Monday, January 27, 2014

ABOUT STRIKE


MONDAY, JANUARY 27, 2014

TN JCA CALL ON 48 HOURS STRIKE - DEMONSTRATIONS IN FRONT OF ALL H.O.S ON 28.01.2014- SERVING STRIKE NOTICE COPY

JCA
NFPE - FNPO

அன்பார்ந்த  தமிழக NFPE மற்றும் FNPO சம்மேளனங்களின்  உறுப்பு மாநில/ மண்டல/ கோட்ட/ கிளை நிர்வாகிகளே ! உங்கள் அனைவருக்கும் வேலைநிறுத்த போராட்ட வீர வணக்கங்கள்  !

 கடந்த17.01.2014 அன்று தமிழக JCA வில் எடுக்கப் பட்ட ஒருமித்த  முடிவின் அடிப்படையில் , மத்திய அரசு ஊழியர்களின் அறிவிக்கப் பட்ட பிப்ரவரி 12, மற்றும் 13, 2014 தேதிகளில்  நடைபெறவுள்ள 48 மணி நேர வேலை நிறுத்தத்தை ஒட்டி , கடந்த 25.01.2014  அன்று   திருச்சி , மதுரை  மற்றும் கோவை  மண்டலங்களில் மாநிலச் செயலர்கள் கலந்துகொண்ட வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டங்கள் சிறப்பாக நடந்தேறியுள்ளது.

CPMG அலுவலகம் முன்பு உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்                 

அதேபோல , நாளை மதியம் 12.30 மணியளவில் சென்னை CPMG அலுவலகம்  முன்பாக  தமிழக JCA சார்பில்  NFPE மற்றும் FNPO மாநிலச் சங்கங்களின் அனைத்து மாநிலச் செயலர்களும் கலந்துகொள்ளும் உணவு இடைவேளை  ஆர்ப்பாட்டமும் ,  தொடர்ந்து வேலை நிறுத்தத்திற்கான NOTICE நகலை CPMG அவர்களிடம் வழங்கிடும் நிகழ்வும் நடைபெற  உள்ளது. 

எனவே சென்னை பெருநகரத்தில் உள்ள  அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும்  NFPE மற்றும் FNPO இயக்கங்களைச் சார்ந்த அஞ்சல், RMS, MMS, GDS பகுதிகளின்  தோழர்களும் தோழியர்களும்  பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டு  இந்த நிகழ்வை  சிறப்பிக்க வேண்டுகிறோம். 

வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்திற்கு வரும் தோழர்களின் எண்ணிக்கையே நிர்வாகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இந்த வேலை நிறுத்தத்தின் வலிமையை  முழுவதும் முன்னோட்டமாக எடுத்துக் காட்டும் . 

எனவே  சென்னை பெருநகரத்தின் கோட்ட / கிளைகளின்  செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் கண்டிப்பாக தங்கள் பகுதியில் இருந்து பெரும் எண்ணிக்கையில் ஊழியர்களை இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள செய்திட வேண்டுகிறோம்.

தமிழகத்தின் அனைத்து தலைமை 
அஞ்சலக வாயில்களிலும் ஆர்ப்பாட்டம் 

அதேபோல , சென்னை பெருநகர் தவிர  தமிழகத்தின் அனைத்து தலைமை அஞ்சலகங்களின் வாயிலிலும் நாளை உணவு இடைவேளை ஆர்ப்பாட்டமோ  அல்லது மாலை வேளையில்  கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ர்ப்பட்டங்களோ கண்டிப்பாக JCA சார்பில் நடத்திட வேண்டும்.  ஆங்காங்கு உள்ள பொறுப்பாளர்கள் எந்தவித குழு மனப்பான்மையும் இன்றி  இந்த ஒற்றுமையை  கட்டிட வேண்டும்.

மேலும் பத்திரிக்கைகளுக்கும் , தொலைக் காட்சிகளுக்கும் உங்கள் போராட்ட செய்தியை  அறிவித்திட வேண்டுகிறோம். அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும்  அனைத்து உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கைகள் தவறாமல்  வெளியிடப்பட வேண்டுகிறோம்.

 'எனக்கு தெரியாது' என்று எவரும் தயவு செய்து சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். ஏற்கனவே சுவரொட்டிகள் அனுப்பப் பட்டுள்ளன. வலைத்தளங்களில்  செய்திகள் பிரசுரிக்கப் பட்டுள்ளன. அந்தந்தப் பகுதிகளில் சுற்றறிக்கைகள் அனுப்பப் பட்டுள்ளன.  பொறுப்பாளர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப் பட்டுள்ளன. எனவே  தொழிற்சங்க உணர்வுள்ள ஒவ்வொரு நிர்வாகியின் கடமை இந்தப் போராட்டத்தை வலிமையுறச் செய்வது ஆகும்.

