊழியர்கள் பிரச்சனைகளை தீர்க்க முன்வருவார்கள் என்று நம்புகிறோம்.


Thursday, September 19, 2019

*CHILDREN EDUCATION FACILITATION ALLOWANCE (CEFA) FOR GDS*

*கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் GDS  ஊழியர்களுக்கு குழந்தைகள் கல்வி செலவுகளுக்காக CHILDREN EDUCATION FACILITATION ALLOWANCE திட்டம்   அமல்படுத்தப்பட்டுள்ளது.*

*CHILDREN EDUCATION FACILITATION ALLOWANCE ஆனது GDSஊழியர்களின்  இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இரண்டாவது குழந்தை இரட்டை அல்லது பல குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் அந்த குழந்தைகளுக்கும் CHILDREN EDUCATION FACILITATION ALLOWANCE வழங்கப்படும்.*

*CHILDREN EDUCATION FACILITATION ALLOWANCE ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டொன்றுக்கு ரூ 6000 ஆகும்.இது நிர்ணயிக்கப்பட்ட தொகையாகும்.* 

*நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட குறைவாகவோ அதிகமாகவோ குழந்தைகளின் கல்விக்கு செலவு செய்து இருப்பினும் குழந்தை ஒன்றுக்கு ரூ6000 மட்டுமே வழங்கப்படும்.*

*CHILDREN EDUCATION FACILITATION ALLOWANCE பெறுவதற்கு குழந்தைகள் முந்தைய  கல்வி ஆண்டில் படித்த பள்ளி அல்லது கல்வி நிறுவன தலைவரிடமிருந்து பெறப்படும் சான்றிதழ் போதுமானது . மேற்கண்ட சான்றிதழ் குழந்தைகள் முந்தைய கல்வி ஆண்டில் பள்ளி அல்லது கல்வி நிறுவனத்தில் படித்ததை உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.

மேற்கண்ட சான்றிதழ் பெற முடியாவிட்டாலும் குழந்தைகளின் ரிப்போர்ட் கார்டு அல்லது பணம் செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றை சுய ஒப்பமிட்டு சமர்பித்து CHILDREN EDUCATION FACILITATION ALLOWANCE பெற்றுக் கொள்ளலாம்.*

*கல்வி ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்கள் கொண்டதாக இருக்க வேண்டும் . CEFA பெற  ஒரே விண்ணப்பத்தில் இரண்டு குழந்தைகளுக்கும் விண்ணப்பித்தால் போதுமானது. இரண்டாவது குழந்தை இரட்டை குழந்தைகள் அல்லது  பல குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் வரையறுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து இணைக்க வேண்டும்.*

*GDS ஊழியர்களின் கணவன் அல்லது மனைவி  அரசு ஊழியராக இருப்பின் யாரேனும் ஒருவர் மட்டுமே CHILDREN EDUCATION FACILITATION ALLOWANCE*
*பெற விண்ணப்பிக்க முடியும். ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு நிதியாண்டில் முடிவிலும் CEFA பெற விண்ணப்பிக்கலாம்.*

*GDS ஊழியர்களின் குழந்தைகள்  ஒரு குறிப்பிட்ட வகுப்பில் தோல்வியடைந்தாலும் CEFA நிறுத்தப்படுதல் கூடாது.*

*CHILDREN EDUCATION FACILITATION ALLOWANCE தொகை பெறுவதற்கு GDS ஊழியர்களின் குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி/ கல்வி நிறுவனங்களில் படித்திருக்க  வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம்/பள்ளி என்பது அரசுப்பள்ளிகளாகவோ மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவி பெறும் பள்ளிகளாகவோ பள்ளிகள் இடம்பெற்றிருக்கும் இடங்களுக்கான  கல்வி அங்கீகார ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளாகவோ இருக்க வேண்டும்.*

*அஞ்சல் மற்றும் தொலைதூரக் கல்வி பயிலும் GDSஊழியர்களின் குழந்தைகளுக்கும் CEFA தொகை வழங்கப்படும். ஆனால் இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ள மற்ற நிபந்தனையின் அடிப்படையில்  வழங்கப்படும்.*

*GDS  ஊழியர்கள் பணியில் இருக்கும் போது இறக்க நேரிட்டால் அவர்களின் குழந்தைகளுக்கான CEFA வழங்கப்படும். ஆனால் சில நிபந்தனைகளின் அடிப்படையில் அது வழங்கப்படும்.*

*இறந்த GDS ஊழியரின் கணவன் அல்லது மனைவி GDS ஊழியராகவோ அல்லது மத்திய ,மாநில அரசுப் பணிகளிலோ மத்திய மாநில தொடர்புடைய அரசு பணிகளிலோ,உள்ளாட்சி பதவிகளிலோ இருக்க கூடாது. GDS ஊழியர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டாலோ  ஓய்வு பெற்றாலோ பணிநீக்கம் செய்யப்பட்டாலோ அந்தக் கல்வி ஆண்டுக்கான CEFA தொகை வழங்கப்படும்.*

*மழலை வகுப்புகள்(LKG,UKG) முதல் 12-ஆம் வகுப்பு முடிய  GDS ஊழியர்களின் குழந்தைகளுக்கு CEFA தொகை வழங்கப்படும். குழந்தைகளின் 20 வயது அல்லது பன்னிரண்டாம் வகுப்பு இதில் எது  முதலில் வருகிறதோ அதுவரையில் CEFA வழங்கப்படும்.*

*GDS ஊழியர்கள் PUTOFF DUTY , விடுப்பு ஆகியவற்றில் இருந்தாலும் CEFA தொகை வழங்கப்படும்.*

*சேவை காலமாக கருதப்படாத காலங்கள் இருப்பின் அந்த காலங்களுக்கு CEFA வழங்கப்படாது.*

*GDS ஊழியர்களின் குழந்தைகள் பத்தாம் வகுப்புக்கு பிறகு 2 ஆண்டு படிக்கக்கூடிய டிப்ளமோ/ ஐடிஐ /சான்றிதழ் படிப்புகளுக்கும் CEFA  தொகை வழங்கப்படும். ஆனால் பட்டய/சான்றிதழ் படிப்புகளுக்கு பிறகு மீண்டும் 11ஆம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு படிப்பவர்களுக்கு CEFA வழங்கப்படாது.*

*CEFA திட்டம் 01.10.2019 முதல் அமலுக்கு வருகிறது. இந்த நிதியாண்டில் மட்டும் ஒரு குழந்தைக்கு ரூ 3 ஆயிரம் என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட CEFA தொகை வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல்  குழந்தை ஓன்றுக்கு ரூ 6000 என்ற அடிப்படையிலேயே CEFA வழங்கப்படும்.*


*நன்றி- விஜய்.*
****
For more details – go through the Office Memorandum dated 18-09-2019












Wednesday, September 18, 2019

Gds to PA exam proposed age limit UR-35, OBC-38, SC/ST- 40 in draft Recruitment Rules...

GDS ஊழியர்களில் UR-35, OBC - 38, SC/ST-40 வயது வரை உள்ளவர்கள் இனி PA தேர்வு எழுதலாம் என்ற Recruitment Rules. விரைவில் வர உள்ளது.💐

புதிய விதிபடி இனிவரும் காலங்களில் 
SBCO மற்றும் மற்றும் CO/RO-க்கு என தனியாக PA பணியிடங்கள் நிரப்பபடாது.. SBCO & CO/RO-க்கான PA பணியிடங்கள் postal division மற்றும் RMS division உடன் சேர்க்கப்படும்..

MTS to Postman தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் Postman to PA தேர்வு எழுதும் போது அவர்கள் MTS ஆக பணி புரிந்த காலத்தையும் சேர்த்து 5 வருடங்கள் இருந்தாலே LGO TO PA தேர்வு எழுத புதிய விதி அனுமதி அளிக்கிறது..



Monday, September 16, 2019

கமலேஷ்சந்திரா கமிட்டியின் புதிய சம்பள விகிதமான  ரூ.10,000/-, ரூ.12,000/-, சம்பளம் உள்ள post-களில் பணிபுரியும் outsider/ substitute ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரியர்ஸ் தொகை விரைந்து கிடைத்திட தொழிற்சங்க தலைவர்கள் மீண்டும் வலியறுத்த வேண்டுகிறோம். ஏற்கனவே நடராஜ மூர்த்தி கமிட்டியில் அரியர்ஸ் தொகை வழங்கிய standing order விபரம் கீழே உள்ளது.

Ref :No.6-1/2009-PE.I, Dated : 30-05-2012
GOVERNMENT OF INDIA 
MINISTRY OF COMMUNICATIONS & IT 
DEPARTMENT OF POSTS 
(ESTABLISHMENT DIVISION) 
Dak Bhawan, 
Parliament Street 

No.6-1/2009-PE.I Dated : 30-05-2012

All Chief Postmasters General 
All Postmasters General

Sub:- Payment of arrears to the substitutes of Gramin Dak Sevaks who worked in leave vacancies from 01-01-2006 to 09-10-2009.

Consequent upon the implementation of One Man Committee recommendations, the matter regarding payment of arrears to the substitutes of Gramin Dak Sevaks who worked in leave vacancies from 01-01-2006 
has been reviewed.

2. It has now been decided that the arrears of allowances of the substitutes of Gamin Dak Sevaks who worked in leave vacancies from 01-01-2006 to 09-10-2009 may be paid on the basis of minimum of TRCA.

3. The amount of arrears admissible as per extent rules may be paid to the genuine substitute. There should not be any double payment. Before making payment, the DDo or paying authority should take very precaution in this regard.

4. Necessary provision in budget should be made at appropriate stage and availability of funds will have to be ensured before incurring the proposed expenditure.

. The actual expenditure incurred may be informed to this office immediately after payment of arrears.

6. This issues with the concurrence of Internal Finance Advice (Postal) vide their Dy. No.150/FA/12/CS dated 30-05-2012.

Sd.x.x.x
(SURENDER KUMAR)
Asst. Director General (Establishment)

Copy to :-
(1)   Director, RAK NPA, Ghaziabad.
(2)   All Postal Accounts Office
(3)   All Directors, Postal Training Centres
(4)   All Recognized Unions/Associations/Federations
(5)   Guard File.

//copy//


//copy/




Implementation of the recommendation of GDS Committee for restricting the number of cases under Rule 10 and other disciplinary cases.








Sunday, September 15, 2019

GDS to PA, LGO தேர்வு எழுதும் அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!   நீங்கள் அனைவருமே தேர்வில் வெற்றி பெற்று PA ஆக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். குறிப்பாக GDS தோழர்களே! நீங்கள் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்றாலே  எதாவது ஒரு காலியிடத்தில் PAஆக வந்துவிடலாம். அவ்வளவு இடங்கள் உள்ளது. வென்று காட்டுங்கள். இன்று உங்களுடைய நாளாக இருக்க வாழ்த்துக்கள்.ஆல் தி பெஸ்ட் 👍