Friday, August 25, 2017


அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள்      சங்கம் GDS தமிழ் மாநிலம்.
 தோழர்களே!!! வணக்கம்.
        உறுப்பினர் சேர்ப்பு நடைபெற்று வருவது வரும் 05.09.2017 கடைசிநாள். கோட்ட / கிளைச்  செயலர்கள் தங்கள் தோழர்களுடன் நமது GDS தோழர்களை அனுகி தனியாக போராடி இன்றுவரை மத்திய அரசிடம் கோரிக்கைகள் வென்றவர் எவரும் இல்லை என்பதை தெரியப்படுத்தவும். ஏன் 38 லட்சம் அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் செயலாளர்களின் முன் (7 வது ஊதியக்குழு) உள்துறை அமைச்சர் உள்ளிட்ட 3 அமைச்சர்கள் தொலைக்காட்சி முன் ஏற்றுக்கொண்ட குறைத்தபட்ச ஊதியம் ரூ.26,000/- மற்றும் அலவன்ஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்ததை சிரிதும்  பரிசீலனை செய்யாமல் குறைத்தபட்ச ஊதியம் ரூ.18,000/- என்பதை ஆணையாக வெளியிட்ட இந்த அரசை நம்பலாமா ? அதே போல் விவசாயிகள் மாதக்கணக்கில் போராடிவரும் அவர்களை கொச்சை படுத்தி இன்று வரை அரசு திரும்பி பார்க்காத சூழல், ஆகவே  வேலை நிறுத்தமாக இருக்கட்டும் அல்லது வேறு இயக்கங்களாகட்டும் விவேகத்துடன் ஊழியர்களை பங்கெடுக்க செய்திட வேண்டும்.

   அது தான் சிறந்த தொழிற்சங்க வழிகாட்டுதலாகும். கடந்த கால BJP  ஆட்சியில் நாம் இழந்ததை நினைவில் கொண்டு நாம் போராட்ட வியூகம் அமைத்திட வேண்டும். மேலும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்யும் இவ் அரசிடம் நாம் அனைத்து அஞ்சல் துறை ஊழியர்களை ஒன்று திரட்டி நம்முடைய இயக்கத்தை நடத்திட வேண்டும், இல்லையேல் நாம் இழப்பது நிச்சயமாகிவிடும் அது மட்டுமில்லாது வரும் காலங்களில் இவ் அரசிடம் கோரிக்கை வெல்வது கனவாகிவிடும். ஆகவே தோழர்களிடம் தக்க விளக்கம் அளித்து அதிக ஊழியர்களை நமது NFPE சம்மேளனத்தின் கீழ் உள்ள AIPEU -GDS சங்கத்தில் உறுப்பினராக்கிடுவோம். நாம் ஒன்றிணைத்து போராட இணைவோம் AIPEU - GDS சங்கத்தில்.

No comments:

Post a Comment