ஏன் இந்த குழப்பம் ? இது நாகை கோட்டத்தின் குரல்
தபால்காரர்கள் மற்றும் MTS பதவிகளில் ஏற்படும் காலி பணியிடங்களில் பதிலிகளாக பணி அமர்த்தப்பட்ட GDS ஊழியர்களுக்கு தபால்காரர்/MTS பதவிக்கான குறைந்தபட்ச ஊதியத்தின் அடிப்படையில் அவர்கள் பணியாற்றும் நாட்களுக்கு ஊதியம் மற்றும் பஞ்சப்படி (DA) வழங்கப்பட வேண்டும் என்ற தெளிவான உத்தரவினை அஞ்சல் வாரியம் ஏற்கனவே பிறப்பித்துள்ளது. கடித எண்: 44/64/80/SPB-I/PAP dtd 24.06.1971. இதன்படி 01.01.16 முதல் தபால்காரர்/MTS பதவிகளில் officiate செய்த GDS பதிலிகளுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரைத்த உயர்த்தப்பட்ட குறைந்த பட்ச ஊதியவிகிதத்தில் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
நாகை மற்றும் புதுக்கோட்டை கோட்டங்களில் மேற்கண்ட உத்தரவின்படி உயர் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 01.10.16முதல் உயர்த்தப்பட்ட ஊதிய விகிதத்தில் சம்பளம் வழங்குவதை தடை செய்தும் பழைய ஊதிய விகிதத்திலேயே சம்பளம் வழங்க வேண்டும் என்றும் மத்திய மண்டல அலுவலகத்தின் அறிவுறுத்தலின் பேரில் கோட்ட நிர்வாகம் தலைமை அஞ்சல்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அறிகின்றோம்.
அஞ்சல் வாரியம் தெளிவான உத்தரவினை பிறப்பித்துள்ள போதும், ஏன் இந்த குழப்பம்? அறியாமையினால் ஏற்ப்பட்ட இந்த குழப்பம் தெளிந்து தடை ஆணை விரைவில் நீக்கப்படும் என்று நம்புகின்றோம்.
வாழ்த்துக்களுடன் !
S.மீனாட்சிசுந்தரம் K.ராமலிங்கம்
கோட்டசெயலர்-P3 கிளைசெயலர்-P3
No comments:
Post a Comment