Sunday, September 30, 2018

Good news to Postman, PA,IPO promotives .....

நிறைய GDS,MTS,Postman,PA தோழர்கள்,குறிப்பாக  1-1-2006 -க்கு பிறகு Gds to postman,ஆனவர்கள், Postman/Gds to PA ,ஆனவர்கள்,PA to IPO ஆனவர்களுக்கு  initial fixation 8460,9910,17140 சம்பளம் கொடுக்காமல் 8060 சம்பளம் போஸ்ட்மேன் கேடருக்கும்,அதே போலவே மற்ற பிரமோட்டிவ் கேடருக்கும் குறைவாகவே சம்பளம் நிர்ணயித்து வந்தனர். அதே நேரத்தில் நேரடியாக Postman,PA,IPO ஆக வந்தவர்கள் அதிக சம்பளம் வாங்கி வந்தனர். 

டில்லி CAT Tribunal,சுப்ரீம் கோர்ட் படியேறி பல ஆசிரியர்கள், பிற துறை/ நமது தோழர்கள் என்று போராடி வந்தனர். சுப்ரீம்கோர்ட் தீர்ப்பின் படி இன்றைக்கு நிதி அமைச்சகம் டிபார்மெண்ட் தேர்வு எழுதி 1-1-2006-க்கு பிறகு பிரோமோசனில் வந்தவர்களுக்கு அந்த அந்த (நமது துறையில்,postman, PA, IPO ஆனவர்களுக்கு) கேடருக்கான சம்பளம் எல்லோருக்கும் பொதுவாக நிர்ணயம் செய்ய சொல்லி அனைத்து இலாகாவுக்கும் உத்தரவு இட்டுள்ளது. ஒரிரு வாரத்தில் நமது தபால் இலாகாவும் இது தொடர்பாக ஆணை வெளியிடும். அரியர்ஸ் ரூபாய் 1.5 இலட்சம் வரை கிடைக்கும் தோழர்களே!





No comments:

Post a Comment