இந்தப் போராட்டத்தை  ஒற்றுமையாக , வெற்றிகரமாக நடத்திடச் செய்வது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை ஆகும். 
                                        
50%  சத பஞ்சப்படி  இணைப்பை  வெல்வோம் !
                                                                                                     
இடைக்கால நிவாரணம் நிச்சயம் நாம் பெறுவோம் !
                                                                                                                     
GDS ஊழியர்களை ஊதியக் குழு வரம்புக்குள் 
நிச்சயம் கொண்டு வருவோம் !
                                                                                                              
GDS ஊழியருக்கு அரசு ஊழியருக்கு இணையான தகுதி பெறுவோம் !
                                                                                                                                                
5 கட்ட பதவி உயர்வு நிச்சயம் பெறுவோம் !
                                                                                                            
1.1.2004 க்குப்  பின்னர் பணியில் சேர்ந்தவருக்கும் முந்தைய ஒய்வூதியமே 
நிச்சயம் பெறுவோம் !
                                                                                                                                                   
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்றம் பெறுவோம் !
                                                                                                                                           
மத்திய அரசு ஊழியர்களுக்கு தடைகளற்ற, பணம் செலுத்தாத 
நேரடி மருத்துவம்  பெறுவோம் !
                                                                                                                                                        
அனைத்து காலியிடங்களையும் உடன் நிரப்பிடச் செய்வோம் ! தேவைக் கேற்ற புதிய பதவிகளை உருவாக்கிடப் பெறுவோம் !.
                                                                                                                                               
பணியில் இறந்துபோன ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பதவி நியமனம் முழுமையாகப் பெறுவோம் !
                                                                                                                                                 
ஆட்குறைப்பு, ஒப்பந்த அடிப்படையில் பணியாட்களை நியமனம் செய்வது ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்கப் பெறுவோம் !
                                                                                                                                  
வேலை நிறுத்தம் செய்திடும் உரிமையை சட்டமாக்குவோம் !
                                                                                                                                                
நடுவர் மன்றத் தீர்ப்புகளை அமலாக்குவோம் !
                                                                                                                           
OTA, NIGHT DUTY ALLOWANCE, CLOTHING RATES உயர்த்திப் பெறுவோம் !
                                                                                                                                                                
தொழிற்சங்கத்தினரை பழி வாங்கும் நடவடிக்கைகளை 
தடுத்து நிறுத்திடுவோம் !  

இவையெல்லாம் பெறவேண்டுமா ? ஒன்று பட்டு போராடினால் மட்டுமே  இவையெல்லாம் சாத்தியம் .
தேர்தல் தேதி அறிவித்தபின் அரசு ஊழியர்களுக்கு எந்தவித  அறிவித்திட இயலாது என்பது உங்களுக்குத் தெரியுமா ?
அப்படியானால்  அதற்கு முன்னர் நாம்  ஒன்று பட்டு 
நம் கோரிக்கைகளை அரசின் செவிகளுக்கு கொண்டு 
சென்றிட வேண்டும்  அல்லவா ?
அதற்கு  மத்திய அரசு ஊழியர் அனைவரும் திரண்டெழுந்து போராடும் போது , அதன் முக்கிய பகுதியான நம் அஞ்சல் துறையில் 
போராட்டம் தீவிரப் படுத்தப் படவேண்டுமல்லவா ?

கிளர்ந்தெழுங்கள் தோழர்களே ! போராட்ட வீச்சினை அடிமட்டம் வரை கொண்டு செல்லுங்கள் ! இது உங்கள் கைகளில் தான் இருக்கிறது ! இன்றில்லையேல்  என்றுமே இல்லை ! தேர்தல் வந்துவிட்டால் எதுவுமே இல்லை ! 

ஒன்று படுவோம் ! போராடுவோம் ! போராடுவோம் ! 
வெற்றி பெறுவோம் ! வெற்றி கிட்டும் வரை போராடுவோம் ! 
இறுதி வெற்றி நமதே !

போராட்ட வாழ்த்துக்களுடன் 

J. இராமமூர்த்தி                                                                          G.P. முத்துக்கிருஷ்ணன் 
கன்வீனர் , NFPE இணைப்புக் குழு .              கன்வீனர், FNPO இணைப்புக் குழு ,
                                                                 JCA, தமிழ் மாநிலம்                                                     

No comments:

Post a Comment