Wednesday, October 3, 2018

தோழர்களே! 1-1-2006-க்கு முன்பு  பணியில் சேர்ந்து 1-1-2006  ல் postman to PA  ஆனவங்களுக்கு அவர்களது முந்தைய இலாகா சர்வீஸில் பாதி வருடங்களுக்கு இன்கிரிமெண்ட் கொடுத்து  1.86 factor-ல் பெருக்கி தான்,புதிய சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் , வெளியிலிருந்து புதிதாக PA ஆனவர்களை விட  குறைவாகவே  சம்பளம் நிர்ணயித்திருந்தனர். 

அதே மாதிரி தான் PA to IPO ஆனவர்களுக்கு வெளியிலிருந்து புதிதாக IPO ஆனவர்களை விட  குறைவாகவே  சம்பளம் நிர்ணயித்திருந்தனர். இந்த சம்பள வித்தியாசத்தை சரி செய்து அதற்குரிய புதிய சம்பளம் நிர்ணயிக்க  பல வருட போராட்டத்திற்கு பின், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. எனவே தான் நிதி அமைச்சகம் போன வாரம்  ஆர்டர் வெளியிட்டது. தற்போது நமது இலாகாவும் ஆர்டர் போட்டுள்ளது.  ஒவ்வொருவருக்கும் சர்வீஸை பொறுத்து சம்பள நிர்ணயம் மாறும். எனவே சரியான புதிய சம்பளத்தை கூற இயலாது. மேற்கண்ட தகவலை உங்களது Accounts section la  கேட்டு சரி பார்த்து கொள்ளுங்கள்.



No comments:

Post a Comment