Sunday, February 28, 2021

GDS :: Regarding enhancement of limit of withdrawal ...reg

 

GDS :: Regarding enhancement of limit of withdrawal at GDS Branch Post Offices without obtaining sanction / approval from Account Office ....

AEPS, DBTஅரசின் மானியங்கள், நூறு நாள் வேலை,கொரானா நிவாரணம், தேயிலை தோட்ட தொழிலாளர் நல வாரிய தொகைகளை பலர் சேமித்து ஒன்றாக எடுக்கும் போது நிறைய பணம் B.O-க்கு தேவைப்படுவதால் தற்போது SB அக்கவுண்டில் B.O-விலேயே  வித்ட்ராயல் எடுக்க உள்ள  உச்சவரம்பு  ரூ.5000/- வரை என்பது ரூ.20,000/- வரை என்று மாற்றப்படுகிறது.

எனவே S.Oஅனுமதி இன்றி இன்று முதல் BPM-களே இனி ரூ.20,000/- வரை தங்களது B.O-வில் வித்ட்ராயல் SB அக்கவுண்ட் க்கு மட்டும் கொடுக்கலாம் என்று டைரக்ரேட் உத்தரவிட்டுள்ளது.

 

Wednesday, February 17, 2021

 

GDS :: Criteria for determining the candidature of a GDS candidate when examination is conducted for multiple years ......

Gds ஊழியர்கள் வெவ்வேறு டிவிசனில் டிரான்ஸ்பர் காரணமாக பணியாற்றும் போது  ஒரே ஆண்டில் ஒரே நேரத்தில் பல ஆண்டுகளுக்கான தேர்வுகள் நடந்தால் அவர்களை எந்த ஆண்டில் ,எந்த டிவிசனில் நிரப்புவது தொடர்பாக டைரக்ரேட் நடைமுறையை தெரிவித்துள்ளது.

உதாரணமாக...
GDS ஊழியர் ஒருவர் "A" என்ற டிவிசனில் 2019  ஆண்டில் பணியாற்றிவிட்டு 1-12-2020 அன்று   வேறு "B" என்ற டிவிசனுக்கு பணியிடமாற்றத்தில் சென்று விடுகிறார். அப்படி இருக்க ஜனவரி 2021 ஆண்டில் 2019, 2020, 2021 ஆண்டுக்கான MTS,postman,PA தேர்வுகளுக்காக அறிவிப்பு வந்தால் ஜனவரி 1-ந்தேதி என்ற சர்வீஸ் தகுதி அடிப்படையில்  2019 ,2020 ஆண்டுகளுக்கான MTS, postman, PA/SA தேர்வுகளுக்காக "A" என்ற டிவிசனிலும், 2021 ஆண்டிற்கான தேர்விற்கு  தற்போதைய "B" டிவிசனிலும் அவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று டைரக்ரேட் கூறியுள்ளது.

 


 DoP issued Clarification regarding -Computing of  marks for engagement as GDS in light of the Grading System Introduced by the CBSE.