Saturday, February 14, 2015

புற்றுநோய் செல்களை அழிக்கும் கிரீன் டீ

புற்றுநோய் செல்களை அழிக்கும் கிரீன் டீ

There are 6 kinds of green tea palipinalkal. Scientists say that destroys cancer cells in the body, which valaravitamal. Drinking tea is refreshing to several hundred

கிரீன் டீயில் 6 விதமான பாலிபீனால்கள் உள்ளன. இவை உடலில் புற்றுநோய் செல்கள் வளரவிடாமல் அழிக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். புத்துணர்ச்சிக்காக தேநீர் பருகுவது என்பது பல நூறு ஆண்டுகளாக இருந்து வரும் பழக்கம். தேநீரில் பல வகை காணப்பட்டாலும் அனைவராலும் விரும்பப்படுவது க்ரீன் டீ, ஊலாங் டீ, பிளாக் டீ ஆகிய 3 வகைகளாகும். இவைகள் மனித உடலுக்கு புத்துணர்ச்சி தருவது மட்டுமில்லாமல் மனித உயிர்களை காக்கும் மருந்தாகவும் உள்ளன. 

கிரீன் டீ செய்யும் அற்புதங்கள் அனைத்தும் அறிவியல் முறைப்படி ஆராய்ந்து விஞ்ஞானிகளால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. க்ரீன் டீ கேமிலியாசைனன்ஸிஸ் எனப்படும் தாவரத்தின் இலைகளில் இருந்து பெறப்படுகிறது. க்ரீன் டீ.,யில் 6 விதமான பாலிபீனால்கள் உள்ளன. அவை: எபிகேட்சின், கேலோகேட்சின், கேட்சின், எபிகேட்சின் கேலட், எபிகேட்சின்கேலோகேட்சின், எபிகேலோகேட்சின். மேலும் கேபின், தியோபுரோமின், தியாபிலின் போன்ற ஆல்கலாய்டுகளும் உள்ளன.

விஞ்ஞானிகளின் சில பரிந்துரைகள் : க்ரீன் டீயில் அதிகமாக காணப்படும் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் வயது முதிர்வை தாமதப்படுத்தி இளமையையும் ஆரோக்கியத்தையும் நீடிக்க செய்கிறது. உடலில் காணப்படும் தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடல் எடையை சமச்சீராக பராமரிக்கிறது. கிரீன் டீயில் உள்ள எபிகேலோ கேட்சின் மூளையின் செயல்திறனை அதிகரித்து நினைவாற்றலை பெருக்குகிறது. கிரீன் டீயில் உள்ள பாலிபீனால்கள் புற்றுநோய் செல்கள் வளரவிடாமல் அழிக்கிறது. 

தீங்கிழைக்கும் என்சைம்களின் வளர்ச்சியை தடுத்து ரத்தப்புற்று, நுரையீரல் புற்று, தொண்டை புற்று, வயிறு, குடல், ஈரல் புற்று மற்றும் மார்பக புற்று போன்றவற்றின் தீவிரத்தை குறைக்கிறது. கிரீன் டீயில் உள்ள தியோபிளவின்கள் ரத்தத்தில் இன்சுலினை அதிகரித்து குளுகோஸ் வினையை ஊக்கப்படுத்துகிறது. முகப்பரு, வறண்ட சருமம், சரும அலர்ஜி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணம் தருகிறது. ரத்த அழுத்தம், பக்கவாதம், அல்சைமர் போன்றவற்றை தவிர்க்கிறது. எலும்புகள் பலமடையவும் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கவும் செய்கிறது. கிரீன் டீயில் உள்ள பாலிபீனால்கள் மன இறுக்கத்தை போக்கி மூளையில் ஆல்பா அலைகளை தூண்டி மனதுக்கு அமைதியை தருகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

No comments:

Post a Comment