Monday, August 27, 2018

1)  பிரதம மந்திரி அவர்களால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஆயுஸ்மான் பாரத் யோஜனா என்ற மருத்துவ காப்பீடு திட்டத்தை GDS ஊழியர்களுக்கும் தரப்பட வேண்டும்.     இத்திட்டப்படி ஒவ்வொரு GDSகுடும்பத்து உறுப்பினர்க்கும், ஒவ்வொரு ஆண்டும் ரூ.5 இலட்சம் வரையிலான  மருத்துவம்,  30 விதமான  நோய்களுக்கு அனைத்து  தனியார் மருத்துவமனையிலும் முன்பணம் கட்டாமல் பார்த்து கொள்ளலாம். இதற்காக ஆண்டிற்கு ரூ.1,000/- கட்ட வேண்டும். அதாவது மாதம் ரூ.85 தான் GDSக்கு செலவு ஆகும்.இதை அவசியம் தரப்பட வேண்டும்.
  
2)  1-1-17, 1-1-18 ஆகிய இரண்டு கட்ட இன்கிரிமென்ட், அதற்குரிய DA சேர்த்தே புதிய சம்பளம் நிர்ணயிக்க வேண்டும்.

 3)    GDS கமிட்டி 4 மணி நேர வேலையை 5 மணி நேரமாக மாற்றி அமைத்து சம்பளம் நிர்ணயிக்க கூறிவிட்டு ஏற்கனவே 4மணி நேர வேலை உள்ள 3660. TRCA ஊதிய விகிதம் உள்ள 32,500 GDS BPMகளுக்கும், ஏற்கனவே 5மணி நேர வேலை உள்ள 4220 ,3635 TRCA ஊதிய விகிதம் உள்ள 82,500 GDSMD/MPகளுக்கும் 5 மணி நேர  புதிய ஊதியமான ரூ.14,500 நிர்ணயிக்கப்படவில்லை.இது மிகப்பெரிய அநியாயம். இ னி GDS MD,MC-களும்  தானே RPLIபிரிமியம், SB,RDடெபாசிட், வித்ட்ராயல், கொடுக்க போகிறார்கள். அதாவது BPMசெய்யும் வேலைகளை செய்ய உள்ளதால்        5 மணி நேர வேலைப்பளு உள்ள GDSMD/MP-களுக்கும் உடனடியாக  ரூ.14,500 தரப்பட வேண்டும்., 

4) MTS-களுக்கு  ஒதுக்கப்பட்டு, நிரப்பபடாமல் உள்ள POSTMAN இடங்கள்  ஏற்கனவே இருந்தது போல்   அதே தேர்வை எழுதிய GDS ஊழியர்களை சர்பிளசாக கொண்டு  மாநில அளவில் மட்டுமே நிரப்பிட வேண்டும். வெளியாருக்கு தரப்படக்கூடாது. 

5) நேரடித்தேர்வுகளில் PH,Ex.service man-களுக்கு   தரப்படும்  ரிலாக்சேசன் சலுகைகளையும் GDS ஊழியர்களுக்கும்   MTS,POSTMAN,PA  தேர்வுகளில்வழங்க ஏதுவாக தேர்வு விதிகளில்  உடனடியாக  மாற்றம் கொண்டு வர வேண்டும். . இவ்வாறு செய்வதால் தேவையில்லாத  காலதாமதம் ,கோர்ட் கேஸ்,இன்றி GDS- க்கு ஒதுக்கப்பட்ட அனைத்து காலியிடங்களும் நிரப்பட்டு பெருமளவில்GDS. ஊழியர்கள் இலாகா ஊழியராவார்கள். 

6) வேகண்ட் இல்லாத டிவிசனை சேர்ந்த GDS- களும் அனைத்து தேர்விலும்  எழுத அனுமதிக்க வேண்டும்.
GDS ஆன்லைன் தேர்வில்  அனைத்து மாநிலத்தை சேர்ந்தவர்களையும்  அனுமதிக்கும் போது  இதை ஏன் அனுமதிக்ககூடாது.?  SSC  தேர்வுகளிலும் இதே நடைமுறைதான்  உள்ளது.

இவையெல்லாம் திருவாரூரில்26-8-18- ல்  நடைபெற்ற NFPE GDSமாநில சங்க கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளோம்.

No comments:

Post a Comment