Tuesday, September 25, 2018

Department of Posts Postmen &MailGuard Recuritment Rules 2018 "மத்திய அரசிதழில் 20.09.2018 ல் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய தேர்வு விதிமுறைகள் மத்திய அரசிதழில்  வெளியிடப்பட்ட நாளில் இருந்து அமலுக்கு வருகிறது.

POSTMEN  RECRUITMENT RULES
******************
25%  காலியிடங்கள் :-

                               காலிபணியிடங்களுக்கான ஆண்டின்  ஜனவரி மாதம் 1ந்தேதி குறைந்த பட்சம்  6 ஆண்டுகள பணி முடித்த MTS ஊழியர்கள் மூலம்பணிமூப்பு(Senority) அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும்.   நிரப்பபடாத இடங்கள்   GDSஊழியர்களின் போட்டி தேர்வுகளுக்கான இடங்களுடன் சேர்க்கப்படும்.
******************
25% காலியிடங்கள் :-

                                    காலிபணியிடங்களுக்கான ஆண்டின் ஜனவரி மாதம் 1ந்தேதி குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் பணிமுடித்த MTS ஊழியர்கள் மூலம் போட்டித்தேர்வின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும் . இதில் அந்த கோட்டங்களில் பூர்த்தி செய்யபடாத இடங்கள் மாநில அளவில் உள்ள மற்ற அஞ்சல்  கோட்டங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற MTS ஊழியர்கள் மூலம் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும்.
இதன்மூலம் பூர்த்தி செய்யபடாத இடங்கள் மாநிலம் அளவில்  RMS கோட்டங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற MTS ஊழியர்கள் மூலம்  மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும்.
மேற்கண்ட முறைகளிலும் பூர்த்தி செய்யப்படாத இடங்கள் GDS ஊழியர்களின் போட்டி தேர்வுகளுக்கான இடங்களுடன் சேர்க்கப்படும்
******************
50%காலியிடங்கள் :-
                         காலிபணியிடங்களுக்கான ஆண்டின் ஜனவரி மாதம் 1ந்தேதி குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிமுடித்த GDS ஊழியர்கள் மூலம் போட்டி தேர்வின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும். இதில் அந்த கோட்டங்களில் பூர்த்தி செய்யபடாத இடங்கள் மாநில அளவில் உள்ள மற்ற அஞ்சல் கோட்டங்களில் தேர்வு எழுதிய தேர்ச்சி பெற்ற GDS ஊழியர்கள் மூலம் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் பூர்த்தி  செய்யப்படும் . இதன்மூலம் பூர்த்தி செய்யபடாத இடங்கள் மாநில அளவில் RMS கோட்டங்களில் உள்ள தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற GDS ஊழியர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற GDS ஊழியர்கள் மதிப்பெண் தரவரிசை அடிப்படை பூர்த்தி செய்யப்படும். GDS ஊழியர்கள் தேர்வு எழுதுவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 50 (OBC பிரிவிற்கு 3 ஆண்டுகளும் SC/ST பிரிவிற்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.

இதன்பிறகும் பூர்த்தி செய்யபடாத இடங்கள் நேரடி தேர்வு(Direct Recruitment ) முறை மூலம் நிரப்பப்படும்.

MAILGUARD  RECRUITMENT RULES
******************
25%காலியிடங்கள்
                           காலிபணியிடங்களுக்கான ஆண்டின்  ஜனவரி மாதம் 1ந்தேதி குறைந்த பட்சம்  6 ஆண்டுகள் பணி முடித்த MTS ஊழியர்கள் மூலம் பணிமூப்பு (Senority) அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும்.   நிரப்பபடாத இடங்கள்   GDSஊழியர்களின் போட்டி தேர்வுகளுக்கான இடங்களுடன் சேர்க்கப்படும்.
******************
50% காலியிடங்கள் -
                        காலிபணியிடங்களுக்கான ஆண்டின் ஜனவரி மாதம் 1ந்தேதி குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் பணிமுடித்த MTS ஊழியர்கள் மூலம் போட்டித்தேர்வின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும் . சம்பந்தப்பட்ட  RMS கோட்டத்தில் பூர்த்தி செய்யபடாத இடங்கள் மாநில அளவில் உள்ள மற்ற RMS கோட்டங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற MTS ஊழியர்கள் மூலம் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும்.இதன்மூலம் பூர்த்தி செய்யபடாத MAILGUARD  இடங்கள் அஞ்சல் கோட்டங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற  MTS ஊழியர்கள் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும்.
மேற்கண்ட முறைகளிலும் பூர்த்தி செய்யப்படாத MAILGUARD  இடங்கள் GDS ஊழியர்களின் போட்டி தேர்வுகளுக்கான இடங்களுடன் சேர்க்கப்படும்
******************
25%காலியிடங்கள்
                          காலிபணியிடங்களுக்கான ஆண்டின் ஜனவரி மாதம் 1ந்தேதி குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிமுடித்த GDS ஊழியர்கள் மூலம் போட்டி தேர்வின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும். இதில் சம்பந்தப்பட்ட RMS கோட்டத்தில்  பூர்த்தி செய்யபடாத MAILGUARD இடங்கள் மாநில அளவில் உள்ள மற்ற RMS கோட்டங்களில் தேர்வு எழுதிய தேர்ச்சி பெற்ற GDS ஊழியர்கள் மூலம் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும் .
இதன்மூலம் பூர்த்தி செய்யபடாத MAILGUARD  இடங்கள் அஞ்சல் கோட்டங்களில் உள்ள தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற GDS ஊழியர்கள் தரவரிசை அடிப்படை பூர்த்தி செய்யப்படும்.
GDS ஊழியர்கள்  தேர்வு எழுதுவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 50 (OBC பிரிவிற்கு 3 ஆண்டுகளும் SC/ST பிரிவிற்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
******************

இதன்பிறகும் பூர்த்தி செய்யபடாத MAILGUARD  இடங்கள் நேரடி தேர்வு(Direct Recruitment ) முறை மூலம் நிரப்பப்படும்.

நேரடி நேரடி தபால்காரர்& மெயில்கார்டு (Direct Recruitment ) தேர்வுக்கான விதிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

 1.விண்ணப்பதாரர்கள்  விண்ணப்பங்கள் பெறப்படும்  கடைசித்தேதி அன்று 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
(இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகைகள் அளிக்கப்படும்.சில மாநிலங்களுக்கு  யூனியன் பிரதேசங்களுக்கும் வயதுவரம்பு நிர்ணய தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன.)

2. அங்கீகரிக்கப்பட்ட கல்வி  நிறுவனத்தில் (+2) பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


3.விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் மாநில மொழிகளில் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். (மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்மொழி  குறித்து  அஞ்சல் துறை உத்தரவு வெளியிடும். )

4. கணினியில் பணியாற்றும் அறிவு பெற்றிருக்க வேண்டும்.

5.  இருசக்கர வாகன உரிமம் அல்லது இலகுரக வாகன உரிமம்  பெற்றிருக்க வேண்டும். (மாற்றுத்திறனாளிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்)

6.இரண்டு ஆண்டுகள் திருப்திகரமான  பணிகாலம் இருப்பின் பணிநிரந்தர உத்தரவு வழங்கப்படும்.
பணிநிரந்தரம் /பதவி உயர்வு ஆகியவை DPC எனப்படும் DEPARTMENTAL PROMOTION COMMITTE ன் கூட்டத்தில் கலந்து பேசி முடிவு செய்யப்படும். DPC ல் சம்பந்தப்பட்ட கோட்ட தலைமை  அதிகாரி தலைவராக இருப்பார். இரண்டு GROUP B GAZETTED அதிகாரிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

நன்றி. தோழர் விஜய்

No comments:

Post a Comment