FINANCE MINISTRY AND DEPT. OF POSTS EXCLUDED PO SAVINGS ACCOUNTS FROM EARLIER ORDERS OF FIN. MIN
இதுவெல்லாம் நிமிடத்திற்கு நிமிடம் வேகமாக நடக்கும் நம் இலாக்காவில் . ஆனால் இரவு பகல் , விடுமுறை நாள் , ஞாயிறு என்று பணி செய்த ஊழியர்களுக்கு வங்கிகள் போல ஒரு நாள் ஊதியம் அல்லது ரூ. 3000/- கேட்டால் தோசைக் கரண்டியை திருப்பி காலில் சூடு வைப்பார்கள் நம் அதிகாரிகள் .
அரசுக்கு கொள்கை ரீதியாக ஆபத்துக் காலத்தில் ராணுவம் போல நம் ஊழியர் பணி செய்யத் தயார் தான் . ஆனால் பட்டை நாமம் குழைத்துப் போட்டு கொத்தடிமையாக வேலை வாங்க நம் அதிகாரிகள் தயாராக இருக்கிறார்களே ? இது தான் இன்றைய தேசம் .
இதுதான் கொடுமை . இதற்கெல்லாம் முடிவு கட்டும் நாள் எந்நாளோ ? தமிழகம் எடுத்துக்காட்டாக ஊழியர் நலன் காக்க தயாராவோம். 22 மாநிலங்களை நாம் எதிர் நோக்க வேண்டாம். மேல் மட்ட அமைப்புகளை நாம் எதிர் நோக்க வேண்டாம் . எப்போதும் போல முன்கை எடுக்க தயாராவீர் தோழர்களே !
No comments:
Post a Comment