Friday, October 5, 2018

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
II PHASE  HUNGER FAST PROGRAMME HELD AT THE PREMISES OF O/O CPMG,TN ON 4.10.2018 IN SUPPORT OF GDS DEMANDS  IS A GRAND SUCCESS !
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
04.10.2018 உண்ணாவிரதப்
போராட்டம் மாபெரும் வெற்றி !
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நேற்று (4.10.2018) காலை 10.00 மணி தொடங்கி சென்னை CPMG அலுவலக வளாகத்தில் இரண்டாம் கட்டமாக தமிழக JCA(NFPE/FNPO) சார்பில் GDS ஊழியர்களின் ஊதியக்குழு தொடர்பான 16 அம்சக் கோரிக்கைகளை நிறை வேற்றிடக் கோரி முழு நாள் உண்ணாவிரதப் போராட்டம் வெகு சிறப்பாகநடைபெற்றது.

இந்த போராட்டத்தில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டதும், குறிப்பாக திருவண்ணாமலை, பாண்டிச்சேரி, தாம்பரம் கோட்டங்களிலிருந்து பெரும் எண்ணிக்கையில் GDS ஊழியர்கள் இந்தப்போராட்டத்தில் கலந்து கொண்டதும் வெகு சிறப்பு ஆகும்.

இந்தப்போராட்டம் AIPEU GDS சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர்.S. ராமராஜ், NUGDS சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர். ஹரிகரன் ஆகியோர் கூட்டுத் தலைமையில், AIPEU GDS மாநிலச் செயலரும் அகில இந்திய துணைப் பொதுச் செயலருமான தோழர் தனராஜ், NUGDS சங்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர். முனுசாமி ஆகியோர் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

NFPE COC கன்வீனர் தோழர் R.B.சுரேஷ் துவக்க உரையாற்றினார். மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலர் தோழர். துரை பாண்டியன், NFTE யின் சம்மேளன உதவித்தலைவரும் சென்னை தொலைபேசி வட்டத்தின் மாநிலச் செயலருமான தோழர். C.K. மதிவாணன்
ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

NFPE சம்மேளன உதவி மாபொதுச் செயலர் தோழர். S. இரகுபதி, FNPO அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். N.J.உதயகுமரன், FNPO COC கன்வீனர் தோழர். P  குமார்,  NFPE  அஞ்சல் மூன்றின் அகில இந்திய உதவிப் பொதுச் செயலர் தோழர் A. வீரமணி, அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர். G. கண்ணன் , கேசுவல் ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தோழர். சிவகுருநாதன்,NFPE அஞ்சல் மூன்றின் மாநில மகிளா கமிட்டி கன்வீனர் தோழர். ஏஞ்சல் சத்தியநாதன், செயல் தலைவர் தோழர். மணிமேகலை உள்ளிட்ட NFPE/FNPO சம்மேளனங்களின் பல்வேறு உறுப்புச் சங்கங்களின் மாநிலச் சங்க நிர்வாகிகள், பல்வேறு கோட்ட/ கிளைச் செயலர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றி சிறப்பித்தனர்.

இறுதியாக NFPE அஞ்சல் மூன்றின் அகில இந்தியத் தலைவரும் தமிழ் மாநிலச் செயலருமான தோழர் J.இராமமூர்த்தி உண்ணாவிரதத்தை முடித்துவைத்து சிறப்புரையாற்றினார்.

கொட்டும் மழையிலும் கலைந்து செல்லாமல் உண்ணாவிரத்தில் முழுமையாக தலைவர்களும் ஊழியர்களும் ஈடுபட்டது  ஊழியர்களின் மன உறுதிக்கு எடுத்துக்காட்டு ஆகும்.

இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில உங்களின் பார்வைக்கு கீழே பதியப்பட்டுள்ளது.













2 comments: